இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கூகுள்
நிறுவனத்தின் வீடியோ சாட் மொபைல் செயலியான கூகுள் டுயோ ஐ.ஒ.எஸ். மற்றும்
ஆண்ட்ராய்டு தளங்களில் கிடைக்கிறது. இந்த செயலியை டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்
கம்ப்யூட்டர்களிலும் கூகுள் க்ரோம் பிரவுசர் மூலம் பயன்படுத்த முடியும்.
இந்த சேவையை
கூகுள் அக்கவுண்ட் உடன் இணைத்தும், இணைக்காமலும் பயன்படுத்தலாம். பயனர்கள்
தங்களின் மொபைல் நம்பரை பதிவு செய்தபின் செயலியின் அனைத்து அம்சங்களையும்
பயன்படுத்த முடியும்.
நெட்வொர்க்
வேகம் குறைவாக இருக்கும் பகுதிகளிலும் அழைப்புகளை உயர் தரத்தில் மேற்கொள்ளும் வசதி
வழங்கப்படுகிறது. முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்பட்டுள்ளதால் அழைப்புகள்
அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறது.
காண்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கும் நபர்களுக்கு
நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதில் உள்ள நாக்நாக் ஆப்ஷன் கொண்டு செயலியில்
உள்ள அம்சங்கள் அனைத்தையும் லைவ் பிரீவியூ செய்ய முடியும். இதன் டெவலப்பர்கள்
செயலியில் பல்வேறு பயனுள்ள அம்சங்களை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் ஆடியோ
கால் மட்டும் மேற்கொள்ளும் வசதி ஏப்ரல் 2017 இல் வழங்கப்பட்டது.
அவ்வாறு
செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம் கொண்டு பயனர்கள் புகைப்படங்களை பகிர்ந்து
கொள்ள முடியும். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சம் ஒருவழியாக செயலியில்
தற்சமயம் வழங்கப்பட்டு இருக்கிறது.
வீடியோ கால்
செயலியில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் வசதி அத்தனை அவசியம் இல்லை என்பதாலேயே
இதன் வெளியீட்டிற்கு இத்தனை காலம் ஆனதாக எடுத்துக் கொள்ளலாம்.
கூகுள் டுயோ செயலியில்
புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது எப்படி?
கூகுள் டுயோ
செயலியில் புகைப்படங்களை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விவரங்களை
தொடர்ந்து பார்ப்போம்.
வழிமுறை 1:
நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய புகைப்படத்தை ஃபைல் எக்ஸ்புளோரர் செயலி அல்லது
கேலரியில் இருந்து நேரடியாக தேர்வு செய்ய வேண்டும். வழிமுறை
2: ஷேர் பட்டனை
க்ளிக் செய்ய வேண்டும். வழிமுறை
3: ஷேர்
மெனுவில் உள்ள டுயோ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
4: நீங்கள்
தேர்வு செய்த புகைப்படம் எடிட்டிங் விண்டோவில் திறக்கும். வழிமுறை
5: இனி A என
குறியீடு கொண்ட ஐகான் இருக்கும். இதனை கொண்டு புகைப்படத்தில் எழுத்துக்களை சேர்க்க
முடியும். இதில் நீங்கள் விரும்பும் நிறத்தை தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள்
விரும்பும் நிறங்களை தேர்வு செய்ததும், Next என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
6: இந்த
ஆப்ஷனில் நீங்கள் புகைப்படத்தை பகிர்ந்து கொள்ள வேண்டி காண்டாக்ட்களை தேர்வு செய்ய
வேண்டும். இந்த ஆப்ஷனில் அதிகபட்சம் ஐந்து காண்டாக்ட்களை தேர்வு செய்யலாம்.
புகைப்படத்தை
பெறுவோருக்கு கூகுள் டுயோ செயலியின் நோட்டிஃபிகேஷன் மூலம் தகவலை தெரிந்து கொள்ள
முடியும். நோட்டிஃபிகேஷனை க்ளிக் செய்தோ அல்லது காண்டாக்ட் பக்கத்திற்கு சென்றும்
பயனர்கள் புகைப்படங்களை பார்க்க முடியும்.
கால்பேக்
அல்லது புகைப்படங்களுக்கு பதில் அளிக்கும் ஆப்ஷன்கள் பயனர்களுக்கு வழங்கப்படும்.
இந்த புகைப்படம் 24 மணி நேரத்திற்கு பின் தானாக மறைந்து விடும். இதனால்
பயனர்களுக்கு புகைப்படம் வேண்டுமெனில், அது மறையும் முன் டவுன்லோடு செய்து கொள்ள
வேண்டும்.
புகைப்படத்தின்
வலதுபுறம் மேல்பக்கமாக இருக்கும் ஐகானை க்ளிக் செய்து டவுன்லோடு செய்யலாம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக