இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தமிழர்கள் கண்டுபிடித்த விளையாட்டுகள் அனைத்தும் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாச்சாரம், பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை, விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம்முடைய மனதிற்கும், நம்முடைய உடலிற்கும் நன்மைகளை வழங்கக்கூடிய விளையாட்டாகவே இருந்துள்ளன.
கிராமங்களில் விளையாடக்கூடிய ஒரு விளையாட்டுதான் இந்த ஏழு கல் விளையாட்டு. இதனை ளநஎநn ளவழநௌ என்றால்தான் அனைவருக்கும் தெரியும்.
எத்தனை பேர் விளையாடலாம்?
பத்திற்கும் மேற்பட்டோர். இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடலாம்.
தேவையான பொருட்கள் என்ன?
7 தட்டையான கற்கள் (அளவில் வேறுபட்டவை)
ஒரு பந்து
எப்படி விளையாடுவது?
முதலில் இரு அணிகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். எந்த அணி கற்களை அடுக்க வேண்டும் (முதலாவது அணி), எந்த அணி கற்களை களைக்க வேண்டும் (இரண்டாவது அணி) எனவும் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.
முதலாவது அணி ஏழு கற்களையும் பெரிய கல் முதல் சிறிய கல் வரை ஒன்றன் மேல் ஒன்றாக வரிசையாக அடுக்கி வைப்பர்.
'ரெடி" சொன்னவுடன் இரண்டாவது அணி கற்களின் மீது பந்தை எறிந்து அடுக்கிய கற்களை களைத்ததும் ஆட்டம் தொடங்கும்.
முதலாவது அணி கற்களை அடுக்க முற்பட வேண்டும். ஆனால் இரண்டாவது அணி கற்களை அடுக்க விடாமல் அதை களைத்துக்கொண்டே இருப்பார்கள். கற்களை அடுக்க விடாமல் முதல் அணியில் உள்ள நபர்களை பந்தால் அடிப்பார்கள். அப்படி அடித்தால் இரண்டாம் அணிக்கு 1 பாயிண்ட்.
முதலாம் அணி பந்தால் அடி வாங்காமல் ஏழு கற்களையும் அடுக்கிவிட்டு அதை சுற்றி வட்டம் வரைந்து விட்டால் முதல் அணி வெற்றி பெற்றதாகும்.
கற்களை அடுக்கிவிட்டு வட்டம் வரைவதற்குள் இரண்டாம் அணி பந்தை எறிந்து கற்களை களைத்துவிட்டால் மீண்டும் ஆட்டம் தொடரும்.
வெற்றிபெற்ற அணி மீண்டும் கற்களை அடுக்குவதா அல்லது களைப்பதா என்று தீர்மானித்து அடுத்த ஆட்டத்தை தொடங்குவர்.
பயன்கள் :
பொறுமை, விடாமுயற்சி கூடும்.
குழு ஒற்றுமை வளரும்.
இலக்கை அடையும் திறன் மேம்படும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக