>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 26 ஆகஸ்ட், 2019

    உள்ளே போனால் தொலைந்துவிடுவோம் - மர்மமான குகை..!

    Related image

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    மலை அல்லது குன்றுகளின் அடிவாரங்களில் இயற்கையாக அமைந்த பகுதியே பொதுவாக குகை என அறியப்படுகிறது. குகை என்று சொன்னால் இருட்டாகவும், அதன் பகுதி முழுவதும் மூடியதாகவும் இருக்கும்.

     ஒரு சிலருக்கு குகைகளில் தனியாகச் செல்வதற்கு பயமாக இருக்கும். எல்லோரும் ஒன்றாகச் செல்லும்போது எந்தவித பயமும் இல்லாமல் செல்லலாம். ஆனால், இங்கு காணவிருக்கும் இந்தக் குகையின் ரகசியங்கள் சற்று மர்மமாகவே இருக்கிறது.

     இந்தக் குகைகளில் பயணம் செய்யும்போது 'பயணத்தில் நீங்கள் தனித்து போய்விட்டால் வெளியேறும் வழியை கண்டுபிடிக்க முடியாது". இது கேட்பதற்கு சுவாரஸ்யமாகவும், கொஞ்சம் அச்சுறுத்தலாகவும் இருக்கிறதல்லவா... இதன் மர்மம் என்னவாக இருக்கும்? வாருங்கள் அதைப்பற்றி பார்க்கலாம்.

    எங்கே இருக்கிறது இந்த மர்மமான குகை?

     மேகாலயாவின் காடுகளின் சரிவுகளிலும், மரங்கள், செடிகள் மற்றும் தாவரங்களைக் கடந்து சென்றால் சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இடம்தான் க்ரெம் புரி  என்று அழைக்கப்படும் தேவதைகளின் குகை. இந்த குகை ஆழமான செங்குத்தான பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

     தற்போது உலகில் மிகவும் சிக்கலான அமைப்பை கொண்ட இடமாக இந்த குகை திகழ்கிறது. குகைகளின் துளைகள் மூலம் உள்ளே செல்ல விரும்பினால், குகை ஆராய்ச்சி உடையை அணிந்திருக்க வேண்டும். இந்த குகையின் உள்ளே செல்லும்போது குகையினுள் உள்ள பல ரகசியங்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.

     ஒரு பெரிய வலையமைப்பில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான குறுகிய பாதைகளும், நீண்ட வழித்தடங்களையும் கொண்ட இந்த தேவதைகளின் குகை நம்பமுடியாத தனித்துவமான தோற்றத்தைக் கொண்டு இருக்கிறது.

    இந்த குகைகளில் தவளைகள், மீன்கள், பிரம்மாண்ட சிலந்திகள் மற்றும் வெளவால்கள் என ஏராளமான உயிரினங்களும் காணப்படுகின்றன.

     இதன் அதிசயமான மர்மம் என்னவென்றால் குகைகளில் நடந்து செல்வது என்பது அரிதான விஷயம் ஆகும். ஆனால் இந்தக் குகைகளில் தவழ்ந்துதான் செல்ல வேண்டும். குறுகிய ஆபத்தான அச்சுறுத்தும் இடங்களில் தவழ்ந்து செல்லும் அனுபவம் என்பது கற்பனை செய்தே பார்க்க முடியாதது. உண்மையில் இந்த குகை ஒரு வியப்பான மர்மங்களைக் கொண்டுள்ளது.

     குகையினுள் செல்லும்போது ஸ்லீப்பி லஞ்ச்  என்று ஒரு இடம் உள்ளது. இங்கு சென்றால் உண்மையிலேயே தூக்கம் வருவதை உணர முடியும் என்று கூறப்படுகிறது.

    'இந்த குகைகளை ஆய்வு செய்வது மிகவும் கடினமான சவால்" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குகைக்குள் நடைபெறும் எந்தவொரு ஆபத்தான சவால்களையும் நம்மால் எதிர்கொள்ள முடியாது. குகைகளின் உள்ளே சென்றால் கவனமாக இருக்க வேண்டும் என்பதே சிறந்தது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக