Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

கண்மூடி திறக்கும் அதிசய பெருமாள்....!

 Image result for கண்மூடி திறக்கும் அதிசய பெருமாள்....! 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


தொடரும் அதிசய நிகழ்வுகளில் இன்று சென்னை நெற்றக்குளத்தில் உள்ள கரி வரதாஜப் பெருமாள் கோவிலில் நிகழும் உங்களுக்குத் தெரியாத திருமாலின் திருவிளையாடல் பற்றிப் பார்ப்போம்......!

திருமாலின் அவதாரங்களுள் ஒன்றான இந்த பெருமாள் கோவில் சென்னையில் அமைந்துள்ளது. யானைக்கும் முதலைக்கும் அருள் புரிந்த கரி வரதராஜப்பெருமாள், நின்ற கோலத்தில் உபய நாச்சியார்களுடன் சேவை செய்கிறார். மிகவும் சக்தி வாய்ந்த இந்த கோவிலுக்கு சனிக்கிழமையானால் மட்டும் ஒரு பெரும்படை திரண்டு வருகிறது. அதற்கான காரணம் என்ன? இக்கோவிலின் அதிசயம் என்ன?

கண்மூடி திறந்தார் :

பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜை செய்வது வழக்கமான ஒன்றுதான். என்றாலும் சனிக்கிழமைகளில் செய்யப்படும் கற்பூர ஆரத்திக்கு மட்டும் இங்கு தனிச் சிறப்பு.

இருட்டில் பெருமாளின் திருக்கண்களுக்கு அருகில் நெய் தீபம் காட்டும் போது அப்படியே பெருமாள் திருக்கண் விழித்துப் பார்த்து அருள்வது போல் உள்ளது. நெய் விளக்கை கண்களுக்கருகில் காண்பிக்கும் போது விழிகள் அப்படியே நகர்வது போல் உள்ளது.

சனிக்கிழமை ஆரத்தி காண்பிக்கும் போது பெருமாள் கண்மூடி சிமிட்டுவது இங்கு வியக்க வைக்கும் நிகழ்வாக திகழ்கிறது.

எல்லாருக்கும் தென்படுவதில்லை :
இந்த நிகழ்வு எல்லாருக்கும் தென்படுவதில்லை. கற்பூர ஆரத்தி காட்டும்போதுகூட ஒரு சிலருக்கு மட்டுமே தென்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!