>>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 19 ஜூன், 2019

    அதிரடியாக களத்தில் இறங்கியஃபேஸ்புக்.. ஆன்லைன் பணபரிமாற்றத்திற்கு லிப்ரா டிஜிட்டல் கரன்சி அறிமுகம்!

     Image result for facebook libra

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

    Follow Us:



    Contact us : oorkodangi@gmail.com 


    சமுக வலைதளங்களின் GIANT எனப்படும் மாபெரும் நிறுவனமான ஃபேஸ்புக் தற்போது தனது அடுத்த கட்ட வளர்ச்சியாக டிஜிட்டல் பணபரிமாற்ற சேவையை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா என்னும் கிரிப்டோ கரன்சியை 2020ம் ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

    ஆமாங்க.. லிப்ரா எனும் கிரிப்டோ கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக். அதோடு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த கலிப்ரா என்ற வாலட்டையும் அறிமுகப்படுத்த உள்ளதாம் ஃபேஸ்புக் நிறுவனம்.

    இந்த டிஜிட்டல் பணபரிமாற்ற சேவையில் பில்லியன் கணக்கான பயனர்களை இந்த நிதி பரிமாற்றத்திற்கு அனுமதிக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த டிஜிட்டல் பண பரிமாற்ற சேவை, உலக வங்கி சேவையையே உலுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆமாப்பு.. ஒவ்வொரு மாதமும் 2.4 பில்லியன் மக்கள் ஃபேஸ்புக் சமூக வலைதளங்களை உபயோகப்படுத்துகிறார்கள். ஏற்கனவே இந்த வகையில் மக்களோடு மிக ஒன்றி போய் இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனம், இந்த டிஜிட்டல் கரன்சி பரிமாற்றத்திலும் ஒரு புரட்சியை உருவாக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

    மக்களிடையே நாளுக்கு நாள் இந்த கிரிப்டோ கரன்சிகளின் மீதான மோகம் அதிகரித்து வருவதும் இந்த நிலையில், ஆன்லைன் பணபரிவர்த்தனை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும், ஃபேஸ்புக் நல்ல லாபம் சம்பாதிக்க கூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்களாம்.

    மேலும் இது குறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு சுலபமோ, அந்த அளவுக்கு பணத்தை அனுப்பவதை இது சுலபமாக்கும். ஒரு ஸ்மார்ட் ஃபோனும், இணைய வசதியும் மட்டும் இருந்தால் போதும் என்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

    அதோடு இந்த டிஜிட்டல் பணத்தின் பரிமாற்றத்துக்கு சிறிய அளவிலான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடைமுறைக்கு வரும்போது வங்கிக் கணக்கு இல்லாதவர்களை மட்டுமல்லாது, அந்தந்த நாடுகளின் அடையாள அட்டைகள் இல்லாதவர்களை சரிபார்ப்பது ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு மிக கடினமானதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

    அதேபோல பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் கரன்ஸிகளை ஆய்வு செய்துள்ளோம். எனினும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா டிஜிட்டல் கரன்சி அவ்வாறாக இருக்காது என்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். பிட்காயின் போல் மெய்நிகர் பணமாக இல்லாமல் லிப்ரா உண்மையான சொத்துகளை கொண்டு சுதந்திரமாக செயல்படும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு இந்த டிஜிட்டல் கரன்சி திட்டம் அடுத்த 2020ம் ஆண்டு செயல்பாட்டு வரும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
    மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
    உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக