இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிபெயர்ப்பு சார்ந்த தகவல்களை பெற ஆப் வசதி இருந்தபோதிலும், ஒரு கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் லாங்கோகோ என்பவர்.
விரிவாகப் பார்ப்போம்
பொதுவாக ஆப்
மற்றும் கூகுள் வசதிகளை பயன்படுத்தி மொழிபெயர்ப்பு செய்யும் போது எப்படியும் சில
சிக்கல்கள் வரும், ஆனால் லாங்கோகோ என்ற இந்த மனிதன் கண்டுபிடித்த கருவி துல்லியமான
ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழி பெயர்ப்பு செய்து காட்டுகிறது, இதைப் பற்றி
விரிவாகப் பார்ப்போம்.
பல வல்லுனர்களை கவர்ந்துள்ளது
ஒரு மொழிக்காரர் பேசியதை ஒரே வினாடியில் மொழிபெயர்த்து,
இன்னொரு மொழிக்காரருக்குப் புரியும் வகையில் பேசிக்காட்டும் சில கருவிகள்
வந்துவிட்டது, ஆனால் லாங்கோகோ என்பவர் தயாரித்துள்ள ஜெனிசிஸ் என்ற கையடக்க
மொழிபெயர்ப்பு கருவி பல வல்லுனர்களை கவர்ந்துள்ளது.
தமிழ், ஹிந்தி மற்றும் இந்திய ஆங்கிலம்
தமிழ், ஹிந்தி மற்றும் இந்திய ஆங்கிலம்
தமிழ், ஹிந்தி மற்றும் இந்திய ஆங்கிலம் உட்பட 100மொழிகளில்
ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மொழிபெயர்த்து, இனிய குரலில் பேசிக்காட்டுகிறது
ஜெனிசிஸ். விமான நிலையத்துக்கு வழி கேட்பதிலிருந்து, அருகே நல்ல தங்கும் விடுதி,
உணவகம் எங்கே இருக்கிறது என்பது வரை, சில வரிகள் முதல், பல பத்திகளுக்கு பேசி
அடுத்த மொழிக்காரருடன் எளிதில் கருத்துப் பரிமாற லாங்கோகோ ஜெனிசிஸ் உதவுகிறது.
செயற்கை நுண்ணறிவு
மென்பொருள் குறிப்பாக வைஃபை வசதி கொண்ட இந்த
மொழிபெயர்ப்புக் கருவிக்கு மூளையாக செயல்படுவது, ஒரு செயற்கை நுண்ணறிவு
மென்பொருள், இதுவும் லாங்கோகோவின் மேமக் கணிய இணைப்பும் இந்த கருவியின் பன்மொழிப்
புலமையை தொடர்ந்து மெருகேற்றியபடியே இருக்கும்.
மொழிபெயர்ப்பின் துல்லியமும் கூடும்
இப்போது சீன,
கொரிய பேச்சு மொழிகளை சில பிழைகளுடனே மொழிபெயர்ப்பதாக விமர்சனம் இருந்தாலும்,
ஒருவர் தொடர்ந்து இந்த கருவியை பயன்படுத்தும்போது, அவரது பேச்சு நடைக்கு இக்கருவி
பழகிக்கொள்ளும் என்பதால், மொழிபெயர்ப்பின் துல்லியமும் கூடும் என ஜெனிசிசை
உருவாக்கியவர்கள் கூறியுள்ளனர்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக