இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
தற்போது பேஸ்புக்கில் ஏராளமானோர் பல்வேறு கருத்துக்களையும்
தெரிவித்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் சர்ச்சைக்குறிய வகையில், பதிவுவேற்றம் செய்து
வருகின்றனர். இதற்கு பதிலுக்கு சமந்தப்பவட்டர்களும் கருத்துக்களை பதிவேற்றம்
செய்வதால், கருத்து மோதல் உருவாகின்றது. இதை பேஸ்புக்கோடு நிறுத்திக் கொள்ளாமல்,
அதை வாழ்கையில் பிரச்னையாக நினைத்து மோதிக் கொள்வதால், பல்வேறு பிரச்னைகள்
ஏற்படுகின்றது.
இந்தவிவகராம் வீடு வரை சென்றதால், ஒரு பெண் தற்கொலை செய்து
கொண்டார். தன் காதலி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த காதலனும் தற்கொலை செய்து
கொண்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சமந்தப்பட்ட நபரை கைது செய்யக் கோரி
சாலை மறியலாக போராட்டம் வெடித்துள்ளது.
பேஸ்புக்
பயன்பாடு :
உலக அளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும்,
டெலிகாம் துறை வளர்ச்சியடைந்துள்ளதாலும், ஏராளமானோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி
வருகின்றர். இதில் முதன்மையாக இருப்பது பேஸ்புக்.
இதை இளைஞர்கள் முதல் பொரியோர் வரை பரவலாக பயன்படுத்தி
வருகின்றனர். உலககத்தில் எந்த மூளையில் நடந்தாலும் உடனடியாக அடுத்த வினாடியே
அனைத்தும் புகைப்படம், வீடியோ, ஆடியோ உள்ளிட்டவைகளையும் பதிவேற்றம் செய்து
வருகின்றர்.
கருத்து மோதல்கள்:
பேஸ்புக்கில் ஒருவர் குறித்தும், ஒரு கருத்தை மையப்படுத்தியும்
பதிவேற்றம் செய்கின்றனர். மற்றொரு தரப்பினரும் இதற்கு மாற்றாக கருத்துகளையம்
பதிவேற்றமும், கருத்து மோதல்களை உருவாக்கி விடுகின்றனர். கருத்து மோதல் பல நல்ல
காரியங்களை உருவாக்குவதாகவும் இருக்கின்றன. சமூகத்தில் மாற்றத்திற்கும் பயன்படும்
விதமாகவும் இருக்கின்றது.
சர்ச்சைக்குரிய
கருத்துக்கள்:
ஒருவர் செய்யாமலும், அவர்கள் மீது வீண் பழி சுப்பது போன்ற
கருத்துக்களையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதனால் மற்றவர்களுக்கு
மனச்சங்கடங்கயையும் ஏற்படுத்துகின்றது. அதற்கு பதிலாக அவர்களும் ஏன் இப்படி
செய்கின்றார்.
நீங்களும்
அப்படிபட்டவர்கள் என்று பதிவிட்டால், இதை கருத்தாக எடுத்துக் கொள்ளாமல் அதை
வாழ்கையில் பெரிய பிரச்னையாக நினைத்து சண்டை போட்டுக் கொள்கின்றனர். இப்படி பட்ட
சம்பவத்தை பின்பு காணலாம்.
காதலர்கள்
தற்கொலையால் மறியல்:
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே முகநூலில் ஆபாச பதிவிட்ட விவகாரத்தில்
காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இதற்கு காரணமான நபரை கைது
செய்யகோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கல்லூரி
மாணவிக்கு ஆபாச வார்த்தை பதிவு :
கடலூர் மாவட்டம் குறவன்குப்பம் பகுதியை சேர்ந்த கல்லூரி
மாணவிக்கு, அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பிரேம்குமார்
என்பவர், முகநூலில் ஆபாச வார்த்தைகளை பதிவு செய்து அனுப்பியதாகவும், இதனைக்
கண்டித்து அந்த மாணவி பதிலுக்கு பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாணவி
தூக்கு போட்டார்:
இந்நிலையில், பிரேம்குமாரின் உறவினர்கள், மாணவியின் வீட்டிற்கு
வந்து பிரச்னை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, முகநூல் பதிவால் மனமுடைந்த
மாணவி நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனமுடைந்த
காதலனும் தற்கொலை:
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அத்தை மகனும், காதலனுமான வடலூர்
பார்வதிபுரத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார், சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி
வைத்தனர்.
முகநூலில் ஆபாசமாக பதிவிட்ட பிரேம்குமாரை போலீசார் தேடி
வருகின்றனர்
. சாலை மறியல்
போராட்டம்:
இந்நிலையில், மாணவியின் உறவினர்கள், பிரேம்குமாரை கைது
செய்யக்கோரி விருத்தாசலம், கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார்
சமாதானப்படுத்த முயன்றும் கலைந்து செல்லாத கிராமமக்களை போலீசார் தடியடி நடத்தி
கலைத்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக