Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 29 ஜூலை, 2019

பறவைகள் பல விதம் – Part 1

முதலாம் உலகப்போரில் அமெரிக்க இராணுவத்தில் “ஸெர் அமி” ஒரு தூதுவர் அவசர தகவல் களை கொண்டு சேர்ப்பது அவர் வேலை அவருக்கு பணியின் போது ஒரு கண்ணும் காலும் பாதிக்கப் பட்டது ஒரு காலுக்கு பதில் கட்டை கால் பொறுத்தப் பட்டது. பல உயிர்களை காப்பாற்றிய அசகாய பணிக்கு அவருக்கு ஹீரோ சர்வீஸ் மெடல் வழங்கி சிறப்பித்தார்கள். இடைவிடாது பறந்து பறந்து வேலை செய்பவர். ஆம்…அவர் ஒரு புறா. இறந்த பின் உடலை வாசிங்டன் மியூசியத்தில் பாதுகாப்பாக வைத்து இருக்கிறார்கள்.

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com





british-army-pigeon-service

இதே போல அமெரிக்காவில் துருக்கிய வல்லூரை எஞ்சினீயர் வேலைக்கு வைத்திருந்தார்கள். இவரோட வேலை நிலத்தடி கேஸ் (எண்ணெய்) குழாயில் வெடிப்பை கண்டுபிடித்து அறிவிப்பது.



c_cherami_display

விசம் உள்ள பறவையும் இருக்கா?
இருக்கு பப்புவா நியூகினியாவில் பாடும் பறவை பிட்டூய் (hooded pitohui) இதன் சிறகுகள் மற்றும் தோல் விச தன்மையானது. அதற்கு எப்படி விச தன்மை என்று பார்த்தால் அது உட்கொள்ளும் ஒரு வகை வண்டினால் (Choresine Beetle) என்று கண்டறிந்தார்கள்.

ஒரு கோழியானது வருடத்திற்கு 200 – 300 முட்டைகள் போடும். வெள்ளை லகான் கோழி ஒன்று அதிக பட்சம் 371 முட்டைகள் போட்டு சாதனை செய்திருக்கிறது(1979).
கோழி முட்டையில் மஞ்சள் கரு பார்த்திருப்பீர்கள். அனேகமாக ஒன்று இருக்கும். அதில் அதிக பட்சமாக 9 மஞ்சள் கருக்கள் இருந்தன என்பது ஒரு சாதனை பதிவு.


மொரீசியஸ் தீவில் அதிக வயதான மரங்கள் (600 வருசங்கள்) இருந்தன அந்த வகையில் குறைந்த வயதான் மரங்கள் இல்லை ஏன் ? என்பதை பின்னர் கண்டு பிடித்தார்கள் “டோடோ ” எனும் புதர் வாழ் பறவை இந்த மரத்தின் பழங்களை சாப்பிடுமாம். அவற்றின் எச்சங்களில் விழுந்த கொட்டைகள் மூலமாக மட்டுமே அந்த வகை மரம் முளைக்குமாம். 16 ம் நூற்றாண்டில் இத்தீவிற்கு சென்ற மாலுமிகள் பயம் அறியாத இந்த பறவைகளை வேட்டயாடி அழித்தார்கள். இன்று அந்த பறவைகள் இல்லை மரங்கள் மட்டுமே சாட்சியாய்.



dodo-skeleto109f0af7
சுமார் 120 மிலியன் வருசங்களுக்கு முன் வாழ்ந்து கொண்டிருந்த பறவை காக்கையை போல் இருக்குமாம். ஆங்கிலத்தில் “ஆர்கியோபேட்ரிக்ஸ்” (Archaeopteryx) ஜெர்மனி வார்த்தையில் இதற்கு “முதல் றெக்கை” எனப் பொருள் படுகிறது.

பறவைகளுக்கும் முதலைகளுக்கும் தொடர்பு இருக்கிறா? என்றால் இருக்கு. 200 மிலியன் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவை முதலைகள் அப்படிப் பட்ட ஊர்வன இனத்தை சேர்ந்த உயிரினத்தின் வழி தோன்றல் பறவை. டினோசரஸ் எல்லாம் இப்படி தோன்றியவை. 65 மிலியன் வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட மாபெரும் அழிவில் எல்லாம் இறந்து போய் விட்டன.


தண்ணீர் கலந்த பாலை அன்னம் தனியாக பிரிக்கும் என்பதெல்லாம் கட்டுகதை.
மடகாஸ்கரில் 17 ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்த “யானை பறவை” மனிதன் வேட்டை யாடி அழித்தொழித்து விட்டான். இதன் முட்டையின் எடை 27 பவுண்டுகள்.

முட்டைகளில் ஹம்மிங்க் (ரீங்கார) பறவை யின் முட்டை தான் அளவில் சிறியது. அப்ப பெரியது என்று எடுத்துக் கொண்டால் அது ஆஸ்ட் ரிச்(நெருப்பு கோழி) பறவையினது. ஆஸ்ட்ரிச் முட்டையை (தண்ணீரில்) வேக வைக்க 2 மணிகள் ஆகும்.

archaeoptde

ஆஸ்ட் ரிச், கோழி, வாத்து,கடற் பறவை இவைகள் முட்டையில் இருந்து குஞ்சு பொறித்த பின் ஓரளவு வளர்ந்திருக்கும் அதாவது….தாய் இல்லாமல் உணவு தேடி பிழைத்துக் கொள்ளும். ஆந்தை, மரங்கொத்தி, சிறிய பாடும் பறவைகள் இவைகள் முழு வளர்ச்சி அடைய தாயின் அரவணைப்பு தேவைப் படும்.



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக