Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 26 ஜூலை, 2019

வாழ்க்கை..!


Image result for வாழ்க்கை

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ஒரு ஊரில் சண்முகம் என்பவர் தன் மனைவி, மகன் மற்றும் பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். சண்முகம் உடல்நலக் குறைவால் பல மருத்துவமனைகளுக்குச் சென்றும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் சண்முகத்தின் உடல் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

இந்தக் குடும்பத்துக்கே குருவாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார். அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் அழ ஆரம்பித்தனர்.

இறந்தவரின் மனைவி குருவைப் பார்த்து, 'குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..? நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்.!" என்றார்.!

குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவர்களின் சோகம் குறையவில்லை. குருஜி சற்று நேரம் சிந்தித்து 'ஒரு கோப்பையில் தண்ணீர் கொண்டு வாருங்கள் என்றார்." அருகிலிருந்தவர்கள் தண்ணீர் கொண்டு வந்து தந்தனர்.

அவர் கோப்பையை சண்முகத்தின் உடல் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார். பின்னர், 'இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம். இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!" என்றார்..!

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை. குருஜி இறந்தவரின் தந்தையைக் கேட்டார் 'ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா?" என்றார்.

தந்தை சொன்னார், 'நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு? அவளுக்காக நான் வாழ வேண்டும்"

தாயைக் கேட்க அவரும், 'அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது?" என்று மறுத்துவிட்டார்.

மனைவி சொன்னாள், 'நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது? அவனுக்காக நான் வாழ வேண்டும்" என்று அவளும் மறுத்துவிட்டாள்.

குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார் 'குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா?"

அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள் 'குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா? அவன் ஒரு குழந்தை இனிமேல்தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா?" என்றாள்.

குருஜி சொன்னார், 'உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிவிட்டது. எனவே தான் கடவுள் இவரை எடுத்துக் கொண்டார். இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்" என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார்..!

நீதி:

'உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்", 'பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!". எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மன மகிழ்ச்சியோடு வாழ முயற்சிப்போம்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக