Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 23 ஜூலை, 2019

ஆபாச வலைத்தளங்கள் உங்களின் தகவல்களை விற்கின்றன! இன்காக்னிடோ மோடில் உள்ள லூப்ஹோல்!






கூகுள் அறிவித்துள்ள புதிய அறிவிப்பின்படி, கூகுள் குரோம் வெப் பிரவுசரில் உள்ள இன்காக்னிடோ மோடில் ஒரு லூப்ஹோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் இன்காக்னிடோ மோடில் சர்ஃப் செய்யும் எந்த வலைத்தளமும் பிரைவேட் ஆகாது என்பதே நிஜம். 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


இன்காக்னிடோ பயன்படுத்த முக்கிய காரணம்

இன்காக்னிடோ பயன்படுத்த முக்கிய காரணம்

கூகுள் குரோம் பயனராக இருந்தாலும் சரி, மொஜிலா ஃபாக்ஸ் பயனராக இருந்தாலும் சரி, அனைவரும் இன்காக்னிடோ மோடு சேவையைப் பயன்படுத்தாமல் இருந்திருக்க முடியாது. Browse Invincible என்ற இந்த வார்த்தை தான் அனைவரும் இன்காக்னிடோ மோடு சேவையை பயன்படுத்த ஒரு முக்கிய காரணம்.


பிரைவேட்டாக இணையம் பயன்படுத்தலாம்

இன்காக்னிடோ மோடு சேவையைப் பயனர் பயன்படுத்தும் பொழுது, பிரவுசர் ஹிஸ்டரி போன்ற தகவல்கள் சேமிக்கப்படமாட்டாது, அதேபோல் வலைத்தள கேச்சி(cache) மற்றும் குக்கீஸ்(cookies) உங்கள் சாதனத்தில் சேவ் ஆகாது என்ற காரணத்தினாலும், முக்கியமாக பிரைவேட்டாக இணையம் பயன்படுத்தலாம் என்பதனாலும் மட்டுமே இன்காக்னிடோ மோடைப் பயன்படுத்துகிறோம்

போட்டு உடைக்கப்பட்ட உண்மை

ஆனால், தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த லூப்ஹோலால் நீங்கள் பிரைவேட் பிரவுசிங் செய்கிறீர்களா அல்லது சாதாரணமாக பிரவுசிங் செய்கிறீர்களா என்பதை நீங்கள் பயன்படுத்தும் இணையதளங்களால் கண்டறியமுடியும் என்பதே உண்மை. இதுவரை நீங்கள் இன்காக்னிடோ மோடில் செய்துவந்த அனைத்து செயல்களும் பிரைவேட் இல்லை என்று போட்டு உடைக்கப்பட்டுள்ளது.


எதுவும் பிரைவேட் இல்லை

இன்காக்னிடோ மோடில், Chrome's Filesystem எனப்படும் API சேவை டிசேபிள் செய்யப்படும். இதன் மூலம்தான் பிரவுசரில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் நமது சாதனத்தில் சேமிக்கப்படாமல் இருக்கும். ஆனால், இதை வைத்து நீங்கள் பிரைவேட் பிரவுசிங் செய்கிறீர்களா என்பதை இணையதளங்களால் எளிதாகக் கண்டறிய முடியும்.ஆபாச வலைத்தளங்கள்

ஆபாச வலைத்தளங்கள்

93% பயனர்கள் ஆபாச வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு மட்டுமே இன்காக்னிடோ மோடு சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.ஆபாச வலைத்தளங்கள் உங்களின் தகவல்களை விற்கின்றன

ஆபாச வலைத்தளங்கள் உங்களின் தகவல்களை விற்கின்றன

இன்காக்னிட்டோ மோடில் உள்ள லூப்ஹோல் மூலம் ஆபாச இணையதளங்கள் பயனாளர்களின் தகவல்களைச் சேகரித்து மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு அவற்றை விற்கின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.இதற்கான தீர்வு!

இதற்கான தீர்வு!

அண்மையில் தான் கூகுள் நிறுவனம் இந்த லூப்ஹோல் பற்றி அறிந்துள்ளது, நிலைமையைச் சரி செய்ய உடனடியாக நடவடிக்கையையும் எடுத்துள்ளது. கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூலை 30 ஆம் தேதி வரவிருக்கும் குரோம்76 அப்டேட்டில் இந்த இன்காக்னிடோ மோடு லூப்ஹோல் சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக