இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஐ.டி துறையில் பல நிறுவனங்கள் கால்
பதித்திருந்தாலும் அதில் மிகவும் பிரபலமடைந்த பெயர் பெற்ற நிறுவனங்கள் வெகு சிலவே.
அவ்வாறு கால் பதித்த நிறுவனங்களில்
இந்தியாவின் 3வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தை பற்றிதான் இனிவரும் பகுதியில்
பார்க்க உள்ளோம். முதலில் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனமாக இருந்து தற்போது ஐ.டி
நிறுவனங்களில் மிகப்பெரிய இடம் பிடித்திருக்கிறது இந்த நிறுவனம்.
தற்போதைய சூழலில் 50 வயது வரை வாழ்வதே
போராட்டமாக இருக்கும்போது, ஒரு நிறுவனத்தை 50 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக
நடத்தி வருவது என்பது சாதாரண விஷயமல்ல. அது எந்த நிறுவனம் என்று யோசித்து கொண்டு
இருக்கிறீர்களா?
விப்ரோ நிறுவனத்தை பற்றியும், விப்ரோ
நிறுவனத்தின் இந்த மாபெரும் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவரை பற்றியும்தான் இனி
பார்க்க போகிறோம்.
விப்ரோ நிறுவனத்தை பற்றி
தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐ.டி நிறுவனம்
விப்ரோ, பெங்கள ருவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்தியாவின் பெரிய
நகரங்கள், வெளிநாடுகளிலும் விப்ரோ நிறுவனத்துக்கு கிளைகள் உள்ளன.
விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் மிகுந்த
மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரிய ஒரு நபர்.
2011ஆம் ஆண்டு தகவல் சேவை
வழங்குநர்கள் பட்டியலில் உலக அளவில் 31வது இடத்தில் உள்ள இந்நிறுவனம் தகவல்
தொழில்நுட்பச் சேவைகள், தகவல் தொழில்நுட்ப தயாரிப்புகள், நுகர்வோர் சேவை மற்றும்
விளக்குகள் ஆகிய மூன்று பிரிவுகளில் செயல்படுகிறது.
நாட்டின் முன்னணி நிறுவனங்களில்
ஒன்றாக திகழும் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் மற்றும்
நன்கொடையாளர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார். அவர்தான் விப்ரோ நிறுவனத்தின்
மாபெரும் வெற்றிக்கு காரணமான அசிம் பிரேம்ஜி.
அசிம் பிரேம்ஜி, 1945ஆம் ஆண்டு ஜுலை
24ஆம் தேதி குஜராத் மாநிலத்தில், முகம்மது ஹசம் பிரேம்ஜி என்பவருக்கு மகனாக
பிறந்தார். இவரின் தாய்மொழி குஜராத்தி.
இவரின் தந்தை பரவலாக அறியப்படுகிற
தொழில்முனைவோர் ஆவார். மேலும் இவர், பர்மா அரிசியின் அரசர் (Rice King of Burma )
என பரவலாக அறியப்பட்டார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவுக்குப்பின் முகம்மது அலி
ஜின்னா இவரை பாகிஸ்தான் வருமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் இவர் இந்தியாவிலேயே
வாழ்ந்தார்.
அசிம் பிரேம்ஜி தன்னுடைய 21வது வயதில்
அமெரிக்காவில் உள்ள Stanford universityயில் BE Electrical engineering
படித்துக்கொண்டிருந்தார். அப்போது இவரின் அப்பா மறைந்த செய்தி கிடைத்து இந்தியா
வந்த இவர் மீண்டும் படிப்பை தொடர அமெரிக்கா செல்லவில்லை.
அசிம் பிரேம்ஜியின் தொழில் பயணம்
அவரது 21வது வயதில், அவரது தந்தை விட்டுச்சென்ற எண்ணெய் நிறுவனத்தின் தலைவராக
துவங்கியது. அன்று தொடங்கிய இவரின் தொழில் பயணம், இன்று இந்தியாவின் மிகப்பெரிய
பணக்காரராக உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
விப்ரோ நிறுவனம் 1945ஆம் ஆண்டு
டிசம்பர் 29ஆம் தேதி அன்று மும்பையில் மேற்கு இந்திய தயாரிப்புகள் லிமிடெட் எனும்
பெயரில், முகம்மது ஹசம் பிரேம்ஜி மூலம் தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இந்நிறுவனம் காய்கறிகள்
மூலம் நெய், வனஸ்பதி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகிய தயாரிப்புகளை மகாராஷ்டிர
மாநிலம் ஜலகோன் மாவட்ட அம்ல்னர் என்னும் ஊரில் தயாரித்து வந்தது.
கிஸான் என்ற பெயரில் செயல்பட்ட
இந்நிறுவனம், ஒட்டகம் மற்றும் சூரியகாந்தி பூவை குழுமச் சின்னமாக வைத்தது. அன்று
முதல் இன்று வரை விப்ரோ தங்களது அனைத்து வியாபாரங்களிலும் சூரியகாந்தி பூவை
குழுமச் சின்னமாக வைத்துள்ளது.
இப்போது விப்ரோ என்பது ஐடி
நிறுவனமாகத்தான் நமக்குத் தெரியும். ஆனால் அசிம் பிரேம்ஜி 1966ஆம் ஆண்டு
நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்ற சமயத்தில் சமையல் எண்ணெய் தயாரிக்கும் வெஸ்ட்டன்
இந்தியா புராடக்ட்ஸ் நிறுவனமாக மட்டுமே இருந்தது.
விப்ரோவின் வளர்ச்சி :
சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும்
நிறுவனமாக இருந்த விப்ரோ இப்போது பலவிதமான பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது.
1977ஆம் ஆண்டு நிறுவனத்தின் பெயரை விப்ரோ புராடக்ட்ஸ் என அசிம் பிரேம்ஜி
மாற்றினார்.
அசிம் பிரேம்ஜி, 1980-களில் தகவல்
தொழில்நுட்பத் துறையில் களம் இறங்கினார். அச்சமயம் தொழில்நுட்ப துறையின் முக்கியத்துவத்தை
உணர்ந்த அவர் செண்டிநெல் கார்ப்பரேஷன் உடன் இணைந்து "மினி
கம்ப்யூட்டரை"உற்பத்தி செய்தார்.
அதனைத் தொடர்ந்து பிபிஓ, இன்போடெக்,
சிஸ்டம்ஸ், பர்சனல் கம்ப்யூட்டர்ஸ் என விப்ரோவின் தளத்தை விரிவாக்கிக் கொண்டே
இருந்தார்.
தற்போது ஐடி துறையில் "விப்ரோ"
தனக்கென ஒரு மிகச்சிறந்த இடத்தை பெற்றிருக்கிறது.
இந்திய மென்பொருள் துறையின்
சக்கரவர்த்தி என அறியப்படும் அசிம் பிரேம்ஜி, சுமார் நாற்பது ஆண்டுகளாக விப்ரோ
நிறுவனத்தினை வழிநடத்தி உலகமென்பொருள் துறையின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக
ஆனார். விப்ரோ நிறுவனத்தில் இவர் வசம் மட்டும் 75 சதவீத பங்குகள் உள்ளன.
அசிம் பிரேம்ஜி செய்த பிழை :
அசிம் பிரேம்ஜி 1980-களில் சாப்ட்வேர்
பிரிவை தொடங்க முயற்சித்தார். அப்போது அதற்கு தலைமை வகிக்க சரியான நபர் ஒருவரை
தேடிக்கொண்டிருந்தார். பட்னி நிறுவனத்தில் ஒருவரை தேர்ந்தெடுத்து, இந்த துறை
மற்றும் வாய்ப்பு குறித்து பிரேம்ஜி நீண்டநேரம் விவாதித்தார்.
இருந்தாலும் அசிம் பிரேம்ஜி அவருக்கு
அந்த வேலைவாய்ப்பை வழங்கவில்லை. அது ஒருபுறம் இருக்க, விப்ரோவில் இருந்து
வெளியேறிய நண்பர்கள் தொடங்கியதுதான் மைண்ட்ட்ரீ என்னும் ஐடி நிறுவனம்.
10 தொழில்நுட்ப வல்லுநர்கள் சேர்ந்து
1999ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்கினார்கள். இதில் அசோக் சூடா, சுப்ரதோ பக்ஷி,
கிருஷ்ணகுமார், ஜானகிராமன் உள்ளிட்டோர் விப்ரோவில் இருந்து விலகி சென்று புதிய
நிறுவனத்தை தொடங்கினார்கள்.
ஆரம்ப காலத்தில் பட்னி நிறுவனத்தில்
ஒருவரை தேர்ந்தெடுத்து பேசிக்கொண்டிருந்து விட்டு பின்பு வேலை வழங்காமல் விட்டாரே
அவர்தான் பின்னாளில் இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கிய நாராயணமூர்த்தி.
அசிம் பிரேம்ஜி செய்த பிழைகளில்
முக்கியமானது நாராயணமூர்த்தியை கணிக்க தவறியது. எனினும், இதன்மூலம் இந்திய
தொழில்நுட்ப வரலாற்றில் நாராயணமூர்த்தியின் இடத்தை எழுதச் செய்ததும் இவர்தான்
என்பது முக்கியமானது.
அசிம் பிரேம்ஜி-யின் நிதி :
2010ஆம் ஆண்டில் ஆசியாவீக் எனும் இதழ்
நடத்திய வாக்கெடுப்பில் உலகில் சக்திவாய்ந்த 20 மனிதர்களில் ஒருவராக அசிம்
பிரேம்ஜி அறியப்படுகிறார். மேலும், 2004 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் டைம் இதழ்
நடத்திய வாக்கெடுப்பில் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராகத் தேர்வானார்.
2017ஆம் ஆண்டின் நிலவரப்படி 19.5
பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பைக் கொண்ட இவர், இந்தியாவின்
செல்வந்தர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சர்வதேச அளவில் தொழில்நுட்பத்
துறையில் கோடீஸ்வரர்கள் என்னும் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டது. இதில் இரண்டு
இந்தியர்கள் உள்ளனர். ஒருவர் அசிம் பிரேம்ஜி, மற்றொருவர் ஷிவ் நாடார். அசிம்
பிரேம்ஜி இந்த பட்டியலில் 13வது இடத்தில் இருக்கிறார்.
சொத்து மதிப்பு பட்டியலில்
மட்டுமல்லாமல் கொடையாளிகள் பட்டியலிலும் அசிம் பிரேம்ஜி இருக்கிறார். கடந்த
2015ஆம் ஆண்டில் அசிம் பிரேம்ஜி 27,514 கோடி ரூபாயை கொடையாக வழங்கி இருக்கிறார்.
இந்திய அளவில் அதிகளவு சமூக மேம்பாட்டு திட்டங்களுக்காக செலவிட்டவரும் இவரே.
இதுவரை அசிம் பிரேம்ஜி மொத்தம் ஒரு
லட்சம் கோடி சம்பாதித்து அதில் 53 ஆயிரம் கோடியை நாட்டின் வளர்ச்சிக்காக
செலவிட்டுள்ளார்.
சமுதாய முன்னேற்றம், மருத்துவம்,
மிகுந்த பின் தங்கிய கிராமங்களின் வளர்ச்சி, சுற்றுச்சூழல், கல்வி, விவசாயம்
முதலான பல்வேறு ஆக்கப்பணிகளுக்கு அசிம் பிரேம்ஜி-யின் நிதி பயன்படுகிறது.
The Giving Pledge :
உலக பெரும் பணக்காரர்கள் அவர்களது
வங்கி இருப்பில் இருந்து சுமார் 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை ஏழை மக்களின்
முன்னேற்றத்திற்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அதை
செய்தவர்கள், உலகின் டாப் 10 பணக்காரர்களில் முதல் இருவர்களான வாரன் பஃபெட்,
பில்கேட்ஸ் இருவரும் ஆவர்.
வாரன் பஃபெட், பில்கேட்ஸ் இருவரும்
அதற்காக, The Giving Pledge என்கிற இயக்கத்தை ஆரம்பித்தபோது, அதில் கையெழுத்திட்ட
முதல் மற்றும் ஒரே இந்திய தொழிலதிபர் அசிம் பிரேம்ஜி மட்டுமே.
அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை :
அசிம் பிரேம்ஜி எந்த ஊர், நாடு
சென்றாலும் விலை உயர்ந்த நட்சத்திர ஹோட்டல்களில் தங்க மாட்டாராம். தனது மகன்
திருமணத்தை கூட, எளிய முறையில் சில லட்சம் செலவிலேயே இவர் நடத்தினார்.
அளவுக்கு மீறிய வறுமை, ஆடம்பரம்
இரண்டுமே ஆபத்தானது என்னும் பைபிள் வசனத்தை அடிக்கடி இவர் மேற்கோள் காட்டுவார்.
இவர் பிறப்பால் இஸ்லாமியர் என்றாலும்
நல்ல விஷயங்கள் எதில் இருந்தாலும் ஏற்று கொள்ளக்கூடியவர்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் ராபர்ட்
ஓவன் இங்கிலாந்தில் ஏற்படுத்திய தொழிற்புரட்சியை போல் அசிம் பிரேம்ஜி இந்தியாவில்
ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். தன் போன்ற பல முதலாளிகளை இந்த நாட்டில் உருவாக்கி
அதன்மூலம் இந்த தேசம் வேலையில்லா திண்டாட்டம் இல்லாத ஒரு தேசமாக உருவாக வேண்டும்
என்பதே இவரின் ஒரே லட்சியம்.
இவர் தனது மொத்த சொத்தில்
பாதிக்கும்மேல் கொடையாக கொடுத்துள்ளார். தனது பெயரில் அறக்கட்டளை அமைத்து,
இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தி வருகிறார்.
இந்தியப் பள்ளிகளில் உயர் பிரிவு
மாணவர்கள்-தாழ்ந்த வகுப்பை சேர்ந்த மாணவர்கள் என்ற ஏற்றத்தாழ்வை நீக்கி,
பள்ளிக்கல்வி முறையை நவீனப்படுத்தும் நோக்கத்தில் 'அசிம் பிரேம்ஜி
அறக்கட்டளை" என்ற அமைப்பு ஒன்றை இவர் ஏற்படுத்தினார்.
இவர் ஏழை மாணவர்களுக்கு சிறந்த
கல்வியளிப்பதற்காக ஏராளமான நன்கொடையை வழங்கியிருக்கிறார். இந்திய தொழிலதிபர்கள்
மத்தியில் வித்தியாசமானவராக விளங்கி வருகிறார்.
மேலும், அனைவருக்கும் தரமான, சமமான
கல்வியை கிடைக்க செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இந்த நிறுவனம்.
தாராள மனமுடைய கொடையாளிகள் பட்டியலில்
முதலிடத்தில் உள்ள அசிம் பிரேம்ஜி 27,514 கோடி ரூபாய் கல்வித்துறைக்கு
கொடையளித்துள்ளார். அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை எட்டு மாநிலங்களில் உள்ள 3.5 லட்சம்
பள்ளிகளில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அசிம் பிரேம்ஜிக்கு கிடைத்த விருதுகள் :
தன்னுடைய தொலைநோக்குப் பார்வை மற்றும்
தலைமைத்துவத்தால் உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் நிறுவனங்களுள் ஒன்றாக விப்ரோவை
உருவாக்கியதற்காக எல்லா காலக் கணிப்பிலும் மிகச்சிறந்த தொழில்முனைவோர்களுள்
ஒருவராக பிசினஸ் வீக் என்னும் இதழ் வெளியிட்டு நிறுவனம், அசிம் பிரேம்ஜிக்கு
பட்டம் தந்து பெருமைப்படுத்தியது.
2000ஆம் ஆண்டில் மணிபால் அகாடமி
இவருக்கு கௌரவ மருத்துவர் பட்டம் வழங்கியது.
2005ஆம் ஆண்டில் வணிகத்தில் இவரின்
சாதனைகளைப் பாராட்டும் விதமாக இவருக்கு இந்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கியது.
2006ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள
தேசிய தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி இவருக்கு தொழிலில் சிறந்த தொலைநோக்குப்
பார்வை கொண்டவர் எனும் விருதினை வழங்கியது.
2009ஆம் ஆண்டில் தொழில்துறையில்
இவரின் சேவையைப் பாராட்டி கனெடிகட்டில் உள்ள வெஸ்லியன் பல்கலைக்கழகம் இவருக்கு
கௌரவ மருத்துவர் பட்டம் வழங்கியது.
2011ஆம் ஆண்டில் இரண்டாவது பெரிய
குடியுரிமை விருதான பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.
2013ல் தி எகனாமிக் டைம்ஸ் வாழ்நாள்
சாதனையாளர் விருது பெற்றார்.
2015ல் மைசூர் பல்கலைக்கழகம் இவருக்கு
கௌரவ மருத்துவர் பட்டம் வழங்கியது.
2017ல் இந்தியா டுடே இவரை இந்தியாவின்
பலம் பொருந்திய 50 நபர்களுள் 9வது நபராக அறிவித்தது.
பிரான்ஸ் அரசு அசிம் பிரேம்ஜிக்கு
செவாலியர் விருதை அளித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறைக்கு இவர் அளித்த
பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதை அளிப்பதாக பிரான்ஸ் அரசு
அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக