இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நாம்
கிராமத்தில் சிறுவயதில் விளையாடிய விளையாட்டுகள் எப்போதும் பசுமையாய் நம்மிடம்
ஞாபகம் இருந்துக்கொண்டே இருக்கும்.
குழந்தைகள்
விளையாடும் விளையாட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் இருக்கும். ஆனால், அவர்கள்
அந்த விளையாட்டை உற்சாகத்துடன் விளையாடும்போது அந்த இடமே களைகட்டிவிடும்.
அந்த
வகையில் குழந்தைகள் குதூகலமாக விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றான மேலே பந்து கீழே
பந்து விளையாட்டை பற்றி பார்க்கலாம்.
எத்தனை பேர் விளையாடலாம்?
இந்த
விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
முதலில்
விளையாடும் நபர்கள் அனைவரும் சம எண்ணிக்கையில் மூன்று குழுக்களாக பிரிந்து கொள்ள
வேண்டும்.
பிறகு
மைதானத்தில் ஒரு நேர்க்கோடு வரைந்துக் கொள்ள வேண்டும். மூன்று குழுவில் உள்ள
நபர்களும் அந்த நேர்க்கோட்டில் ஒருவர் பின் ஒருவராக இடைவெளி விட்டு வரிசையாக
நின்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு
நின்ற பிறகு மூன்று குழுவிலும் முதலில் நிற்பவர் கையில் ஒரு பெரிய பந்தை வைத்துக்
கொள்ள வேண்டும். இப்போது விளையாட்டைத் தொடங்கலாம்.
குழுவில்
முதலில் நிற்பவர் கையில் உள்ள பந்தை திரும்பி பார்க்காமல் தலைக்கு மேலே பின்னால்
இருப்பவருக்கு பந்தை வீச வேண்டும்.
அவ்வாறு
வீசும் பந்தை தவறவிடாமல் குழுவில் இருக்கும் இரண்டாவது நபர் பிடித்துவிட்டால்,
அந்த பந்தை குனிந்தபடி இரண்டு கால்களுக்குகிடையே பின்னால் இருக்கும் நபருக்கு வீச
வேண்டும்.
அந்த
பந்தை பிடிக்கும் மூன்றாவது நபர் தலைக்கு மேல் அடுத்த நபருக்கு வீச வேண்டும்.
இதுபோல் அடுத்து அடுத்ததாக இருக்கும் நபர்களுக்கு மாற்றி மாற்றி பந்தை வீச
வேண்டும்.
இவ்வாறு
உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கும்போது பந்து யார் கையில் கடைசியாக இருக்கிறதோ
அவர் வேகமாக ஓடி வந்து வரிசையில் முதலாவதாக நின்றுக் கொள்ள வேண்டும். குழுவில்
முதலாவதாக நிற்கும் நபர் அப்படியே பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
பிறகு
முதலாவதாக நிற்கும் நபர் தலைக்கும் மேல், அடுத்தவர் கால்களுக்கிடையேயும் மீண்டும்
பந்தை வீச வேண்டும். மீண்டும் பந்து கடைசி நபரிடம் சென்றவுடன் அவர் முதலாவதாக வர
வேண்டும். இப்படியே ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த
ஆட்டத்தில் மொத்தம் பத்து சுற்றுகள் இருக்கும். பத்து சுற்றுகளும் முடிந்ததும்,
ஆட்டத்தின் தொடக்கத்தில் குழுவில் முதல் நபர் யார் நின்றாரோ, அதே நபர் மீண்டும்
முதலாவதாக எந்தக் குழுவில் நிற்கிறாரோ, அந்த குழுவே வெற்றி பெற்ற குழு ஆகும்.
ஒரு
குழு வெற்றி பெற்ற பிறகும் மீதமுள்ள குழுக்களுக்கிடையே இந்த விளையாட்டு
தொடர்ந்துக் கொண்டே இருக்கும். இதில் இருந்து ஒரு குழுவை நாம் தேர்வு செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக