Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 ஜூலை, 2019

டிஜிட்டல் இந்தியா மரணமாஸ்:ரயில்வே பாதுகாப்பு பயணம்-கியூஆர்கோட் அறிமுகம்

100 விழுக்காடு பாதுகாப்பு :  
 
 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 
பிஜேபி தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்து வருகின்றது. ரயில்வே துறையிலும் டிஜிட்டல் மயக்கப்பட்டு வருகின்றது.

டிஜிட்டல்இந்தியா மரணமாஸ்:ரயில்வே பாதுகாப்பு:
கியூஆர்கோட் அறிமுகம்! ரயில்வே முற்றிலும் டிஜிட்டல் மையம் ஆக்கப்பட்டு வருகின்றது. பயணிகளுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்கும் வையிலும் முனைப்பு காட்டி வருகின்றது. இந்நிலையில், ரயில்களில் ரயில்வே போலீசாரின் கண்காணிப்பை நூறு விழுக்காடு உறுதிப்படுத்தும் வகையில், கியூ ஆர் கோட் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது பயணிகளின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும்.

கியூஆர் கோட் முறை அமல்:
 தமிழகத்தில் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு ரயிலுக்கு தலா இரு ரயில்வே காவலர்கள் பணியில் ஈடுபடுவது வழக்கம். அவர்கள் தங்களுக்கான பணி நேரம் முழுவதும் ரயில் பெட்டிகளில் தீவிர கண்காணிப்பிலும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர்.

அவ்வாறு பணியில் இருக்கும் காவலர்கள் முழு விழிப்புடனும், அர்ப்பணிப்புடனும் செயல்படுகின்றனரா? என்பதை உறுதி செய்யும் வகையில் புதிய முறை ஒன்றை ரயில்வே காவல்துறை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, ரயில்களில் உள்ள நான்கு பெட்டிகளில் கியூ ஆர் கோட் அச்சிடப்பட்ட பலகை பொருத்தப்பட்டு இருக்கும்.

பணியில் இருப்பதை உறுதி செய்யும்: பணியில் இருப்பதை உறுதி செய்யும்: குறிப்பிட்ட ரயிலில் பாதுகாப்புப் பணிக்குச் செல்லும் காவலர்கள், முதலாவது பெட்டியில் இருக்கும் கியூ ஆர் கோட் பலகையில், தங்களது செல்போன்களை காண்பித்து, கோட்- ஸ்கேன் செய்ய வேண்டும்.

ஸ்கேன் செய்யும் போது, அந்தக் காவலரின் விவரங்கள் ரயில்வே போலீஸ் கட்டுப்பாட்டறைக்கு பரிமாற்றப்பட்டு, அவர் பணியில் இருப்பது உறுதி செய்யப்படும்.

கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்:

மேலும், ரயில் நிலையங்களிலும் கியூ ஆர் கோட் பலகை இருக்கும். ரயில்கள் நின்று செல்லும் நிலையங்களில் எல்லாம், காவலர்கள் இதேபோல் செய்து தாங்கள், கண்காணிப்புப் பணியில் விழிப்புடன் இருப்பதை கட்டுப்பாட்டறைக்கு தெரிவிக்க வேண்டும்.

சென்னையில் துவக்கம்:
அதேபோல் ரயிலில் உள்ள பெட்டிகளுக்கெல்லாம் போலீசார் ரோந்து செல்கின்றனரா? என்பதும் உறுதி செய்யப்படும். ரயிலில் உள்ள 4 பெட்டிகளில் உள்ள கியூ ஆர் கோட்-ஐயும் குறிப்பிட்ட கால இடைவெளியில் போலீசார் ஸ்கேன் செய்ய வேண்டும்.

முதற்கட்டமாக எழும்பூரில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி, ராக்போர்ட், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில், கியூ ஆர் கோட் முறை அமலுக்கு வருகிறது.

100 விழுக்காடு பாதுகாப்பு :
அதேபோல் சென்டிரலில் இருந்து புறப்படும் புளு மவுண்டென், சேரன், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 4 ரயில்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த சில நாட்களில் அனைத்து ரயில்களுக்கும், இது விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் பயணிகளுக்கும், அவர்களது உடைமைகளுக்குமான பாதுகாப்பு 100 விழுக்காடு உறுதி செய்யப்படும்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக