Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 11 ஜூன், 2019

அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில் T_500_1397

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com

சகஸ்ர லட்சுமீஸ்வரர் கோவில் வரலாறு பற்றி பார்ப்போம். திருமால்
தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு லிங்க பூஜை செய்து வந்தார். ஒருமுறை
ஒரு பூ குறைந்தது. எனவே, தன் கண்ணையே ஒரு மலராக்க நினைத்து, அதை எடுக்க
முயன்ற போது, சிவன் அவர் முன் தோன்றி தடுத்தார்.

இதையறிந்த
லட்சுமிக்கும், சிவதரிசனம் பெறும் எண்ணம் ஏற்பட்டது. அகத்தியரின்
ஆலோசனையின் படி, பூலோகம் வந்து, ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை பூஜை
செய்தாள். இவளது பூஜையில் மகிழ்ந்த சிவன் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்தார்.
இதனால் இத்தல இறைவன், சகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆனார். சகஸ்ரம் என்றால்
ஆயிரம்.உத்திரட்டாதி நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய கோவில் சகஸ்ர
லட்சுமீஸ்வரர் கோவில்.

சிறப்பம்சம்:

தேவ
சிற்பி விஸ்வ கர்மா, அகிர்புதன், ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷிகள்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு
தரிசனம் தந்த சகஸ்ர லட்சுமீஸ்வரரை தரிசிக்க உத்திரட்டாதி நட்சத்திரநாளில்
அரூப வடிவில் இத்தலம் வந்து சிவனை ஹோம பூஜை செய்வதாக ஐதீகம்.

உத்திரட்டாதி
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது நட்சத்திர நாளில் இங்கு வந்து ஹோமம்
செய்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்கிறார்கள். இதனால் பணக்கஷ்டம்
நீங்கும், தடைப்பட்ட செயல்பாடுகள் சிறப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை.

பெயர்க் காரணம்:

தீயாகிய
அக்னிபகவானும், அயனாகிய சூரிய பகவானும், இங்கு ஹோமம் செய்து சிவனை வழிபட்ட
தலமாதலால், இவ்வூர் தீயத்தூர் ஆனது. அக்னி வழிபட்ட தலமாதலால், உஷ்ண
சம்பந்தப்பட்ட நோய்கள் தீர சிறப்பு பிரார்த்தனை செய்கிறார்கள்.

கடன்
பிரச்சினை தீரவும், செல்வம் செழிக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும்
இத்தலத்து பிரகன் நாயகி அம்பாளை வழிபடுகின்றனர். சிவனுக்கும், அம்மனுக்கும்
அபிஷேகம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது.

அம்மன்
பெரிய நாயகி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள், பிரகாரத்தில் விநாயகர்,
நந்தி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்ம, நாகர், வள்ளி தெய்வானை சமேத
முருகன், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன்
சன்னதிகள் உள்ள வாஞ்சா கணபதி தனி சன்னதியில் உள்ளார். லட்சுமி பூஜை செய்த
சிவன் என்பதால் இத்தலத்தை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்.

போக்குவரத்து வசதி:

சென்னை
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை அல்லது புதுக்கோட்டை சென்று
பின் அங்கிருந்து இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். புதுக்கோட்டையில்
இருந்து 40 கி.மீ. தூரத்திலுள்ள ஆவுடையார் கோவில் சென்று, அங்கிருந்து
திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ. தூரத்தில் தீயத்தூர் உள்ளது.
மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று அங்கிருந்து திருப்பு வனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூரை அடையலாம்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக