Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 ஜூலை, 2019

ஆள் குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுக்கும் “Samsung”.. பீதியில் இந்திய ஊழியர்கள்?

 பணி நீக்கம்?

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

ஸ்மார்ட்போன் உலகின் ஜாம்பாவான் ஆன சாம்சங் (Samsung) நிறுவனம், இந்தியாவில் 1000க்கும் மேற்பட்டோரை வேலையிலிருந்து நீக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இன்றைய ஸ்மார்ட்போன் உலகில், இளைஞர்களின் கவறும் இடத்தில் முதலிடத்தில் இருப்பது சாம்சங் தான். ஏனெனில் விலையும் ஏதுவாக இருப்பதால் மக்களின் விருப்பமான பிராண்டுகளில் இதுவும் ஒன்றாகவே உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தை சீன நிறுவனங்கள் நெருக்குவதாகவும், இதனால் விற்பனை விலையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

இவ்வாறு ஸ்மார்ட்போன் மற்றும் சாம்சங் டிவி விலைகளை குறைப்பதால், இந்த நிறுவனத்தின் லாபம் குறையலாம் என்றும் கருதப்படுகிறது
 ஏற்கனவே பணி நீக்கம்?
பணி நீக்கம்?
இந்த நிலையில் இந்த லாப குறைவை தடுக்க சாம்சங் இந்தியா, பணியில் உள்ள 1000 பேரை வேலையிலிருந்து நீக்க போவதாகவும் அதிகாரிகள் வட்டாரங்களில் கூறப்படுகிறது, எனினும் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாக நிலையில் பணியாளர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பணி நீக்கம்?
நாட்டில் மிகப்பெரிய நுகர்வோரை கொண்டுள்ள நிறுவனமான சாம்சங் மிண்ணனு மற்றும் மொபைல் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வருவாயை அதிகரிக்கும் நோக்கிலும், செலவுகளை குறைக்கும் விதத்திலும் இந்த பணி நீக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதன் முதல் கட்ட நடவடிக்கையாக ஏற்கனவே தொலைத்தொடர்பு துறையில் 150 பேரை வீட்டுக் அனுப்பியுள்ளதாம்

சாம்சங் நிறுவனம். சாம்சங் இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளது!
இதுகுறித்து சாம்சங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், சாம்சங் நிறுவனம் இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளது. அதோடு தொடர்ந்து முதலீடுகளையும் அதிகரித்து வருகிறது. மேலும் சாம்சங் மிகப்பெரிய தொழிற்சாலைகளை அமைத்தல் மற்றும் 5ஜி தொடர்பான புதிய வணிகங்களை பற்றி ஆராய்வது என தொடர்ந்து செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

வளர வளர வேலைவாய்ப்பை அதிகரிப்போம்?
சாம்சங் நிறுவனம் நாங்கள் வளர வளர இன்னும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்போம் என்றும், அதே நேரத்தில் எங்களின் நீண்டகால வெற்றிகாக, எங்களின் வணிகத்தை தொடர்ந்து திறமையாகவும், வலுமையாகவும் மாற்றவும் செயல்பட்டு வருகிறோம். இந்த நிலையில் சாம்சங் நிறுவனம் அதற்கேற்ப தன்னை மாற்றியமைத்துக் கொண்டு வருகிறது.

எனினும் சாம்சங் நிறுவனம் வேலை வாய்ப்புகளை அளிப்பதில் உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளதாம்.

ஸ்மார்ட்போன் விலைகுறைப்பு?
கடந்த 18 மாதங்களில் மட்டும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவி விலைகள் 25 - 40 சதவிகிதம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கதக்கது. ஆன்லைன் விற்பனை அதிகரித்துள்ளதால், இந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவி விற்பனைக்காக விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபமும் வெகுவாக குறைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் எத்தனைபேர்?
சாம்சங் வணிகத்தை பொறுத்தவரையில் இந்தியாவில் புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்தியதில் சந்தையில் நாங்கள் வலுவாக நின்றோம். இதனால் 2019 ஆம் ஆண்டு மிக சிறப்பான ஆண்டாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது. அதோடு எங்களது மதிப்பீட்டின்படி, இந்தியாவில் சாம்சங் 20,000 ஊழியர்களை கொண்டுள்ளது.

குறிப்பாக சாம்சங் இந்தியா கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே வேலைவாய்ப்புகளை முடக்கியுள்ளது. அதோடு வரவிருக்கும் பண்டிகை கால விற்பனையை அடுத்து தான், வேலைவாய்ப்புகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

2017 – 2018லியே சரிவு தொடங்கியது? 2017 – 2018லியே சரிவு தொடங்கியது?

சாம்சங் இந்தியா கடந்த 2017 -2018ம் ஆண்டிலேயே சரிவினை காணத் தொடங்கியது. எனினும் ஆரம்பத்தில் நிகர லாபத்திலேயே சரிவைக் காண தொடங்கியது. குறிப்பாக கடந்த 2018ம் நிதியாண்டில் நிகரலாபம் 10.7 சதவிகிதம் குறைந்து, 3712 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் வருவாய் 61,065 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது. இதனால் சாம்சங் தொடர்ந்து நெருக்கடியில் உள்ளதாகவும் கருதப்படுகிறது.

ஆக இதுபோன்ற அதிக செலவினங்களை தடுக்கவே இந்த பணி நீக்கம் என்றும் கருதப்படுகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக