இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்தியாவின் முன்னணி தனியார் கம்பெனிகளில் தனி இடம் பிடித்திருக்கும் Reliance
இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இப்போது மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.
ஃபோர்ப்ஸ் (Forbes) நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டாப் உலக பணக்காரர்கள் பட்டியலை
தனக்கே உரிய சில விதிமுறைகள் படி தேர்வு செய்வது போல, ஃபார்ச்சூன் (Fortune)
என்கிற பிசினஸ் பத்திரிகையும், தனக்கென சில விதிமுறைகள் படி ஃபார்ச்சூன் 500 என
உலகின் டாப் 500 கம்பெனிகள் பட்டியலை வெளியிடுகிறது.
2010-ம் ஆண்டில்
இருந்து இந்தியாவின் டாப் 500 கம்பெனிகளுக்கான பட்டியலையும் வெளியிட்டு
வருகிறார்கள். அந்த பட்டியலில் 2010-ம் ஆண்டில் இருந்து மத்திய அரசின் இந்தியன்
ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தான், இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்து
வருகிறது. அதோடு உலகின் டாப் 500 கம்பெனிகள் பட்டியலிலும் இந்தியாவின் பிரதிநிதி
போல இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தான் முன்னிலை வகித்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு
காற்று Reliance பக்கம் வீசி இருக்கிறது.
Reliance அசுர
வளர்ச்சி!
உலகின் டாப் 500 நிறுவனங்களில் IOC-யை முந்திய ரிலையன்ஸ்! இந்த
வருடம் வெளியான உலகின் டாப் 500 நிறுவனங்கள் பட்டியலில் Reliance நிறுவனம் 106-வது
இடத்தைப் பிடித்திருக்கிறது. மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 117
இடத்தில் இருக்கிறது. ஆக இந்தியாவின் ஃபார்ச்சூன் 500 கம்பெனிகள் பட்டியலில்
இந்தியாவின் டாப் கம்பெனியாகவும், உலகின் டாப் 500 கம்பெனிகள் பட்டியலில்
இந்தியாவின் சார்பாக 106 இடம் பிடித்து, இந்தியாவின் முதல் நிறுவனமாகவும்
வந்திருக்கிறது Reliance.
மார்ச் 2018-ல் Reliance நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 62.3
பில்லியன் டாலர் சம்பாதித்திருக்கிறார்கள். ஆனால் மார்ச் 2019-ல் சுமார் 32.1%
அதிகரித்து 82.3 பில்லியன் டாலர் சம்பாதித்து ஐஓசியை பின்னுக்கு தள்ளி இருக்கிறது
Reliance.
Reliance மற்றும் ஐஓசி தவிர ஓஎன்ஜிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப்
இந்தியா, டாடா மோட்டார்ஸ், பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களும் இந்த உலகின்
டாப் 500 கம்பெனிகள் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றனவாம். ஓஎன்ஜிசி 37 இடங்கள்
சரிந்து 160-வது இடத்திலும் எஸ்பிஐ 20 இடங்கள் சரிந்து 236-வது இடத்திலும், டாடா
மோட்டார்ஸ் 33 இடங்கள் சரிந்து 265-வது இடத்திலும், பாரத் பெட்ரோலியம் 39 இடங்கள்
சரிந்து 275-வது இடத்திலும் இருக்கிறதாம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக