Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 ஜூலை, 2019

நிஜம் தாங்க.. ஏர்டெல்லுடன் இணைந்த டாடா டெலிசர்வீசஸ்..

நிஜம் தாங்க.. ஏர்டெல்லுடன் இணைந்த டாடா டெலிசர்வீசஸ்.. வலுவடையும் Bharti Airtel!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே ஜியோவால் திண்டாடி வரும் நிலையில், பல நிறுவனங்கள் காணமல் போய் விட்டன. இந்த நிலையில் டாடா டெலிசர்வீசஸ் நுகர்வோர் மொபைல் வர்த்தகத்தை, பார்தி ஏர்டெல் நிறுவனம் முழுமையாக கையகப்படுத்தியுள்ளது. இது குறித்து இந்த இரு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 டாடா டெலிசர்வீசஸ் (Tata Teleservices Limited ) மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மஹாராஷ்டிரா (Tata Teleservices (Maharashtra) Limited ) நிறுவனத்தை பார்தி ஏர்டெல் மற்றும் பார்தி ஹெக்ஸாகாம் ஆகியவற்றுடன் இணைக்கும் நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை முழுமையாக நிறைவடைந்ததாக இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் டாடா டெலிசர்வீசஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மஹாராஷ்டிரா நிறுவனங்களுக்கு சொந்தமான அனைத்து வாடிக்கையாளர்கள், சொத்துகள் மற்றும் அலைகற்றை உள்ளிட்ட அனைத்தும் பார்தி ஏர்டெல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஏர்டெல் நிறுவனம் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 19 தொலைத் தொடர்பு வட்டங்களில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் பார்தி ஏர்டெலுக்கு சொந்தமாகியுள்ளது. இந்த இணைப்பின் மூலம் பார்தி ஏர்டெல் அலைகற்றை மேலும் வலுவடையும் என்றும் கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே தொலைத் தொடர்பு துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் கடந்த மாதம் பல வாடிக்கையாளர்களை இழந்ததாகவும் ஏர்டெல் அறிவித்துள்ளது. இதனால் ஜியோ நிறுவனத்திற்கு போட்டி போட முடியாவிட்டாலும் அதற்குண்டான நடவடிக்கைகளில் ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.

 ஒரு புறம் வாடிக்கையாளர்கள் இழந்து வந்தாலும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மிக வலுவாக தனது ஏர்டெல் நிறுவனத்தை அடித்தளமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவில் பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு நஷ்டம் என்றாலும், வெளி நாடுகளில் முன்னிலை வகித்து வருவதால் இந்த நஷ்டத்தினை ஈடுகட்டியதாகவும் ஏர்டெல் முன்னரே அறிவித்தது.

இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் தற்போது தான் விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத் தக்கது.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக