இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லாபாய் பட்டேல் அவர்களுக்கு மிகப்பெரிய சிலை வைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் மேலும் ஒரு சிலை உருவாகி வருகிறது. இந்த முறை சிலையை வைப்பது உ.பி. அரசு. இந்த சிலை உலகின் மிக உயரமான சிலையாக உருவாகி வருகிறது. 251 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலை ராமர் சிலை ஆகும்.
சர்தார் வல்லபாய் படேலின் சிலையை விட உயரமாக இருக்கும்
ராமரின்
பிறப்பிடமான அயோத்தியில் உருவாக்கப்படும் இந்த சிலை குஜராத்தில் உள்ள சர்தார்
வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலையை விட உயரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
உயரம் சுமார் 700 அடி இருக்கும்
அயோத்தியில்
சரயு நதிக்கு அருகில் சுமார் 100 ஹெக்டேர் நிலத்தில் அனைவராலும் வணங்கப்படும்
ராமர் சிலை நிறுவப்படும் என்று சமீபத்தில் உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகி
கூறியுள்ளார். உபி அரசின் செலவில் வைக்கப்படும் இந்த சிலையின் கட்டுமானப் பணிகள்
விரைவில் தொடங்கப்படும் என்றும், ராமரின் சிலை தற்போது மும்பையில்
உருவாக்கப்பட்டும் சத்ரபதி சிவாஜி சிலையை விஞ்சும் அளவுக்கு இருக்கும் என்றும்
கூறப்படுஇறது. இந்த சிலையில் உயரம் சுமார் 700 அடி இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது
டிஜிட்டல் மியூசியம்
மேலும் இந்த
பகுதியில் சிலை மட்டுமின்றி ராமர் குறித்த டிஜிட்டல் மியூசியம், தியானம் செய்யும்
இடம், நூலகம், உணவகங்களுடன் கூடிய மால் மற்றும் பார்க்கிங் வசதி போன்ற அனைத்து
அடிப்படை அம்சங்களும் கொண்டதாக அமையும் என முதல்வர் யோகி தெரிவித்துள்ளார்.
"ராஜ்கியா நிர்மன் நிகம்"
இந்த சிலையை நிறுவ உத்தரபிரதேச அரசுக்கு தகவல்
தொழில்நுட்ப உதவி மற்றும் வழிகாட்டுதலுக்காக குஜராத் அரசாங்கத்துடன் ஒரு
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும், அதே நேரத்தில் சிலை நிறுவும்
நோக்கத்திற்காக "ராஜ்கியா நிர்மன் நிகம்" இன் தனி பிரிவு அமைக்கப்படும்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள புத்தர் சிலை
கடவுள் ராமர்
சிலையானது இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் மற்றொரு சிலையாக இருக்கும் என்றும் அவர்
மேலும் தெரிவித்தார். சுதந்திர போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை
சிலை என்றும், இந்த சிலைதான் தற்போது உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை
பெற்றுள்ளதாகவும், இந்த சிலையின் உயரம் 182 மீட்டர் உயரத்தில் உள்ளதாகவும்
தெரிவித்த முதல்வர், ரூ .3,000 கோடி செலவில் கட்டப்பட்டு நர்மதா ஆற்றின் கரையில்
வைக்கப்பட்டுள்ள இந்த வெண்கல சிலை, அமெரிக்காவில் உள்ள லிபர்ட்டி சிலையின் உயரத்தை
விட இரு மடங்கு அதிகமானது என்றும், சீனாவில் உள்ள புத்தர் சிலையை விட உயர்ந்து
நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் ராஜஸ்தானின் நாத்வாராவில் மிக உயரமான
சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக