Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 ஜூலை, 2019

ஆங்கில பாடப் பயிற்சி 11 (Simple Future Tense)


Image result for Simple Future Tense 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




Grammar Patterns -1 றில் ஐந்து மற்றும் ஆறாவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை சற்றுப் பாருங்கள். இன்று அவ்விரண்டு வாக்கியங்களையும் விரிவாக கற்கப் போகின்றோம்.

இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்தே தொடருங்கள். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சியை எளிதாக தொடர வழிவகுக்கும்.
Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs0ElHvTkltrJZ9tHHAZBF45drc12s4LZ5YbkK2B3YRZChnpKy1DdvWLVUOyCPNF_J5A-TyiVPIX7U0uUyFRXNbkN1xJIb_BKurj3sz05L9fw7-_qOsTtTTND5_mK0vuSlz_NykN9ECsMA/s400/aangilam+2008.jpgசரி இன்றைய பாடத்திற்குச் செல்வோம்.

5. I will do a job
நான் செய்வேன் ஒரு வேலை.
நான் செய்கிறேன் ஒரு வேலை. (சற்றுப் பிறகு)

6. I won’t do a job. (will + not)
நான் செய்ய மாட்டேன் ஒரு வேலை.

மேலுள்ள 5, 6 வரிகளைப் பாருங்கள். இவை சாதாரண எதிர்கால வாக்கியங்களாகும். இவற்றை ஆங்கிலத்தில் "Simple Future Tense" என்று கூறுவர். இந்த Form ல் தன்னிலை, முன்னிலை, படர்க்கை மற்றும் ஒருமை, பன்மை எல்லாவற்றிற்கும் "will" என்றே பயன்படுத்தப்படுகிறது.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb
I /You /He /She /It / We / You /They + will + do a job.

Negative
Subject
+ Auxiliary verb + not + Main verb
I /You /He /She /It /You /We /They + won’t + do a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb
Will + I /you /he /she /it /you /we /they + do a job?
இவற்றில் "Subject" அதாவது விடயம் பின்னாலும் "Auxiliary verb" துணை வினை வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள்.

இவற்றை சரியாக விளங்கிக் கொண்டோமானால் நாமாகவே மிக எளிதாக கேள்வி பதில்களை மாற்றி அமைப்பது என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

Will you do a job?
நீ செய்வாயா ஒரு வேலை?
Yes, I will do a job
ஆம், நான் செய்வேன் ஒரு வேலை.
No, I won’t do a job. (will + not)
இல்லை, நான் செய்யமாட்டேன் ஒரு வேலை.

Will you speak in English?
நீ பேசுவாயா அங்கிலத்தில்?
Yes, I will speak in English.
ஆம், நான் பேசுவேன் ஆங்கிலத்தில்
No, I won’t speak in English. (will + not)
இல்லை, நான் பேசமாட்டேன் ஆங்கிலத்தில்.

Will you go to school?
நீ போவாயா பாடசாலைக்கு?
Yes, I will go to school.
ஆம், நான் போவேன் பாடசாலைக்கு.
No, I won’t go to school. (will + not)
இல்லை, நான் போகமாட்டேன் பாடசாலைக்கு.

இப்போது மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களைப் பின்பற்றி கீழே இருக்கும் வாக்கியங்களை நீங்களாகவே கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.

நீங்கள் எழுதிப் பயிற்சி செய்யும் போது அவற்றை வாசித்து வாசித்து எழுதவும். அவ்வாறு வாசித்து வாசித்து எழுதும் பொழுது அவை தானாகவே உங்கள் மனதில் பதிந்து, உங்களின் வாசிக்கும் ஆற்றலையும், ஆங்கில அறிவையும் எளிதாக மேம்படுத்திக்கொள்ள உதவும். அதேவேளை எழுத்தாற்றலையும் விரைவில் பெற்றுவிடலாம்.

சரி பயிற்சியைத் தொடருங்கள்.

1. I will open a current account.
நான் திறப்பேன் ஒரு நடைமுறைக் கணக்கு.

2. I will apply for vacancies.
நான் விண்ணப்பிப்பேன் தொழில்களுக்காக.

3. I will speak in English fluently.
நான் பேசுவேன் ஆங்கிலத்தில் சரளமாக.

4. I will ask for an increment.
நான் கேட்பேன் ஓர் (பதவி/சம்பளம்) உயர்வு.

5. I will ask for a transfer.
நான் கேட்பேன் ஒரு இடமாற்றம்.

6. I will celebrate my birthday.
நான் கொண்டாடுவேன் எனது பிறந்தநாளை.

7. I will consult Dr. Sivaram.
நான் (மருத்துவ) ஆலோசனை பெறுவேன் மருத்துவர் சிவராமிடம்.

8. I will control my temper.
நான் கட்டுப்படுத்துவேன் எனது கோபத்தை.

9. I will negotiate my salary.
நான் பேரம் பேசுவேன் எனது சம்பளத்தை.

10. I will stop smoking.
நான் நிறுத்துவேன் புகைப்பிடிப்பதை.

11. I will help others.
நான் உதவுவேன் மற்றவர்களுக்கு.

12. I will open a saving account.
நான் திறப்பேன் ஒரு சேமிப்பு கணக்கு.

13. I will obey the rules and regulations.
நான் கீழ்படிவேன் சட்டத் திட்டங்களுக்கு.

14. I will pick up this work.
நாம் பற்றிக்கொள்வேன் இந்த வேலையை.

15. I will resign from the job.
நான் இராஜினமா செய்வேன் வேலையிலிருந்து.

16. I will correct the mistakes.
நான் சரிப்படுத்துவேன் பிழைகளை.

17. I will play football.
நான் விளையாடுவேன் உதைப்பந்தாட்டம்.

18. I will do my duty.
நான் செய்வேன் எனது கடமையை.

19. I will follow a computer course.
நான் பின்பற்றுவேன் ஒரு கணனி பாடப் பயிற்சி.

20. I will forget her.
நான் மறப்பேன் அவளை.

21. I will solve my problems.
நான் தீர்ப்பேன் எனது பிரச்சினைகளை.

22. I will speak English in the office
நான் பேசுவேன் ஆங்கிலம் பணியகத்தில்.

23. I will go to the university.
நான் போவேன் பல்கலைக்கழத்திற்கு.

24. I will translate English to Tamil.
நான் மொழிமாற்றுவேன் ஆங்கிலத்தை தமிழுக்கு.

25. I will give up this habit.
நான் விட்டுவிடுவேன் இந்த தீயப்பழக்கத்தை.

26. I will study for the exam.
நான் படிப்பேன் பரீட்சைக்காக.

27. I will do my homework.
நான் செய்வேன் எனது விட்டுப்பாடம்.

28. I will become stronger.
நான் பலசாலியாவேன்.

29. I will become a chief executive in the company.
நான் ஆவேன் தலமை நிறைவேற்று அதிகாரியாக இந்த நிறுவனத்தில்.

30. I will become the Prime Minister of India.
நான் பிரதமராவேன் இந்தியாவின்.

31. I will take a treatment for my hand.
நான் எடுப்பேன் ஒரு சிகிச்சை எனது கைக்கு.

32. I will introduce him to you.
நான் அறிமுகப்படுத்துவேன் அவனை உனக்கு.

33. I will untie this knot.
நான் அவிழ்ப்பேன் இந்த முடிச்சை.

34. I will build my dream house.
நான் கட்டுவேன் எனது கனவு வீட்டை/மாளிகையை.

35. I will co-operate with others.
நான் ஒத்துழைப்பேன் மற்றவர்களுடன்.

36. I will discuss about this problem.
நான் கலந்தாலோசிப்பேன் இந்தப் பிரச்சினையைப் பற்றி.

37. I will drop you in Vavuniya junction.
நான் இறக்குவேன் உன்னை வவுனியா சந்தியில்.

38. I will buy a car.
நான் வாங்குவேன் ஒரு மகிழுந்து.

39. I will bank the money.
நான் வைப்பிடுவேன் வங்கியில்.

40. I will come up in my life.
நான் முன்னேறுவேன் வாழ்க்கையில்.

41. I will draw salary US$ 100,000 monthly.
நான் பெறுவேன் சம்பளம் ஒரு லட்சம் டொலர் மாதாந்தம்.

42. I will fly to America.
நான் (விமானத்தில்) பறப்பேன் அமெரிக்காவிற்கு.

43. I will go to Europe.
நான் போவேன் ஐரோப்பாவிற்கு.

44. I will invite my friends for festival.
நான் அழைப்பேன் எனது நண்பர்களை பண்டிகைக்கு.

45. I will improve my English knowledge.
நான் வளர்ப்பேன் எனது ஆங்கில அறிவை.

46. I will practice English at night.
நான் பயிற்சி செய்வேன் ஆங்கிலம் இரவில்.

47. I will become wealthy.
நான் செல்வந்தனாவேன்.

48. I will get married after few months.
நான் திருமணம் முடிப்பேன் சில மாதங்களில் பிறகு.

49. I will become (CEO) chief executive officer.
நான் ஆவேன் தலமை நிறைவேற்று அதிகாரியாக.

50. I will become famous in the world.
நான் பிரசித்திப்பெறுவேன் இந்த உலகில்.

Homework:

A.
மேலே நாம் கற்ற சொற்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமையுங்கள்.

B.
மேலே உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி பதில்களை பார்த்து, இந்த 50 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.

C.
இன்று நாம் கற்ற (Simple Future Tense) சாதாரண எதிர்கால சொற்களை போல், நீங்கள் உங்கள் எதிர்காலத் எண்ணங்களாக, நோக்கங்களாக என்னென்ன செய்ய விரும்புகின்றீர்களோ, அவற்றை ஆங்கிலத்தில் "will" எனும் துணைவினையுடன் எழுதிப் பயிற்சி செய்யுங்கள்.

சிறிய அறிவுரை
உங்கள் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் உங்கள் சகோதரரிடமோ அல்லது நண்பரிடமோ இணைந்து நீங்கள் எழுதிய கேள்வி பதில்களை, ஒருவர் கேள்வி கேட்டும் மற்றவர் பதிலளித்தும் பயிற்சி செய்யலாம். எவ்விதக் கூச்சமும் இன்றி சத்தமாக பேசி பயிற்சிப் பெறுங்கள். அது கூடிய பயனை உங்களுக்குத் தரும்.

ஆங்கில இலக்கணம் படித்தோர்களில் பலர் கூறும் இன்னுமொரு விடயத்தையும் நாம் அடிக்கடி கேட்கக் கூடியதாக உள்ளது. அது ஆங்கில செய்திகள் மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களை பார்க்கும் போது அதில் பேசுவதை, வாசிப்பதை தம்மால் புரிந்துக்கொள்வதற்கு கடினமாக இருக்கிறது என்பதே. இன்னும் சிலர் இடைக்கிடை ஒரு சிலச் சொற்களைத் தவிர துப்பரவாக விளங்குகிறதே இல்லை என்று கூறுவோரும் உள்ளனர்.

சில ஆங்கில பாடப் புத்தகங்களில், குறிப்பாக "Spoken English" புத்தகங்களில் ஆங்கில உச்சரிப்பிற்காக கீழே கொடுக்கப் பட்டிருக்கும் தமிழை வாசித்து வாசித்து கடினப்பட்டு ஆங்கிலத்தை மனப்பாடம் செய்வதால் மட்டும் முழுமையான ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள முடியாது. சரியான ஆங்கில உச்சரிப்பைப் பெறுவதும் கடினம்.

இதற்கு நாம் கூறும் அறிவுரை என்னவெனில் ஆங்கிலத்தை தமிழில் பேசுவதுப் போன்று அதே தொனியில் ஆங்கிலம் பேசிப் பழகாதீர்கள் என்பதே.
உதாரணமாக "I am speaking in English" என்று கூறும்போது அதை "அயம் ஸ்பீக்கிங் இன் இங்கிலிஸ்" என்று ஒவ்வொரு சொல்லுக்கு சொல் இடைவெளி விட்டு பேசிப் பழகாமல், ஒரு வாக்கியத்தில் உள்ள அனைத்துச் சொற்களையும் ஒரே சொல்லாகஐயம்ஸ்பீக்கிங்கின்ங்கிலீஸ்என்றுப் பேசிப் பாருங்கள். மிக எளிதாக உங்கள் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள கூடியதாக இருக்கும். அதேவேளை ஆங்கிலேயர் (திரைப்படம், செய்திகள் உட்பட) பேசுவதையும் இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கும். BBC போன்ற இணையத்தளங்களில் ஆங்கிலச் செய்திகளை காணொளி வடிவாக அல்லது ஒலி வடிவாகத் தொடர்ந்து கேட்டுவருவதும் பயனளிக்கும்.

BBC Business English
இக் காணொளி தொடரினையும் பாருங்கள்.

உச்சரிப்பு (Pronunciation) பயிற்சி கருதி, இங்கே எமது வலைத்தளத்திலும் ஒரு ஆங்கிலப் பெண்மணியின் குரலில் ஒலிப்பதிவிட்டுள்ளோம். அவற்றையும் நீங்கள் கேட்டு பயிற்சி பெறலாம்.

ஆங்கில உரையாடல்களின் போது இலகுவாகவும் வேகமாகவும் பேசுவதற்கு ஆங்கில "short form" சுருக்க உச்சரிப்பு பயன்பாடுகள் முக்கியாமானது. எனவே நீங்களும் சிறப்பாக ஆங்கிலம் பேச விரும்புவராயின் இதுப் போன்ற "short form" முறைகளைப் பின்பற்றி ஆங்கிலத் தொனிக்கேற்ப பேசிப் பழகுங்கள்.

Affirmative short form: 

I will - I'llYou will - You'll
He will - He'llShe will - She'llIt will - It'llWe will - We'll
You will - You'll
They will - They'll


Negative short forms:
இந்த எதிர்கால எதிர்மறையாக பயன்படும் துணைவினைகளின் "Short Forms" களை மூன்று விதமாக வகைப் படுத்தியுள்ளனர்.
I will not - I'll not - I won't
You will not - You'll not - You won't
He will not - He'll not - He won't
She will not - She'll not - She won't
It will not - It'll not - It won't
We will not - We'll not - We won't
You will not - You'll not - You won't

They will not - They'll not - They won't

"won’t"
என்பது will + not இன் சுருக்கமாகும். (Short form of will + not)

"want" - "
வேண்டும்" எனும் பொருளிலும் ஒரு சொல் இருப்பதால், இரண்டையும் குழப்பிக்கொள்ளாதீர்கள். (இரண்டுக்கும் வேறுப்பாட்டை அவதானிக்கவும்.)

குறிப்பு:

ஆங்கிலத்தில் எதிர்காலச் சொற்பிரயோகங்களாக ஆறு வெவ்வேறு விதமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது அவை:

1. Future “will”
2. Future “going to”
3. Present continuous used as future
4. Future Continuous
5. Future perfect simple
6. Future perfect continuous

இருப்பினும் நாம் இன்றையப் பாடத்தில் Future “will” சாதாரண எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே கற்றோம். ஏனையவை எதிர்வரும் பாடங்களில் வரும்.

சாதாரண எதிர்காலம் Future "will"

இதன் பயன்பாட்டை மூன்று விதமாகப் பிரித்துப்பார்க்கலாம்.

1.
எண்ணமிடல், நோக்கம், எதிர்ப்பார்ப்பு போன்றவற்றைக் கூறுதல்.

I will come tomorrow. -
நான் வருவேன் நாளை
He will work with us. -
அவர் வேலை செய்வார் எங்களுடன்.
I will win. -
நான் வெற்றிப்பெறுவேன்.

2.
முன்கூட்டியே ஒன்றை யூகத்தின் அடிப்படையில் கூறுதல்.

I think the Indian cricket team will win the match.
நான் நினைக்கிறேன் இந்தியன் கிரிக்கெட் குழு வெற்றி பெரும் ஆட்டத்தில்.

I think you will like her.
நான் நினைக்கிறேன் நீ விரும்புவாய் அவளை.

முதல் வாக்கியத்தைப் பாருங்கள் அதில் இந்தியன் கிரிக்கெட் குழு 100% வீதம் வெற்றிப்பெரும் என்று திட்டவட்டமாக கூறப்படவில்லை. எனவே அக்கூற்று நிச்சயமற்றது. ஆனால் எப்படியோ (யூகத்தின் அடிப்படையில்) வெற்றிப்பெரும் எனக் கூறப்படுகின்றது. இதை ஆங்கிலத்தில் "Future prediction" என்று கூறுவர். அதாவது தாம் நினைப்பதே நடக்கும் எனும் எதிர்ப்பார்ப்புடன் கூறுவதாகவும் கொள்ளலாம்.

இதுப் போன்ற நிச்சயமற்று கூறும் எதிர்கால வினையை வெளிப்படுத்த "will" உடன் அதிகமாக பயன்படும் சொற்கள் probably, possibly, I think, I hope.

3.
மற்றும் இந்த "will" உறுதியளித்து அல்லது உறுதியை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

I will be there on time.
நான் அங்கிருப்பேன் (குறித்த) நேரத்தில்.

அதாவது குறித்த நேரத்திற்கு குறித்த இடத்தில் இருப்பேன் என்பதை முன்கூட்டியே உறுதியாகக் (promise) கூறப்படுகின்றது. (ஆனால் இருப்பாரா என்பதைத் தீர்மானிக்க முடியாது)

I promise, I will be there on time, don’t worry.
நான் உறுதியளிக்கிறேன், நான் அங்கிருப்பேன் (குறித்த) நேரத்திற்கு, கவலைப்பட வேண்டாம்.

வரைப்படம்
Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMSvCUk8h5dMciJ1TSsuQZlSghqKccGV_Hx6HaDkc6GeCN8gt9rfOkSFTaipd5uyYx26WwjNc0BpUawbpBZUkjLj6IPYGxUw1ftm4BlLbIyTT6fh82XD_jwYd9-V5Lry5sao2CCEoq2N6I/s320/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.jpg
எமது ஆங்கிலம் வலைத்தளம் குறித்து சில வரிகள்
எமது இந்த "ஆங்கிலம்" வலைத்தளம் குறித்தச் சில மகிழ்வான வரிகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன். வலைத்தளங்களைப் பொருத்த மட்டில் ஒரு மாதத்திற்கு பலப் பதிவிடும் தளங்களே அதிகம். ஒவ்வொரு நாளும் பதிவிடும் தளங்களும் உள்ளன. ஒரே நாளைக்குப் பல பதிவிடுவோரும் உள்ளனர். ஒரு மாதத்திற்கு நூற்றுக்கணக்கானப் பதிவிடும் தளங்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இத்தளங்களிற்கான வருகையாளர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், பதிவிடும் நாட்களில் மட்டுமே (திரட்டிகளூடாக) அதிகமான வருகைகள் இருக்கும். (சிலத் தளங்கள் அப்படியல்ல.)

ஆனால் இத்தளத்தில் இப்பதிவோடு சேர்த்து இதுவரை 13 பதிவுகள் மட்டுமே இடப்பட்டுள்ளன. கடந்தப் பதிவு (23 மே 2008) இட்டப் பொழுது வாசகர்களின் வருகை எண்ணிக்கை 11,000 அளவிலேயே இருந்தது. (கிட்டத்தட்ட ஒரு மாதம்) 27 நாட்களுக்குப் பின் இன்று இப்பதிவிடும் இடைவெளிக்குள் இதன் எண்ணிக்கை 21,000 யிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கின்றது. 2008 யூன் 6 ம் திகதி இந்த ஆங்கிலம் வலைத்தளம் குறித்து PKP அவர்கள் தனது பதிவில் அறிமுகப்படுத்திய அன்று வருகையாளர்களின் எண்ணிக்கை "1000" த்தை தாண்டியது.

இந்தஆங்கிலம்வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களே ஆகின்றது. இந்த வலைத்தளத்தை மற்ற வலைத்தளங்களோடு ஒப்பிடுகையில் பின்னூட்டங்கள் வருவது மிக மிகக் குறைவு. ஆனால் இத்தளத்திற்கான வருகையாளரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதை Traffic Statistics காட்டுகின்றது.
Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNBmKjnunvRjfUls9sOpFhqfVX026i5qMn__y4CAfOK4IfcaLlCf6d75Im3RfWkPZY4Z04LkOqHp9oG4S97Ht6Kl7N0n3MgbLm0WbWblAgwVTSaJe1Ctn-QKk8CJnXoZD4bTrcIRVIhk4B/s400/aangilam+%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.jpgஇக் கால இடைவெளிக்குள் கிட்டத்தட்ட 200 க்கும் அதிகமானோர் Subscribers மின்னஞ்சல் ஊடாக பாடப் பயிற்சிகளை பெற்றுவருகின்றனர். தவிர மின்னஞ்சல் ஊடாக கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதில் ஒரு விடயம் நிதர்சனமாகிறது. இன்றைய காலக்கட்டத்தின் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை மக்கள் நன்குணர்ந்தே உள்ளனர்.

இந்த "ஆங்கிலம்" வலைத்தளம் குறித்து தமது தளத்தில் முதலில் பதிவிட்டு அறிமுகப்படுத்தியவர் சிறில் அலெக்ஸ். இவரைப் போன்று இன்னும் பல சகப் பதிவர்கள் நண்பர்கள் இத்தளத்தை ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் எனது நன்றிகள். வலைத்தளங்கள், இணையத்தளங்கள், மன்றங்கள் ஊடாக தொடுப்பு கொடுத்துள்ளோருக்கும் மிக்க நன்றிகள்.

திரட்டிகள் என்று கூறுகையில் அநேகமாக ஒரு பதிவு ஒரு சில மணித்தியாளங்களே நிலைத்து நிற்கின்றது. ஆனால் தமிழ்வெளி திரட்டியில் என்று பார்த்தாலும் இந்த ஆங்கிலப் பாடப் பயிற்சிக்கு முன்னுரிமை கொடுத்து (எமது சமுதாய வளர்ச்சியின் நலனை முன்னிட்டு என நினைக்கின்றேன்) காண்பிக்கப் படுகின்றது. அவர்களுக்கும் எனது நன்றிகள்.

மேலும் இங்கே நான் தனித்து பதிவிட்டாலும், இச்சிறு முயற்சிக்கு வருகையாளரான உங்கள் அனைவரது ஆதரவும், சக வலைப்பதிவர்களின் ஊக்குவிப்பும், பாராட்டுக்களுமே என்னை மென்மேலும் ஊக்கத்துடன் எழுதத் தூண்டுகின்றன. மேலும் எனது பணியை சிறப்புடன் செய்ய வேண்டும் எனும் உத்வேகத்தையும் என்னுள் உண்டுப் பன்னுகின்றன.

கிட்டத்தட்ட 8 கோடித் தமிழர்கள் வாழும் இவ்வுலகில், பாதிப் பேராவது ஆங்கிலம் கற்றுச் சிறந்தால் எமது எதிர்காலச் சமுதாயத்தின் முன்னேற்றத்தை எவராலும் தடுக்க முடியாது. எமது எதிர்பார்ப்பு இப்பாடத் திட்டம் அனைத்து தமிழர்களையும் சென்றைடைய வேண்டுமென்பதே ஆகும். முடிந்தவரையில் எனது பணியை எனது சிற்றறிவுக்கு எட்டியவகையில் சிறப்புடன் செய்ய விளைக்கின்றேன். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள்.

"
செருப்பு இல்லாதவன் கால் இல்லாதவனைப் பார்த்த ஆறுதல் அடைய வேண்டும்" என்பது இயலாமைக்கு கூறும் ஆறுதல் வார்த்தையாகும். ஆனால் இன்றைய உலகம் ஒரு ஓட்டப் பந்தயம் போன்றது. முன்னே ஒடுபவன் பின்னே வருபவனை திரும்பிப் பார்க்கும் கணப்பொழுதிலும் பின்னே உள்ளவன் முன்னே உள்ளவனை முந்திவிடுவான். எனவே ஓடுங்கள்! ஓடுங்கள்!! பின்னே வருபவனை முந்த விடாது ஓடுங்கள். முன்னே ஒடிக்கொண்டிருப்பவனையும் முந்துவதற்கு ஓடுங்கள். உங்கள் வெற்றியில் தான் எமது சமுதாய வெற்றித் தங்கியுள்ளது. வெற்றிக்கொடியை நாட்டுங்கள். அது தமிழனது கொடியாக இருக்கட்டும்! அவ்வெற்றி கல்வியின் ஊடாக கிட்டட்டும்!


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக