![எம்.டி.என்.எல்லுக்கு தொடர் நஷ்டமே](https://tamil.goodreturns.in/img/2019/08/1-152-1565083972.jpg)
இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பொதுத்துறையை
சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல் நிறுவனத்திற்கு கடந்த இரண்டு
மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கடந்த திங்கட்கிழமை ஆர்பாட்டம்
நடத்தியுள்ளனர் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் தொழில்சங்கத்தினர்.
இந்த நிலையில்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ என்று வந்ததோ அன்றிலிருந்தே தனியார் தொலை தொடர்பு
நிறுவனங்களாட்டும், பொதுத்துறையை சேர்ந்த BSNL, MTNL நிறுவனங்களாட்டும், தொடர்ந்து
நஷ்டத்திலேயே இயங்கி வருகின்றன. அதிலும் பொதுத்துறையை சேர்ந்த MTNL நிறுவனம்
தங்களது ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமலும், செயல்பாட்டு மூலதனம்
இல்லாமலும், சேவையை சரிவரக் கொடுக்க முடியாமலும் தவித்து வருகின்றது.
சம்பளம் பாக்கி & ஓய்வூதியம் கொடுங்க
இந்த நிலையில்
பொதுத்துறையை சேர்ந்த இந்த நிறுவனங்களில் கட்டாய ஒய்வு கொடுக்கபோவதாகவும் இந்த
பொதுத்துறை நிறுவனங்கள் கூறி வந்தன. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக கொடுக்க
வேண்டிய சம்பளம் மற்றும் ஓய்வு ஊதியங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் ஊழியர்கள்
கடந்த திங்கட்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த
போராட்டத்தில் ஊழியர்களின் கட்டாய ஓய்வுக்கு முன்னதாகவே இந்த சம்பள பாக்கியை தர
வேண்டும் என்றும், எம்.டி.என்.எல்லின் நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்
வி.கே டோமர் கூறியுள்ளார்.
ஊழியர்களை சோர்வடைய செய்கிறார்கள்
அரசாங்கத்தின்
நோக்கமும் மற்றும் அதன் நிர்வாகமும் சரியாக இல்லை. இதனால் தான், அவர்கள்
ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்காமல் ஊழியர்களை மனசோர்வைடையச்
செய்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொண்டே சம்பளம் சரியாக தராமல் தாமதமாக
கொடுத்து வந்தனர்,
இந்த நிலையில்
கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு, அந்த சம்பளமும் எங்களுக்கு கிடைக்கவில்லை
என்றும் டோமர் கூறியுள்ளார்.
போராட்டம் தொடரும்
எம்.டி.என்.எல்
நிறுவனத்தின் சுமார் 8,000 ஊழியர்கள் சம்பளத்தை உடனடியாக விடுவிக்கக் கோரி
போராட்டம் நடத்தி வருவதாக கூறிய டோமர், மேலும் நாங்கள் தொலைத் தொடர்பு துறையின்
இணைச் செயலாளரை சந்தித்து எம்,டி.என்.எல் ஊழியர்களுக்கான திட்டம் குறித்து
விவாதிக்க, செயலாளருடன் ஒரு சந்திப்பைக் கோரியுள்ளோம்.
மேலும் எங்கள்
பிரச்சனைகள் தீர்க்கப்படாத வரை நாங்கள் எங்கள் எதிர்ப்பை தொடர்ந்து தெரிவிப்போம்
என்றும் டோமர் கூறியுள்ளார்.
மொத்தம் 22,000 ஊழியர்களுக்கு ரூ.160 கோடி
இது குறித்து
கருத்து தெரிவித்துள்ள எம்.டி.என்.எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரம்,
நிறுவனம் இந்த வார இறுதிக்குள் ஒரு மாத சம்பளத்தை கொடுக்க முயற்சிக்கிறது என்றும்
தெரிவித்துள்ளது. மேலும் எம்.டி.என்.எல் நிறுவனம் மொத்தம் 22,000 ஊழியர்களைக்
கொண்டுள்ளது. இதற்காக இந்த நிறுவனத்தின் மாத சம்பளம் 160 கோடி ரூபாய் என்றும்
கூறியுள்ளது.
எம்.டி.என்.எல்லுக்கு தொடர் நஷ்டமே
எம்.டி.என்.எல்லின்
மொத்த இழப்பு கடந்த மார்ச் 2019வுடன் முடிவடைந்த ஆண்டில் 3,388 கோடி ரூபாயாக
அதிகரித்துள்ளது. இதுவே 2017 - 2018ம் ஆண்டில் 2,970.9 கோடி ரூபாயாக நஷ்டம்
இருந்தது. மேலும் இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் வருவாய் 15 சதவிகிதம்
குறைந்து 2,085.41 கோடி ரூபாயாக உள்ளது
இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் இந்த
போராட்டத்தில், எம்.டி.என்.எல்லின் ஓய்வு பெற்ற ஊழியர்களும் இணைந்துள்ளனராம்.
PF நிதியையும் விடுவிக்க வேண்டும்
மேலும் ஓய்வு
பெற்ற ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியையும் (PF)இந்த நிறுவனம்
செலுத்தவில்லையாம். ஆக தாமதமின்றி இந்த PF நிதியையும் விடுவிக்க வேண்டும் என
கோரிக்கை வைத்துள்ளதாகவும், டெல்லி ஓய்வு பெற்ற தொலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கத்
பொதுச் செயலாளர் எஸ்.எஸ் நந்தா கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக