Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 31 ஜூலை, 2019

8 வழிச்சாலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், 10,00 கோடி ரூபாய் செலவில் 277.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாய நிலம், காடுகள், நீர் நிலைகள் பாதிக்கப்படும் எனக்கூறி அப்பகுதி மற்றும் பொதுமக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வரை நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதையடுத்து, மேல்முறையீடு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக