வேகமாக
வளர்ந்து வரும் வீடியோ கேம் துறையில், இந்திய விமானப்படை முதல் முறையாகக் கால்
பதித்துள்ளது.
இந்தியர்களின்
தேச பக்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்திய விமானப்படை புதிய IAF என்ற மொபைல் கேமை
அறிமுகம் செய்துள்ளது.
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
‘அபிநந்தத் வர்தமன்' அவதார்
இந்த புதிய மொபைல்
கேம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு தளத்திலும் இந்த கேம்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேமின் முக்கிய அவதார் கேரக்டரில் இந்திய
விமானப்படையின் விங் கமாண்டர் ‘அபிநந்தத் வர்தமன்' உருவாக்கப்பட்டுள்ளார்.
IAF மொபைல் கேம்
இந்த IAF மொபைல் கேம்
இல் போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்ற பல
விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கேமின் கிராபிக்ஸ் தரமும் அட்டகாசமாக உள்ளது.
பல்வேறு வகையான வான்வழி வாகனங்கள், லெண்டிங் தளங்கள், பைலட்கள் என முழு
விமானப்படையை கண்முன் காட்டுகிறது இந்த கேம்.
பப்ஜி கேமிற்கு போட்டியாக IAF கேம்
எதிரிகளின் ப்ரோ
விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் மிஷன், அடுத்தநாட்டு எல்லைக்குள் ஊடுருவி வெளி
வரும் மிஷன் போன்று பல விதமான கேமிங் விளையாட்டை இந்த கேமில் இந்திய
விமானப்படையினர் உருவாக்கியுள்ளனர். பப்ஜி கேமிற்கு போட்டியாக இந்த IAF கேம்
இந்தியாவில் பிரபலம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் வெளியீடு
இந்த புதிய IAF
மொபைல் கேம் வரும் ஜூலை 31, முதல் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் என்று இந்திய
விமானப்படை அறிவித்துள்ளது. தற்பொழுது சிங்கள் பிளேயர் மோடு மட்டுமே அறிமுகம்
செய்யப்படவுள்ளது. அடுத்து வரவிருக்கும் வாரங்களில் மல்டி பிளேயர் மோடு அறிமுகம்
செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக