இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளதும், கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படுவதுமான இடம்தான் கும்பகோணம்.
கோவில்களும், மடங்களும் நிறைந்த நகரத்தில் ஒளிந்துள்ள ஆச்சரியங்களை அறிந்துகொள்ள சுற்றுலாப் பயணிகளை இந்நகரம் வரவேற்கிறது.
தஞ்சாவூரிலிருந்து ஏறத்தாழ 40கி.மீ தொலைவிலும், திருச்சியிலிருந்து ஏறத்தாழ 88கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள கோவில் நகரம்தான் கும்பகோணம்.
சிறப்புகள் :
சோழர் காலத்தில் குடந்தை என்று அழைக்கப்பட்டு வந்த கும்பகோணம் ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கியதாக கூறப்படுகிறது.
கும்பகோணத்திலும் அதனைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கோவில்களின் காரணமாக இந்நகரம் கோவில்களின் நகரம் என அழைக்கப்படுகிறது.
மகாமகத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கும்பகோணத்திற்கு வருகிறார்கள்.
ஸ்ரீ கும்பேஸ்வரர் கோவிலானது இங்குள்ள கோவில்களிலேயே மிகப் பழமையானது ஆகும். இப்பிரபஞ்சத்தையும், பூமியிலுள்ள உயிர்களையும் படைத்த பிரம்மதேவனுக்கும் இங்கு கோவில் ஒன்று உள்ளது.
கும்பகோணம் தென் இந்தியாவில் புகழ்பெற்ற கோவில் நகரமாக உள்ளது. புனிதமான இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. காவிரி ஆறு வடக்கிலும் மற்றும் அரசளர் ஆறு தெற்கிலும் ஓடுகிறது. இங்கு பல்வேறு வகையான பட்டு மற்றும் உலோக பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
அனைத்து வயதினர்களும் கோவிலுக்கு செல்வதன் மூலம் அங்குள்ள ஓவியங்களின் அழகையும் நம் முன்னோர்களின் திறமைகளையும் தெரிந்துகொள்ள முடியும்.
உலகத்திலேயே பிரம்மனுக்கு ஒரு சில இடங்களில்தான் கோவில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கும்பகோணத்தில் உள்ளது என்பது இந்நகரத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
எப்படி செல்வது?
அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் கும்பகோணத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளது.
கும்பகோணத்திலிருந்து பிற இடங்களுக்கு செல்வதற்கும் பேருந்து வசதிகள் உள்ளது.
விமானம் வழியாக :
திருச்சி விமான நிலையம்.
ரயில் வழியாக :
தஞ்சாவூர் ரயில் நிலையம்.
கும்பகோணம் ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளது.
பார்க்க வேண்டிய இடங்கள் :
தாராசுரம்.
பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோவில்.
உப்பிலியப்பன் கோவில்.
சோமேஸ்வரர் ஆலயம்.
கம்பகரேஸ்வரர் ஆலயம்.
ஸ்ரீ சாரங்கபாணிநாதர் கோவில்.
ஸ்ரீ கும்பேஸ்வரர் கோவில்.
சுவாமி மலை.
சுந்தர பெருமாள் கோவில்.
திருவழஞ்சுழி.
சோமேஸ்வரர் கோவில்.
இதர சுற்றுலாத்தலங்கள் :
தஞ்சை அரண்மனை.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்.
சிவகங்கைப் பூங்கா.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக