இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அழியாத பொக்கிஷமாக 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான, குடவரைக் கோவிலான லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் அவசியம் காண வேண்டிய பல பொக்கிஷங்கள் உள்ளது....!அவைகள் :
நாமக்கல் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்கு நேர் எதிர்புறம் ஆஞ்சநேய சுவாமி ஆலயம் உள்ளது.
மலை அடிவாரத்தில் உள்ள குடைவரை கோவில் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம். லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தில் உள்ள நரசிம்மர் சிலை மலையை குடைந்து உருவாக்கப்பட்டது.
ஹிரண்ய வதம் செய்ததால் நரசிம்மரின் கை நகங்களின் கூர்மையை சுவாமி சிலையில் காணலாம். மற்றுமொரு அதிசயம் சுவாமியின் உள்ளங்கையில் ரத்த கறை இன்றும் காண முடியும்.
வழக்கமாக லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தில் சுவாமியின் மடியில் லக்ஷ்மியை அமர்ந்த கோலத்தில் காணலாம். ஆனால் இங்கு லக்ஷ்மி, சுவாமியின் மார்பில் உள்ளார்.
குடவரை கோவில் என்பதால் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வது கிடையாது. உற்சவருக்கு தான் இங்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. நாமகிரி தாயார் (மகாலட்சுமி) சன்னதி தனியாக கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது.
மேலும் கணிதமேதை ராமானுஜம் அவர்களுக்கு ஒரு முறை தாம் மிகவும் கடினமாக உணர்ந்த ஒரு கணிதத்தை, நாமகிரித் தாயார் அவருடைய கனவில் தோன்றி தெளிவுபடுத்தினாராம்.
இது மட்டுமே நாமக்கலின் சிறப்பல்ல....
நாமக்கல் நகரின் 10 மைல் தொலைவில் அமைந்திருக்கும் 'சதுரகிரி" என்கிற 'கொல்லி மலை", பல அரிய வகை மூலிகைகள் நிறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக இசையில் மிகவும் சிறந்து விளங்கிய 'பல்லவி நரசிம்ம அய்யங்கார்" மற்றும் ஸ்ரீ நாமகிரி தாயார் மீது அற்புதமாகப் பாடல் பாடிய 'நரகரி ஆச்சார்" ஆகியோர் தோன்றிய பூமி இது. மேலும், தேசபக்தியில் மிகச் சிறந்து விளங்கிய 'நாமக்கல் கவிஞர்" பிறந்த ஊரும் இதுதான்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக