இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆஸ்திரேலியாவின்
மெல்போர்ன் நகரில் உள்ள ஏரி ஒன்று இயற்கையாக இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது.
கண்ணைக் கவரும்
நிறம், அதிகப்படியான சூரிய ஒளி, குறைந்த மழைப் பொழிவு மற்றும் மிதமான
வெப்பநிலையால் உருவாகிறது. இம்மாதிரியான சூழலில் இந்த ஏரியில் உள்ள பாசிகள்
சிவப்பு நிற நிறமிகளை உண்டாக்குகின்றன.
பெயிண்டை
கொட்டிவிட்டது போல வண்ணமயமாய் ஜொலிக்கும் இந்த ஏரிக்கு கடந்த 2013-ம் ஆண்டில்
இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
சில சுற்றுலா
பயணிகள் இந்த ஏரியின் வண்ணத்துக்கு ஏற்றாற்போல் உடை யணிந்து புகைப்படங்களும்
எடுத்துக் கொள்கின்றனர்
ஆனால், இந்த
ஏரியில் உப்பின் அளவு அதிகமாக இருப்பதாகவும், அது சிலரின் தோலுக்குப் பாதிப்பை
ஏற்படுத்தலாம் என்பதால் ஏரிக்கு மிக அருகில் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள்
எச்சரித்துள்ளனர்.
ஏரிக்கு
அருகில் அழுகிய முட்டையின் துர்நாற்றம் வீசுவதாக சிலர் சமூக வலைதளங்களில்
தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக இந்த
இளஞ்சிவப்பு நிறம் இலையுதிர்க் காலத்தின் இறுதி வரை நீடிக்கும். குளிர்ச்சியான
வெப்பநிலை வந்த பிறகு ஏரி மீண்டும் நீல நிறத்துக்குத் திரும்பும்.
இதைப் போன்ற
‘இளஞ்சிவப்பு ஏரிகள்’ ஆஸ்திரேலியா மட்டுமின்றி, ஸ்பெயின், கனடா, செனகல் போன்ற
நாடுகளிலும் காணப்படுகின்றன.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக