ஸ்மார்ட் போன்கள் நமது வாழ்வில்
ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. அங்கமாக நம்முடனே 24 மணி நேரமும் இருக்கும் இந்த போன்களை
எப்படி பராமரிப்பது என்ற கேள்வியும் சந்தேகம் பலருக்கும் இருக்கும்.
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இன்னும் பலருக்கு ஸ்மார்ட்போன்களை
எல்லாம் நாம் பராமரிக்க வேண்டுமா என்ற கேள்வியும் கூட இருக்கும்.
போன்களை
பராமரிப்பது எப்படி?
ஸ்மார்ட்போன்களும் எந்திரம் சார்ந்த
சாதனங்களே, இவற்றையும் நாம் சரியாகக் கவனிப்புடன் பராமரிக்க வேண்டும். சரியாகப்
பராமரிக்காவிடில் சில நேரங்களில், பல ஆபத்துகள் என்றோ ஒரு நாள் நம்மை தேடி வரும்
என்பதே உண்மை. நம்மையும் நமது போன்களையும் சரியாகப் பராமரிப்பது எப்படி என்று
பார்க்கலாம்.
பேட்டரி & சார்ஜிங்
உங்கள் பேட்டரியை எப்பொழுதும் முழுவதுமாய் சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள், எனவே அவசர நேரத்தில் நீங்கள் வாய்ஸ் காலிங் அல்லது மெசேஜ் அனுப்ப எந்த தடையும் இல்லாமல் இருக்க முடியும். மேலும், எப்போதும் உங்கள் மொபைல் போன் உற்பத்தியாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட உண்மையான பேட்டரிகளை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள். விலை மலிவான போலி பேட்டரியினால் பேர் ஆபத்துகள் நிகழும் எம்பேஜை மறக்கவேண்டாம்.ஸ்மார்ட்போன் பாதுகாப்பு
உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படக்கூடிய தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும், உங்கள் போனை, உங்களுக்கு தெரியாமல் வேறு யாரும் பயன்படுத்துவதைத் தடுக்கவும் மற்றும் தேவையில்லா கட்டணங்களைத் தடுக்கவும் ஸ்மார்ட் லாக், பின் மற்றும் பாஸ்வோர்ட் போன்ற சேவைகளை ஆக்டிவேட் செய்து வைப்பது அவசியம். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து அனைத்து முக்கிய விபரங்களும் உங்கள் போனில் உள்ளதென்பதை நினைவில்கொள்ளுங்கள்.டச் லாக்
உங்கள் போனின் டச் லாக் மற்றும் கீப்பேட் லாக் சேவைகளை எப்பொழுது லாக் செய்து வைப்பது அவசியம். இதனால் உங்கள் போன், உங்கள் ஹேண்ட்பேக் அல்லது சட்டைப் பைகளில் இருக்கும் பொழுது நிகழும் தேவை இல்லாத அழைப்புகள் மற்றும் செயலிகள் டெலீட் ஆவது தடுக்கப்படும்.ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்தல்
உங்கள் போன்களை மென்மையான துணியால் அடிக்கடி சுத்தம் செய்யலாம். தூசிகள் மற்றும் அழுக்குகள் உங்களின் போன்களை பாதிக்கக்கூடும். தண்ணீர், கடுமையான சோப்பு திரவம், சால்வெண்ட் அல்லது கடுமையான இரசாயனங்கள் போன்ற திரவங்களை போனில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.உலர வைப்பதும் அவசியம்
திரவங்கள் மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில், உங்கள் போன் சேதமடையக் கூடும் என்பதனால், உங்கள் போன்களை சில நேரங்களில் உலர வைப்பதும் அவசியம்.மொபைல் போன் கவர்
தேவை இல்லாத கீறல்கள், தூசி மற்றும் அழுக்குகளிலிருந்து உங்கள் போனை பாதுகாத்துக்கொள்ள நல்ல உறுதியான மொபைல் கவர்களை பயணப்படுத்துங்கள். உங்கள் போனை கையிலிருந்து நழுவவிடுவது அல்லது தேவையில்லாமல் வேகமாக அசைப்பது போன்ற செயல்களைத் தவிர்க்கவும். இது உங்கள் போனில் உள்ள மெல்லிய சர்க்கியூட்களை பாதிப்படையச் செய்யும்.உடனடி வெப்பநிலை மாற்றம் கூடாது
உங்கள் போனிற்கு ஏற்படும் உடனடியான வெப்பநிலை மாற்றங்களைத் தவிர்ப்பது நல்லது. அதிக வெப்பமடைந்தால் உடனே குளுமைப்படுத்த முயற்சிக்க வேண்டாம், இது உங்கள் போனில் கன்டென்சேஷனை ஏற்படுத்தி போனை சேதப்படுத்தும்.வெப்பநிலை
உங்கள்
ஸ்மார்ட்போனை நேரடியான சூரிய ஒளி மற்றும் சூடான காரின் உள் வைத்திட வேண்டாம், முக்கியமாக
வெயில் காலங்களில். இது போன்ற நேரங்களை உங்கள் போன் ஓவர்ஹீட் வார்னிங் மெசேஜ்களை
காண்பிக்கும், உடனே உங்கள் போனின் கவர்களை கழட்டி இயல்பான இடத்தில் சிறிது நேரம்
சுவாசிக்க விடுங்கள்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக