Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 ஜூலை, 2019

டிக்டாக் ஆப் வழியாக முக்கிய விஷியங்கள் திருடும் சீனா: புதிய குற்றச்சாட்டு.!


இந்தியாவுக்கு ஆபத்தா?    

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

டிக் டாக் செயலி வழியாக முக்கிய விஷயங்களை திருடுவதாக புதிய குற்றச்சாட்டு வெடித்துள்ளது. டிக்டாக் செயலி மூலம் சீனா திருடி வருவதாகவும் மக்களவையில் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.

தற்போது தான் டிக்டாக் செயலி மீது இருந்த தடை உத்தரவை நீக்கியுள்ளனர். இந்நிலையில் புதிய சர்ச்சையும் மக்களவையில் வெடித்துள்ளதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டிக் டாக் செயலி
டிக் டாக் செயலியை உலகம் முழுக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. இதில் உள்ள டப்ஸ்மேச்சுகள் மற்றும் ஆடல் பாடல்களையும் சிறிய குழந்தைகள் ,இளைஞர்கள், பெரியோர்கள் என அனைத்து தரப்பினரும் செய்து செய்து வருகின்றனர். இது உலகம் முழுக்கவும் பல்வேறு தரப்பினரையும் கவர்ந்து ஈர்த்துள்ளது.

டிக்டாக் செயலிக்கு என்று பிரியர்களும் இருந்து வருகின்றனர்.

டிக்டாக் மீது தடை:
டாக் டாக் ஆப்பில் ஆபாச நடனம் மற்றும் சமூகத்தை சீர்குலைக்கும் கருத்துக்கள் இடம் பெறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், டக்டாக் ஆப்பை கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை உத்தரவும் பிறப்பித்து.

மேலும், டிக் டாக் நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பட்டது.

கூகுள் செயலியில் இருந்து நீக்கம்:
உடடினயாக கூகுள் நிறுவனத்தின் செயலியிலிருந்து உடனடியாக டிக் டாக் ஆப் நீக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, டிக்டாக் நிர்வாகத்தின் சார்பிலும் உச்ச நீதிமன்றத்திலும், மேல் முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, வழக்கு மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்வேறு கட்டுப்பாடுகளை டிக்டாக் நிர்வாகத்தின் மீது விதிக்கப்பட்டது.

தடை நீக்கம் செய்தது:
ஆபாசமாக பதிவிட்டால் உடனடியாக தானாகவே டாக்டாக் ஆப் செயலிழந்து விடும் என்று நிறுவனம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் டிக்டாக் மீதான தடையை நீக்கியது. இதன் பிறகு கூகுள் நிறுவனமும் டாக் டாக் செயலியை வழங்கி வருகின்றது.

டிக்டாக் மீது குற்றச்சாட்டு:
இந்நிலையில், மக்களவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய திருவனந்தபுரம் எம்பி சசிதரூர், டிக்டாக் செயலி மூலம் சட்டவிரோதமான முறையில் முக்கியத் தரவுகளை சீனா திருடி வருவதாகவும், இதனால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா குழந்தைகள் தகவல் திருட்டு :
சமீபத்தில் அமெரிக்கக் குழந்தைகள் குறித்த தகவல்களைத் திருடியதற்காக டிக்டாக் நிறுவனத்திற்கு அந்நாடு 5 புள்ளி 7 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். ஸ்மார்ட் போன்கள், மக்களைக் கவரும் செயலிகள் மூலம் முக்கியத் தகவல்கள் திருடப்பட்டு வருவதாகவும் சசிதரூர் குறிப்பிட்டார்

இந்தியாவுக்கு ஆபத்தா?
சீனத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மூலம் திருடப்படும் இந்தத் தகவல்கள் நமது தேசத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதாக கவலை தெரிவித்த அவர், ஜனநாயகத்தைக் காப்பதற்கான வலுவான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக