இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கண் சம்மந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் என்னும் ஊரில் உள்ள வலங்கைமான் மாரியம்மனை வழிபட்டால் அம்மனின் அருளால் குணம் அடைவார்கள்.
மூலவர் : வலங்கைமான் மாரியம்மன்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : வலங்கைமான்
மாவட்டம் : திருவாரூர்
தல வரலாறு :
தட்சனின் வேண்டுகோள்படி சக்திதேவி அவனது மகளாகப் பிறந்தாள். தட்சன் சிவபெருமானை வெறுத்தார். ஆனால் தட்சனின் மகள் சக்திதேவி தட்சனின் விருப்பத்திற்கு மாறாக சிவனையே திருமணம் செய்து கொண்டாள். தட்சன் யாகம் செய்த போது சக்திதேவி யாகத்தீயில் விழுந்து மீண்டும் இமயமலையில் அவதரித்தாள்.
சக்திதேவியின் உருவம் நெருப்பில் சிதைந்து போனது. எனவே திருமால் உலகத்தை காப்பாற்ற சிவபெருமானை வேண்டி அழகிய சக்தியை உருவாக்கும் படி வேண்டிக் கேட்டுக் கொண்டார். அவ்வாறு உருவான சக்தி இப்போது பல தலங்களில் அருள்புரிகின்றாள்.
அதனை சக்திபீடங்கள் என்று கூறுவார்கள். இந்த பீடங்கள் 108 தான். ஆனால் சக்திபீடங்களையும் மிஞ்சும் வகையில் சில கோயில்கள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில்.
தல சிறப்பு :
வலங்கைமான் அருகிலுள்ள ஐய்யனார் கோவில் வழியாக ஒரு பிராமண தம்பதியரால் ஒரு பெண்குழந்தை விட்டு செல்லப்பட்டது. அந்த குழந்தையை அந்த பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் எடுத்து வளர்த்து வந்தனர். ஆனால் அந்த குழந்தைக்கு அம்மை நோய் ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
குழந்தையை தங்கள் வீட்டு கொல்லைப்புறத்தில் கீற்றுக்கொட்டகை அமைத்து சமாதி வைத்தனர். சமாதிக்கு தினமும் விளக்கேற்றி வந்தனர். வீட்டில் செய்யும் உணவுப்பண்டங்களை தினமும் படைத்து வணங்கி வந்தனர். காலப்போக்கில் சமாதியை அனைவரும் வழிபடத்துவங்கினர்.
வேண்டியவர்களுக்கு வேண்டிய பலன் கிடைத்ததால் அந்த குழந்தையை சீதளாதேவி என பெயரிட்டு அம்மனாக கருதி வழிபட்டனர். சீதளம் என்றால் குளிர்ச்சி என பொருள். அம்மை நோய் ஏற்பட்டு குளிர்ந்து போனதால் அந்த பெண் தெய்வம் சீதளாதேவி என அழைக்கப்படுகிறாள்.
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலுக்கு பங்குனி மாதத்தில் பாடைக்காவடி திருவிழா நடக்கும். மாரியம்மனுக்கு காப்பு கட்டி விழாவை துவக்குவார்கள். நோயுற்றவர்கள் தங்கள் நோய் நீங்கினால் பாடைக்காவடி எடுப்பதாக மகா மாரியம்மனை வேண்டிக் கொள்வார்கள்.
பிரார்த்தனை :
இறக்க இருக்கம் தருணத்திலும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் அம்மன் பக்தர்களை காப்பாற்றுவதாக ஐதீகம். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணத் தடை, பார்வை இழந்தவர்கள், அம்மை நோய் கண்டவர்கள் ஆகியோர் குணம் பெறுகின்றனர். அதனால் நோய் நீங்கியதும், புனிதநீராடி, பாடை கட்டி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவு செய்வார்கள்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக