இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒன்பிளஸ்
நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7ப்ரோ ஸமார்ட்போன்
மாடல்கள் இந்தியா முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக மற்ற
ஸ்மார்ட்போன்களை விட சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால் அதிக கவனத்தை
பெற்றள்ளது.
இந்தியாவில்
அறிமுகம் மேலும் இந்நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில்
அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, கண்டிப்பாக சாம்சங், எல்ஜி, சியோமி போன்ற
நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை விட புதிய தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஒன்பிளஸ்
ஸ்மார்ட் டிவி வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
OxygenOS இயங்குதளம்
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தள
பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதன்படி பயனர் கோரிய பல
அம்சங்களை மாற்றி அமைத்து OxygenOS இயங்குதளத்தை மேம்படுத்தியுள்ளது என்று
அறிவித்துள்ளது. எனவே இந்த இயங்குதளம் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியில் வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இணையம்,ஆப், வீடியோ கேம்
குறிப்பாக
இணையம், ஆப், வீடியோ கேம் மற்றும் பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்
டிவி மாடல் வெளிவரும் என அந்நிறுவனத்தின் சிஇஒ தெரிவித்துள்ளார். மேலும் ஒன்பிளஸ்
ஸ்மார்ட் டிவியில் கேமராவும் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்
அமேசான் பிரைம், நெட்ஃபிக்ஸ்
ஒன்பிளஸ்
ஸ்மார்ட் டிவியில் 4கே ஆதரவு உள்ளத என்று அந்நிறுவனம் சார்பில் வெளிவந்த
செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் பிரைம், நெட்ஃபிக்ஸ்
போன்ற சேவைகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.
55-இன்ச் ஒஎல்இடி
டிஸ்பிளே
டிஸ்பிளே
வெளிவந்த தகவலின் அடிப்படையில் 55-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே மற்றும் சிறந்த
பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டால்பி அட்மோஸ், எச்டிஆர் 10 ஆதரவுகள் கொண்டு இந்த
ஸ்மார்ட் டிவி வெளிவரும் என அந்நிறவனம் கூறியுள்ளது.
விரைவில் வெளிவரும்
ஒன்பிளஸ்
பொறுத்தவரை வாடிக்கையாளரின் பிராண்ட் ஆகும், வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி
சாதனங்களை உருவாக்குவதற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறது அந்நிறுவனம். அதன்படி
விரைவில் வெளிவரும் இந்த ஸ்மார்ட் டிவி புதுமையாக தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக