இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/PudhiyapodiayanInstagram:pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கண்ணாமூச்சி சிறுவர்களால் விளையாடப்படும் ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். சிலர் ஒளிந்து கொள்ள ஒருவர் தேடிசென்று அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். இது சிறுவர் சிறுமியர் மட்டுமில்லாமல் பெரியவர்கள் கூட விளையாடுவார்கள்.
எத்தனை பேர் விளையாடலாம்?
இரண்டிற்கும் மேற்பட்டோர்.
எப்படி விளையாடுவது?
முதலில் யார் ஒளிந்து கொள்ள வேண்டும். யார் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும்.
விளையாடுபவரின் கண்ணை மற்றொருவர் தன் இரண்டு கைகளால் பொத்திக்கொள்வார்கள்.
கண்ணாமூச்சி ரே.... ரே....
காதறுப்பான் ரே... ரே....
நல்ல மூட்டையை தின்னுப்புட்டு
கெட்ட மூட்டையை கொண்டு வா...!!
அல்லது
கண்ணா... கண்ணா... மூச்சி
காட்டு தல மூச்சி....
நல்ல முட்டைய திண்ணுட்டு...
ஊல முட்டைய கொண்டுவா....
என பாடிக்கொண்டே மூடியிருக்கும் கண்ணை திறந்து விடுவார்கள். அதற்குள் மற்றவர்கள் எல்லோரும் ஓடி ஒளிந்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்பதை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.
ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடிப்பதற்குள், அவர்கள் கண்ணைப் பொத்தியவரை ஓடி வந்து தொட்டுவிட வேண்டும். தேடுபவரிடம் அகப்படாமல் கண்ணைப் பொத்தியவரை தொட்டுவிட்டால் பழமாவார்கள். அப்படியில்லையென்றால் கண்ணை பொத்தியிருந்தவர் ஒளிந்து இருந்தவரை தொட்டுவிட்டால் அவர்கள் அவுட். இதில் யார் அவுட் ஆகிறார்களோ அவர்கள் கண்ணை பொத்திகொண்டு இவ்விளையாட்டை தொடர வேண்டும்.
தற்போது உள்ள கால சூழ்நிலையில் இதுபோன்ற விளையாட்டுகளை காண்பது அரிதாகி கொண்டு வருகிறது. இதுபோன்ற கிராமத்து விளையாட்டுகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பழக்கப்படுத்துவோம்.
பயன்கள் :
- தேடிக் கண்டறியும் திறன் மேம்படும்.
- செவிப்புலன் கூர்மையாகிறது.
- காட்டிக் கொடுக்கக்கூடாது என்னும் பண்பு வளர்கிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக