இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
புதூர் என்னும் ஓர் கிராமத்தில் சாந்தி என்ற பெண் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு சங்கர் என்ற ஒரு மகன் இருந்தான். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சமயத்தில் ஒரு பெரிய விபத்தில் அவளது கணவன் இறந்துவிட்டார்.
பின் அவளுக்கு வாழ்கை மிகவும் வேதனையாகிவிட்டது. ஆனால், அவள் தனது மகனுக்காக மட்டுமே வாழ்ந்து வாழ்ந்தாள். ஒருசமயம் அவளது மகன் இனிப்பைத் தவிர வேறு எதுவும் சாப்பிடாமல் அடம் பிடித்தான். சாந்தி அவனை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றார். மருத்துவர்கள் இது மிகவும் தவறான பழக்கம் என அறிவுரை கூறினார்கள். ஆனால் சங்கர் அதை கேட்காமல் மேலும் இனிப்பை மட்டுமே சாப்பிட்டான்.
அதனால், அவள் சங்கரை திருத்துவதற்காக ஒரு ஞானியிடம் அழைத்துச் செல்ல நினைத்தாள். ஞானி அறிவுரை கூறினால் இவன் கேட்டு திருந்துவான் என்று சாந்தி நினைத்தாள்.
அதனால், அவள் சங்கரை அந்த ஞானியிடம் அழைத்துச் சென்று, இவன் இனிப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதேயில்லை. நான் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். அதற்கு பதிலாக எதுவும் சாப்பிடாமல் இருக்கிறான். இனிப்பை அதிகமாக சாப்பிட்டால் மருத்துவர்கள் உடலில் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள். அவன் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான்.
இவன் எனது ஒரே மகன். என்னால் இவன் பசியாக இருப்பதை பார்க்க முடியாததால் இவனுக்கு இனிப்பு, விஷம் என்று தெரிந்தே கொடுக்க வேண்டி வருகிறது.
மனிதரில் தெய்வமாக கருதப்படும் நீங்கள் கூறும் வார்த்தைகளை இவன் கேட்பான் என்று தங்களிடம் அழைத்து வந்தேன் என்றாள். அந்த ஞானி சங்கரை பார்த்தார்.
அவர், என்னால் இந்த மகனுக்கு இப்போது அறிவுரை கூற முடியாது, ஏனெனில் நானும் இப்போது இனிப்பை மிகவும் விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து வாருங்கள். இந்த இரண்டு வாரங்களுக்கு நானும் இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறேன். இதை என்னால் செய்ய முடிந்தால் பிறகு என்னால் அறிவுரை கூற முடியும். இல்லாவிடில் இதற்கு அறிவுரை கூற சரியான நபர் நான் இல்லை என்றார்.
சாந்தியால் அவர் கூறியதை நம்பவே முடியவில்லை. ஆனால் அந்த மகன் மிகவும் ஈர்ப்படைந்தான். சங்கர் உடனே அந்த ஞானியின் காலில் விழுந்தான். அவன், என் அம்மா பல நபர்களிடம் என்னை அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்கள் அனைவரும் உடனே எனக்கு அறிவுரை கூறினார்கள்.
ஆனால், நேர்மையான முதல் மனிதர் நீங்கள்தான். நீங்கள் எதைச் சொன்னாலும் செய்கிறேன். நான் உங்களை நம்புகிறேன் என்றான். ஞானி கூறிய இரண்டு வாரங்களில் அவரால் அதை கடைபிடிக்க முடியாவிட்டால் எல்லாமும் முடிந்தது. பின் சங்கரை கூட்டிச் செல்ல வேறு எந்த இடமும் இல்லை என்று வருந்தினாள் சாந்தி.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர்கள் ஞானியிடம் வந்தனர். ஞானி சங்கரிடம், மகனே, இனிப்பு சாப்பிடாமல் இருப்பது கடினம்தான். ஆனால் அது முடியாத செயலல்ல. இரண்டு வாரமும் என்னால் இனிப்பு சாப்பிடாமல் இருக்க முடிந்தது.
நான் இனி என் வாழ்வில் இனிப்பை சாப்பிட மாட்டேன் என உனக்கு உறுதியளிக்கிறேன். இப்போது உனக்கு அறிவுரை கூற தகுதி இருக்கிறது என நீ நினைக்கிறாயா? என்றார். எனக்கு நீ அனுமதியளித்தால் மட்டுமே என்னால் உனக்கு அறிவுரை கூற முடியும் என்றார்.
சங்கர், ஞானியிடம் ஐயா! உங்களுக்கு எனது நன்றிகள். உங்களை போன்ற ஒருவர் எனக்கு அறிவுரை கூறுவதற்காக தாங்களும் தனது வாழ்நாள் முழுவதும் இனிப்பு சாப்பிடாமல் இருப்பது என்று முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றான்.
உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த வினாடியிலிருந்து, இனி நானும் இனிப்பை சாப்பிடமாட்டேன் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றான்.
நீதி:
நம்மால் இது நிச்சயம் முடியாது என்று எண்ணும் கடினமான செயல்களைக்கூட திரும்பத் திரும்ப விடாமுயற்சியுடன் செய்தால் கட்டாயம் வெற்றி அடைய முடியும். 'நாம் சரியாக இருந்தால் மட்டுமே பிறருக்கு அறிவுரை கூற முடியும்."
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக