இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி 1 ஆழாக்கு (ஒரு ஆழாக்கு 168 மில்லி லிட்டர்)
பச்சரிசி 1 ஆழாக்கு
தேங்காய் 1 மூடி
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் 1 சிட்டிகை
சமையல் சோடா 1 1. சிட்டிகை (பார்க்க நன்றாக இருக்க வேண்டும் என்றால். உடல் நிலை சரி இல்லாதவர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம்)
செய்முறை:
- இரண்டு அரிசிகளையும் நன்கு களைந்து நீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- உடனுக்குடன் துருவிய தேங்காய் துருவலை அரிசிகளுடன் மிக்சியில் போட்டு வெண்ணெய் போல் அரைத்துக் கொண்டு உப்பு, பெருங்காயத் தூள் (ஒரு சிட்டிகை), சமையல் சோடா இவற்றை போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- ஆப்பக் குழி (பாத்திரக் கடைகளில் கேட்டால் கிடைக்கும்) என்னும் பாத்திரத்தில் ஒவ்வொரு குழியிலும் டால்டா அல்லது நெய் விட்டு , அதில் சிறிதளவு மாவை விட்டு வெந்ததும் கரண்டிக் காம்பால் திருப்பிப் போட்டு சிறிதளவு டால்டா விட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடம் கழித்து (நீங்கள் வைக்கும் சூட்டை பொறுத்து) எடுக்கலாம். கூடிய வரையில் டால்டாக்கு பதில் எண்ணெய் அல்லது நெய்யை பயன்படுத்துங்கள்.
- ஆப்பக் குழி அவசியம் தேவை என்று இல்லை. அது இல்லாதவர்கள் ஒரு சிறிய வாணெலியில் ஒவ்வொன்றாகச் செய்யலாம். ஆனால், ஆப்பம் நன்கு வேக ஒரு மூடி கொண்டு அவ்வப்போது மூட வேண்டும். பின்பு மூடியை எடுத்து விட்டுத் திருப்பிப் போட்டு நெய் ஊற்றி மறுபடியும் மூடி வேகும் வரை வைக்க வேண்டும்.
- ஆப்பம் என்றாலே அதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய்ப் பால் சுவையாக இருக்கும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக