>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 19 ஜூன், 2019

    உங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம்! Facebook-ன் புதிய பிசினஸ்..!


    தலைப்பை படித்த உடன் பயமாக இருக்கிறதா..? இந்த செய்தி உண்மையா என சிந்திக்கத் தோன்றுகிறதா..? இந்த செய்தி உண்மை தான் இந்த பிரச்னை குறித்து பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்களே இப்போது தான் படம் போட்டு விளக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

    Follow Us:



    Contact us : oorkodangi@gmail.com
    நம்மிடம் இருக்கும் டேட்டாக்களை, விலை கொடுத்து வாங்கி, நமக்கு இன்னும் சிறப்பான சேவை செய்ய Facebook நிறுவனம் இந்த டேட்டாக்களை சேகரிக்கிறார்களாம். அதற்காக பிரத்யேகமாக தனி செயலியையும் (அப்ளிகேஷனையும்) வெளியிட்டிருக்கிறார்கள். அந்த செயலியின் பெயர் Facebook Study.
      பதிவிறக்கம்
    பதிவிறக்கம்
    பதிவிறக்கம் இந்த Facebook Study ஃபேஸ்புக் ஸ்டடி செயலியை நம் ஸ்மார்ட்ஃபோன்களில் வழக்கம் போல ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ள வேண்டும்.

    அதன் பின் வழக்கம் போல Next, Accept & Continue, I Accept... என கேட்கும் நம்மவர்களும் படித்துப் பார்க்காமல் யெஸ் சொல்லி உள்ளே செல்வார்கள். சரி இந்த செயலியில் விதி முறைகளில் என்ன சொல்லி இருக்கிறது...?

      ஸ்லைட் 1
    ஸ்லைட் 1
    இந்த செயலியை பதிவிறக்கம் செய்த பின் "தம்பி, நீங்க ஸ்மார்ட்ஃபோன்ல எந்த செயலிகளை எல்லாம் பயன்படுத்துறீங்க, எப்படி பயன்படுத்துறீங்க, எந்த நேரத்துல எந்த செயலிகள பயன்படுத்துறீங்க-ன்னு எல்லா டேட்டாக்களையும் கொடுத்துடுங்க,

    அதுக்கு ஒரு நல்ல தொகை தர்றோம். இந்த டேட்டாக்களை வெச்சி நம்ம ஃபேஸ்புக் சமூகத்துக்கு இன்னும் நல்லா சேவை செய்ய உதவுங்க" என நம் காதில் ஓதுகிறது.
      ஸ்லைட் 2
    ஸ்லைட் 2
    முதல் ஸ்லைடுக்கு ஓகே சொல்லி Next கொடுத்து வந்தால் "இந்த Facebook Study செயலி மூலமா
    1. உங்க ஸ்மார்ட்ஃபோன்ல எந்த செயலிகள எல்லாம் பதிவிறக்கம் செய்றீங்க,
     2. ஒரு செயலில எவ்வளவு நேரம் செலவிடுறீங்க,
     3. நீங்க எந்த நாட்ல இருக்கீங்க,
     4. என்ன ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துறீங்க
     5. எந்த நெட்வொர்க் பயன்படுத்துறீங்க
     6. எந்த செயலில என்ன மாதிரியான விஷயங்களை எல்லாம் பயன்படுத்துறீங்க...." இப்படி தரவுகளை அலேக்காக தட்டித் தூக்க Facebook நிறுவனம் நம்மிடம் அனுமதி கேட்கிறது.
      ஸ்லைட் 3 தொடர்ச்சி
     ஸ்லைட் 3 தொடர்ச்சி

    அதற்குக் கீழ் "உங்களிடம் இருந்து திரட்டப்படும் தகவல்களை வைத்து நீங்கள் எந்த மாதிரியான செயலிகளுக்கு அதிக மதிப்பளிக்கிறீர்கள், செயலிகளை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என அறிந்து கொள்கிறோம். "

    "இதனால் எங்கள் Facebook சமூகத்தினரை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்". "எக்காரணத்தைக் கொண்டும் நாங்கள் உங்களின் பாஸ்வேர்ட், யூசர் ஐடி, நீங்கள் பதிவிடும் செய்தி அல்லது பகிரும் செய்திகள், பிரவுசிங் ஹிஸ்டரி, குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்களை சேகரிக்க மாட்டோம்" என கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்கிறார்கள்.
      ஸ்லைட் 4
     நோ வியாபாரம்
    அதே போல "இந்த Facebook Study செயலி மூலம் திரட்டும் எந்த தகவல்களையும், எந்த ஒரு நிறுவனத்துக்கும் விற்கவோ அல்லது பயன்படுத்தவோ விட மாட்டோம். அதே போல Facebook நிறுவனமே கூட இந்த டேட்டாக்களை வைத்து, நமக்குத் தகுந்த விளம்பரங்களையும் காட்டி காசு பார்க்க மாட்டோம்" எனவும் விபூதி அடித்து சத்தியம் செய்திருக்கிறது

      வெளியேற வேண்டுமா..?


    ஸ்லைட் 4
    3-வது ஸ்லைட் ஸ்கீரீனுக்கு Accept & Continue கொடுத்து 4-வது ஸ்கீரீனுக்குச் சென்றால், "உங்களிடம் இருந்து திரட்டப்படும் தகவல்களை, ஃபேஸ்புக் கணக்கில் இருக்கும் உங்கள் தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வோம்.

    அதே நேரத்தில் உங்களிடம் இருந்து Facebook Study மூலம் திரட்டும் தகவல்களை, உங்கள் Facebook கணக்கிலோ அல்லது மற்ற ஃபேஸ்புக் சேவைகளிலோ (Whatsapp, Instagram...) உங்கள் அனுமதி இல்லாமல், நீங்கள் பதிவிடாமல் காட்ட மாட்டோம்". என்ன ஏத்துக்குறீங்களா..? I Accept... எனக் கேட்கிறது.

    வெளியேற வேண்டுமா..?
    நான்காவது ஸ்க்ரீனில் கேட்கும் I Accept- சொடுக்கினால் நம்மிடம் இருந்து Facebook Study செயலி நம் செயலிகள் பயன்பாட்டுத் தரவுகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கிவிடுமாம். ஒருவேளை நமக்கு இந்த திட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றால், இந்த செயலியை அன் இன்ஸ்டால் செய்துவிட்டால் போதுமாம். Facebook Study செயலி டேட்டா எடுப்பதை அப்படியே நிறுத்தி விடுமாம்.

    ஃபேஸ்புக் ரிசர்ச்
    சமீபத்தில் தான் Facebook நிறுவனம் தன்னுடைய Facebook Research என்கிற செயலிக்கு பெரிய திண்டுக்கல் பூட்டு போட்டு மூடியது. காரணம் இந்த ஃபேஸ்புக் ரிசர்ச் செயலி மூலம் அளவுக்கு மீறி எல்லா ஸ்மார்ட்ஃபோன்களில் புகுந்து டேட்டாக்களைத் தூக்கத் தொடங்கியது ஃபேஸ்புக்.

    இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனம், ஒரு சுப தினத்தில் தன்னுடைய ஆப்பிள் ஸ்டோரில் இருந்து Facebook ரிசர்ச் செயலிக்கு தடை விதித்தது. அதன் பிறகு தான் ஃபேஸ்புக் கொடூரமாக டேட்டா திருடும் விஷயம் உலகுக்கு தெரிய வந்தது.

    ஆண்ட்ராய்டு மட்டும்
    அதனால் இப்போது இந்த Facebook Study செயலி மூலம் மீண்டும் தரவுகளை எடுக்க நல்லவனாக, நேர் வழியில் Facebook Study ரூபத்தில் வந்திருக்கிறது. இந்த முறை ஆப்பிளில் கை வைக்கப் போவதில்லையாம். ஆண்ட்ராய்டில் ஓடும் ஸ்மார்ட் போன்கள் மட்டுமே இலக்காம்.

    இந்த facebook study திட்டத்தை முதன் முதலில் இந்தியா மற்றும் அமெரிக்காவில் தான் தொடங்க இருக்கிறார்களாம்.
      கணக்கு இருக்கா..?
    கணக்கு இருக்கா..?
    18 வயதுக்கு மேற்பட்டவர்கள், Paypal என்கிற பேமெண்ட் நிறுவனத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த Facebook Study செயலியில் டேட்டாக்களை விற்று, Facebook நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கிக் கொள்ள முடியுமாம். ஆனால் எவ்வளவு பணம் தரப் போகிறது, எந்த அடிப்படையில் பணத்தை அளவிடப் போகிறது என எதையும் Facebook சொல்லவில்லை.

     ஃபேஸ்புக் பிரச்னை
    ஏற்கனவே ஃபேஸ்புக் Net Neutrality பிரச்னை, அமெரிக்க அதிபர் தேர்தலில் Cambridge Analytica பிரச்னை, ஃபேஸ்புக் நிர்வாகத்துக்குள் அதிகாரப் பகிர்வுப் பிரச்னை, முதலீட்டாளர்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது கொடுக்கும் அழுத்தம் என பல கோணங்களில் இருந்தும் பிரச்னையை சமாளித்து வருகிறது ஃபேஸ்புக். இந்த சிக்கலில் இப்போது facebook study மூலம் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறது.

    பேசுவோம்
    இதுநாள் வரை கூகுள், ஃபேஸ்புக் என இருவரின் மீதும், உலக மக்களின் டேட்டாக்களை மக்களுக்கே தெரியாமல் திருடிக் கொண்டிருப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம். படிக்கிறோம். ஆனால் இப்போது ஃபேஸ்புக் தில்லாக "எனக்கு உங்க டேட்டா வேணும், காசு தர்றேன்" என களத்தில் இறங்கி இருக்கிறது. இந்த விஷயத்தை இன்னும் நெட்டிசன்களோ, மீடியாக்களோ இன்னும் பெரிய அளவில் பேசத் தொடங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பேசணும், நிறையப் பேசணும். பேசுவோம்.
    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
    மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
    உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக