இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ 1,600 நகரங்கள்
மற்றும் சிறுநகரங்களில் தனது மிகப்பெரிய நிலையான பிராட்பேண்ட் திட்டத்தை
தொடங்கியதன் மூலம், அதன் அதிவேக இணைய சேவை வழங்குதலை விரிவுபடுத்தியுள்ளது என்று
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ ஜிகாபைபர்
ஜியோ ஜிகாபைபர்
ஜியோ ஜிகாபைபர்
என்றழைக்கப்படும் இந்த திட்டம், கேபிள்களைப் பயன்படுத்தி பழைய பாணியில் வீடுகளுக்கு
இணையத்திற்கு வழங்கும். இந்த வணிகத்தின் மூலம் ஏற்கனவே வழங்கிவரும் 4ஜி இணைய
வசதியை வயர்லெஸ் டெலிகாம் சேவைகளுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என அந்நிறுவனம்
எதிர்பார்க்கிறது
வணிக ரீதியாக நிலையான பிராட்பேண்ட்
வணிக ரீதியாக நிலையான பிராட்பேண்ட்
ஜியோ நிறுவனம்
இப்போது 315 மில்லியன் வாடிக்கையாளர்களுடன், 39.8% வருவாய் சந்தை பங்குகளை கொண்ட
மிகப்பெரிய சேவை வழங்குநராக திகழ்கிறது. அடுத்த மூன்று மாதங்களில் வணிக ரீதியாக
நிலையான பிராட்பேண்ட் சேவைகளை தொடங்க ஜியோ நிறுவனம் தயாராக உள்ளது என தகவல்கள்
தெரிவிக்கின்றன. ஏற்கனவே குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் முன்னோட்ட சேவைகளை
துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
4.92 பில்லியன் டாலர்
4.92 பில்லியன் டாலர்
இந்த விரிவாக்கம் கூட ஒரு சுவாரஸ்யமான நேரத்தில்
வெளியாகியுள்ளது. இந்திய அரசாங்கம் 5ஜி அலைக்கற்றைகளை 4.92 பில்லியன் டாலர் ரூபாய்
அதிகபட்ச அடிப்படை விலையில் ஏலத்தில் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இருப்பினும் தற்போதுள்ள அதிவேக இணைய தொழில்நுட்பமான 5ஜிக்கு போட்டியாக, ஜியோ தனது
நிலையான பிராட்பேண்ட் சேவையை அதிக வேகத்தில் வழங்கவுள்ளது. வேகமான இணைய
தொழில்நுட்பம் 5GG ஐப் பெறும். 5ஜி-ன் வேகமானது நொடிக்கு 300 மெகாபிட் என்ற
அதிகபட்ச அளவில் உள்ளது.
1,100 நகரங்கள்
1,100 நகரங்கள்
ஜியோ நிறுவனம் அதன்
நிலையான பிராட்பேண்டில் மிகப்பெரிய அளவில் ரிஸ்க் எடுத்துள்ளது . எப்படியெனில்
1,100 நகரங்கள் மற்றும் 60 மில்லியன் வீடுகளை உள்ளடக்கிய அதன் முந்தைய இலக்கை
தற்போது விரிவாக்கியுள்ளது. அதன் காரணமாக இப்போது அந்நிறுவனம் 1,600 நகரங்களில்
உள்ள 75 மில்லியன் வீடுகளை அடைய விரும்புகிறது.
ஃபைபர்-டூ-ஹோம்
ஃபைபர்-டூ-ஹோம்
ஃபைபர்-டூ-ஹோம் ( fibre-to-the-home - FTTH)
தொழில்நுட்பத்தின் கீழ், கம்பியில்லா வசதியின் மூலம் மலிவான மற்றும் வேகமான
பிராட்பேண்ட் சேவைகளை வழங்கமுடியும். இதில் பைபர் கேபிளை பதிக்க அனுமதி பெற
வேண்டியதில்லை என்பதால் மிகவும் உதவியாக இருக்கும். இது செலவுகளை மட்டும்
குறைக்காமல், கம்பிகள் பதிக்கும் கடினமாக செயல்முறையையும் தவிர்க்கிறது. மற்ற
கம்பியில்லா வணிகத்தை போலில்லாமல், எப்டிடிஎச் ஒரு எதிர்கால ஆதாரம் வணிகம் மற்றும்
ஒரு முறை முதலீடு மட்டுமே தேவைபடும். இதன்காரணமாக ஜியோ அதன் வியாபாரத்தை
தக்கவைத்துக் கொள்ளுவதற்கு தொடர்ந்து அலைக்கற்றைய ஏலம் எடுக்க வேண்டியதில்லை.
மேலும் இதன் மூலம் நெரிசலான மற்றும் தொலைதூர கிராமப் பகுதிகளை எளிதாக அடையலாம்.
பாரத் சஞ்சார் நிகாம்
பாரத் சஞ்சார் நிகாம்
தற்போது காப்பர்
கம்பி மூலம் இணைய சேவையை பெறும் நிலையான பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் ஏப்ரல் 30,
2011 வாக்கில் 18 மில்லியன் என்ற அளவில் இருந்தனர். அரசுக்கு சொந்தமான பாரத்
சஞ்சார் நிகாம் (BSNL) நிறுவனம் சந்தையில் 9.15 மில்லியன் சந்தாதாரர்களுடன்
ஆதிக்கம் செலுத்துகிறது.
20 மில்லியன் வீடுகளை அடைய நம்பிக்கையுடன் உள்ளது
20 மில்லியன் வீடுகளை அடைய நம்பிக்கையுடன் உள்ளது
தனியார் நிறுவனங்களை இப்போது அதை துண்டாட முனைப்புடன்
செயல்பட்டு வருகின்றன. ஏர்டெல் நிறுவனமும் அதன் எப்டிடிஎச் திட்டமான அல்பைட் மூலம்
குறைந்தபட்சமாக 20 மில்லியன் வீடுகளை அடைய நம்பிக்கையுடன் உள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக