இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற நேரமாக
நாம் காலை மற்றும் மாலை வேளைகளை குறிப்பிடலாம். இவ்வாறு விளையாடுவதால் நம்
மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
குழந்தைகள் சுவாரஸ்யமாக விளையாடும்
விளையாட்டுகளில் ஒன்றான உப்புக்கல் விளையாட்டைப் பற்றி நாம் பார்க்கலாம்.
எத்தனை
பேர் விளையாடலாம்?
பல பேர் ஒன்றாக சேர்ந்து இந்த
விளையாட்டை விளையாடலாம்.
எப்படி
விளையாடுவது?
முதலில் இந்த விளையாட்டை தொடங்குவதற்கு
முன்பு இரு அணிகளாகப் பிரிந்துக் கொள்ள வேண்டும்.
பின்பு விளையாடும் மைதானத்தை இரு
பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். அதன்பின் இரு அணிகளும் ஆளுக்கொரு பகுதிகளில்
நின்று கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்த பின் இரண்டு அணியில் ஒரு
அணியின் பெயர் 'உப்பு" என்றும், மற்றொரு அணியின் பெயர் 'கல்" எனவும்
பிரித்துக் கொண்டு விளையாட்டை தொடங்கலாம்.
இரு அணிகளிலும் விளையாடும் குழந்தைகள்
அனைவரும் 'மழை வருது, மழை வருது.. உப்புக்கல்லை அள்ளிப்போயி ஓரமா வையுங்க"
என்று ஆரவாரமாக சொல்ல வேண்டும்.
பின்பு இரு அணிகளும் அவர்களின்
பகுதியில் ஓடிச் சென்று நின்று கொள்ள வேண்டும்.
உப்பு அணியைச் சேர்ந்தவர்கள் அவர்களின்
பகுதியில் யாரும் பார்க்க முடியாத இடங்களில் மணலை சிறு குவியலாக குவித்து வைக்க
வேண்டும்.
அவ்வாறே, கல் அணியைச் சேர்ந்தவர்கள் அவர்களின்
பகுதியில் சிறு கல்லை வைத்து அதன்மீது மணலைச் வைத்து சிறு குவியலாக குவித்து வைக்க
வேண்டும்.
பின்பு பத்து நிமிடங்கள் கழித்து 'மழை
விட்டாச்சு.. மழை விட்டாச்சு.. வெளியே வாங்க.. !" என்று ஒரு அணி சொல்ல
வேண்டும். அதன்பின் மற்றொரு அணி 'வெயிலடிக்குது, வெயிலடிக்குது... வெளியே
வாங்க" என்றுச் சொல்ல வேண்டும்.
இவ்வாறு கூறிய பிறகு இரு அணிகளும்
அவர்களின் பகுதியை மாறி நின்று கொள்ள வேண்டும். பின்பு எதிர் அணியினர் குவித்து
வைத்திருக்கும் மணல் குவியலைப் நூறு எண்ணுவதற்குள் கண்டுபிடித்து அழித்து விட
வேண்டும்.
அதன்பின் நேரம் முடிந்த பிறகு இரு
அணிகளும் அவர்களின் பகுதிக்கு சென்று நின்று கொள்ள வேண்டும். எதிர் அணியால்
அழிக்கப்படாத மணல் குவியல் எந்தப் பகுதியில் இருக்கிறதோ அந்த அணி வெற்றி
பெற்றுவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக