இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வண்டலூர் பூங்கா சென்னையில் அமைந்துள்ளது. இப்பூங்கா அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா எனவும் அழைக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
வண்டலூர் பூங்கா இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும். இங்கு பல்வேறு பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளன.
இந்தியாவில் நவீன முறையில் பராமரிக்கப்படும் மிகச்சில உயிரியல் பூங்காக்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா முதன்மையாக விளங்குகிறது.
சென்னை மட்டுமல்லாது வேறு மாவட்டங்களில் இருக்கும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் விரும்பிச் செல்லும் இடம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவாகும்.
சுமார் கால் நூற்றாண்டுகளாக இப்போதும், எப்போதும் வண்டலூர் உயிரியல் பூங்கா தொடர்ந்து பரவசமூட்டும் இடமாக இருந்து வருகிறது. பசுமையான மரங்கள் பூங்கா முழுவதும் நிழலைக் கொடுக்கின்றன. ஒரு நாள் முழுவதும் மெதுவாகச் சுற்றிப்பார்க்க வேண்டிய இடம் இது.
புலி, வெள்ளைப்புலி, சிங்கம், யானை, மான்கள், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, கங்காரு, கரடி, பாம்பு, முதலை, ஆமை, கிளி, மயில், புறா என அனைத்து வகையான உயிரினங்களையும் இங்கு காணலாம்.
இங்கு கட்டணங்களுடன் வாகனத்தின் மூலம் சுற்றிப் பார்க்கலாம். குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டுச் சாதனங்களும் இங்கு உள்ளன. வண்டலூர் பூங்கா, தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பு பெற்றது.
எப்படி செல்வது?
சென்னையில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
விமானம் வழியாக :
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்.
ரயில் வழியாக :
வண்டலூர் ரயில் நிலையம்.
தாம்பரம் ரயில் நிலையம்.
சென்னை ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
சென்னையில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
முதலைகள் குளம்.
வண்ணத்துப்பூச்சி வீடு.
ஊர்வன வீடு.
இதர சுற்றுலாத்தலங்கள் :
மெரினா கடற்கரை.
கிண்டி குழந்தைகள் பூங்கா.
பிர்லா கோளரங்கம்.
அமீர் மகால்.
அண்ணா நூற்றாண்டு நூலகம்.
கன்னிமாரா பொது நூலகம்.
எலியட்ஸ் கடற்கரை.
புனித ஜார்ஜ் கோட்டை.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக