இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பரம்பிக்குளம்
கோவையிலிருந்து ஏறத்தாழ 102கி.மீ தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 59கி.மீ
தொலைவிலும் அமைந்துள்ள ஒரு அழகிய இடம். இது கேரளா, தமிழ்நாட்டு எல்லையில்
அமைந்துள்ள வனப்பகுதி ஆகும்.
சிறப்புகள் :
அடர்ந்த
காடு, ஓங்கி உயர்ந்த மரங்கள், தூய்மையான காற்று, ஜில்லென்ற குளிர்ச்சி, பூச்சி
பறவைகள் மற்றும் விலங்குகளின் ஓசைகளைத் தவிர எங்கும் அமைதி... காட்டுக்குள்
இருக்கிறோம் என்ற திகில்...
இயற்கை
எழிலும், சுவாரஸ்யம் கலந்த சுற்றுலா இடம்தான் பரம்பிக்குளம். கேரள எல்லையில்
பரவிப் படர்ந்து இருக்கிறது இந்த அழகிய பசுமைப் பிரதேசம்.
ஆணைப்பாடி
என்ற இடத்தில் அமைந்து இருக்கும் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்திற்கு, பேருந்து
வசதி உண்டு. காடு முழுவதும் ஏசி போட்டது போல், ஆண்டு முழுவதும் குளுகுளு சூழல்.
உலகத்திலேயே
உயரமான அகலமான தேக்கு மரமான 'கன்னிமாரா" பரம்பிக்குளத்தில் உள்ளது.
டாப்ஸ்லிப்
அருகே செல்லும் பொழுது யானைகள், புள்ளிமான்கள், மயில்கள் என ஆங்காங்கே காண
முடிகிறது.
பரம்பிக்குளம்
புலிகள் காப்பகமும் தேசியப்பூங்கா போன்றதுதான். காணக் கிடைக்காத வனவிலங்குகள்,
அரியவகை சிங்கவால் குரங்குகள், பறவையினங்கள், தாவரங்கள் நிறைந்த வனப்பகுதி.
'எங்கும்
பசுமை எதிலும் பசுமை" என்றார் போல் பசுமையின் அழகை கண்டு கண்கள் குளிர்கிறது.
அங்குள்ள ஆற்றங்கரையில் மூங்கில் படகு சவாரி செய்தும் வனத்தின் அழகை ரசிக்க
முடியும்.
பரம்பிக்குளத்தின்
முக்கிய அம்சம், மர வீடுகள். பரம்பிக்குளம் அணையையொட்டிய காட்டுப் பகுதியில்
மரங்களின் மீது மர வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும்,
வனத்தில் அமைக்கப்பட்டுள்ள மரவீடுகளில் தங்கி காட்டின் அழகையும், விலங்குகளையும்
ரசிக்க முடியும்.
எப்படி செல்வது?
பொள்ளாச்சியிலிருந்து
பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
கோவை
மற்றும் பொள்ளாச்சியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
மரவீடு.
புலிகள்
காப்பகம்.
மூங்கில்
படகு சவாரி.
இதர சுற்றுலாத்தலங்கள் :
மேட்டுப்பாளையம்
பிளாக் தண்டர்.
வால்பாறை.
கோவை
குற்றாலம்.
ஈஷா
யோகா மையம்.
வெள்ளியங்கிரி
மலை.
மருதமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக