இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருப்பது தான் அருள்மிகு தில்லை காளியம்மன் திருக்கோவில் ஆகும். இந்த திருக்கோவில் ஆனது மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்று ஆகும்.
மூலவர் : தில்லை காளி, பிரம்ம சாமுண்டீஸ்வரி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : சிதம்பரம்
மாவட்டம் : கடலூர்
தல சிறப்பு :
தில்லை காளி என்றும், பிரம்ம சாமுண்டீஸ்வரி என்றும் அழைக்கப்படும் இக்கோவிலில், அம்பிகையின் அம்சமான காளி தேவி முதன்மை தெய்வமாகும்.
இந்த கோவிலில் மட்டுமே பிரம்மனை போலவே நான்கு முகத்துடன் காளி தனி சந்நிதியில் அருளுகிறாள். வீணை வித்யாம்பிகை என்ற பெயரில் சரஸ்வதியும், தட்சணாமூர்த்தி பெண் உருவத்திலும் அருளுகிறார்கள்.
அம்பாளுக்கும், சிவபெருமானுக்கும் நடைபெற்ற நடன போட்டியில் சிவபெருமானை காளியால் வெற்றி பெற முடியாமல் தோற்றுப்போனாள். இதை அடுத்து காளியின் கோபத்துடன் இருந்தாள். காளியின் கோபத்தை போக்கும் வகையில், பிரம்மா காளியை வேதநாயகி என்று புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார். அதன்பேரில் காளி 'பிரம்ம சாமுண்டீஸ்வரி" என்ற பெயரில் பிரம்மனைப்போல் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள். இந்த அம்மனுக்கு இங்கு தனி சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு :
சிவபெருமான், பார்வதிதேவி இருவரில் யார் பெரியவர் என்ற சண்டையில் கோபம் அடைந்த சிவபெருமான் பார்வதிதேவியை காளியாக மாற வேண்டும் என சாபம் கொடுத்தார். பிறகு சாபத்தை தீர்க்க அருள்புரியுமாறு சிவபெருமானிடம், பார்வதி தேவி வேண்டிய போது மிகவும் கொடிய குணம் கொண்ட அசுரர்களால் மக்களுக்கும், தேவர்களுக்கும் ஆபத்து நேர இருக்கிறது. நீ காளியாகவே இருந்து அந்த அசுரர்களை கொல்ல வேண்டும் என்று ஆணையிட்டதுடன் அசுரர்களை வதம் செய்த பிறகு தில்லை திருத்தலத்தில் என்னை நினைத்து தவத்தில் ஆழ்ந்திரு என்று கூறினார்.
சிவபெருமானின் ஆணைக்கு இணங்கி அசுரர்களை வதம் செய்து, பிறகு தில்லை திருத்தலத்தில் சிவபெருமானை நினைத்து தவத்தில் ஆழ்ந்திருந்தார். அங்கு மிகவும் தவ வலிமையுடன் வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர் ஆகியோரின் வணங்குதலின் படி நான் அங்கு நடனம் ஆடுவேன், அப்போது நீ சிவகாமி என்ற பெயருடன் என்னிடம் சரண் அடைவாய் என்று கூறினார். பிறகு பார்வதி தேவியும் அவ்வாறே செய்தார். ஆதலால் அசுரர்களை கொல்லும் உக்கிரக காளியாக தில்லையில் காட்சி தருகிறார்.
பிரார்த்தனை :
தில்லை காளி அம்மன் மிகவும் உக்கிரகத்தோடு காணப்படுவதால் இந்த அம்மனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வெள்ளை வஸ்திரம் சாற்றி குங்கும அர்ச்சனை செய்தால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக