சென்னையில் 108 ஆம்புலன்ஸ்:
சென்னை பெரு நகர
மாநகராட்சியில் ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் 90 அரசு மருத்துவமனைகள் உள்பட 4000
மருத்துவமனைகள் உள்ளன. விபத்து உள்ளிட்ட அவசரகால சிகிச்சைக்காக எப்போது
அழைத்தாலும், அங்கு விரைந்து செல்வதற்கும், அவசர உதவிக்கும் 108 ஆம்புலன்சு தயாராக
உள்ளது.
இந்த ஆம்புலன்ஸ்களை
தமிழக அரசு பொது மக்களுக்கு இலவமாக சிகிச்சை பெற வழி வகை செய்துள்ளது. இதனால்
ஏராளமான மக்களும் பயன்பெறுகின்றனர்.
108
ஆம்புலன்ஸ் செயல்பாடு :
தமிழகத்தில் 2300
அவசரகால உதவியாளர்களையும், 2400 ஓட்டுனர்களையும் கொண்ட 938 ஆம்புலன்சுகள்
பயன்பாட்டில் உள்ள நிலையில் சென்னையில் மட்டும் 45 ஆம்புலன்சுகள்
இயக்கப்படுகின்றன. இந்த 108 ஆம்புலன்சுகள் கடுமையான போக்குவரத்து நெருக்கடியிலும்
நோயாளிகளின் உயிரை தக்க நேரத்தில் காப்பாற்றி வருகின்றது. 108 ஆம்புலன்ஸ்
செயல்பாடுகள் மிகவும் நேர்மையானதாகவும் சிற்பாக செயல்பாட கூடியதாகவும்
இருக்கின்றது.
புதிய தொழில்நுட்பம்:
108 ஆம்புலன்சை
பார்த்தவுடன் பல வாகன ஓட்டிகள் வழி விட்டாலும் சில சிக்னல்களில் போக்குவரத்து
நெரிசலில் சிக்கி ஆம்புலன்சுகள் விரைவாக செல்ல இயலாத நிலை நீடித்து வருவதாக புகார்
எழுந்தது. இதையடுத்து சென்டர் பார் டெவலப்மெண்ட் ஆப் அட்வான்ஸ் கம்யூட்டிங் என்ற
கேரள நிறுவனம் மூலம் புதிய தொழில்நுட்பம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
தானாக சிக்னல் மாறும்:
அதன்படி சாலையில் 108
ஆம்புலன்ஸ் வந்தால் அதில் பொறுத்தப்பட்டிருக்கும் கருவியில் இருந்து கிடைக்கும்
சமிக்ஞையை உணர்ந்து சிக்னலில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி சிக்னல் தானாக பச்சை
நிற விளக்கை எரியசெய்து ஆம்புலன்ஸ் எளிதாக கடந்து செல்ல வழி விடும்.
க்ரீன் சின்ன்ல் தொழில்நுட்பம்:
அதாவது சிக்னலில்
முன்வரிசையில் நிற்கின்ற மற்ற வாகன ஓட்டிகள் விலகினால் ஆம்புலன்ஸ் விரைவாக
குறிப்பிட்ட மருத்துவமனைக்கு செல்ல வழி கிடைக்கும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த 108
கிரீன் சிக்னல் தொழில் நுட்பத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளனர்.
புதிய ஆம்புலன்ஸ் திட்டம்:
சென்னை போக்குவரத்து
காவல்துறையுடன் இணைந்து சுகாதாரத்துறையினர் முதன் முதலில் சென்னை நகரத்தில் உள்ள
சாலைகளில் இந்த 108 கிரீன் சிக்னல் சிஸ்டத்தை செயல்படுத்த உள்ளனர். குறிப்பாக
தாம்பரத்தில் இருந்து ஆலந்தூர் வரையிலான சாலையில் உள்ள சிக்னல்களில் முதற்கட்டமாக
இந்த கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து சென்னை
முழுமைக்கும், தமிழகம் முழுமைக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த
திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக
பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்
குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத
கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்
என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து
பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக