Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

கல்லாக மாறும் மரங்கள் !!

Image result for கல்லாக மாறும் மரங்கள் !!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

மரம் என்றாலே நிழல், காற்று, கனி ஆகியவை மட்டுமல்லாமல் மரத்தால் நமக்கு ஏராளமான பலன்கள் உண்டு...

சிறுவயதில் மரத்தில் உள்ள கனிகளை சாப்பிடுவதற்காக நாம் மரத்தின் மீது கற்களை எரிந்து கனிகளை பறித்து சாப்பிட்டு இருக்கின்றோம்.

அந்த வகையில் மரங்களே கல்லாக மாறியிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்... மரங்கள் கல்லாக மாறியிருக்கின்றன.

அந்த மரங்கள் எப்படி கல்லாக மாறியது? அந்த மரங்கள் எங்கு அமைந்துள்ளது? என்பதை பற்றிதான் இன்று நாம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

எங்கு இருக்கிறது?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை என்னுமிடத்தில் அமைந்துள்ள அதிசய இடம்தான் கல்லாக மாறிய மரங்கள் கொண்ட பூங்கா.

இங்கு மிகவும் ஆச்சரியம் நிறைந்த, முழுவதும் கல்லாக மாறிப்போன மரங்கள் ஏராளமாக இருக்கின்றன. இக்கல் மரங்கள் பல கோடி ஆண்டுகள் பழமையானதாகும்.

இந்திய புவியியல் ஆய்வுத்துறை இந்தப் பகுதியில் கல்மரப் பூங்கா ஒன்றினை அமைத்து இந்த கல் மரங்களை பாதுகாத்து வருகிறது.

இங்கு 247 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மேடான நிலப்பகுதியில் சுமார் 200-க்கும் அதிகமான கல்மரங்கள் உள்ளன.

இந்த கல்மரங்கள் 3 முதல் 15 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும் உடையதாக காணப்படுகின்றன.

இந்தப் பூங்காவில் இயற்கையாக படுக்கைவாக்கில் கிடக்கும் மரங்கள் உள்ளன. அருகிலிருந்து கொண்டுவரப்பட்ட கல்மரத்துண்டுகள் காட்சிக்காக செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மரங்கள் யாவும் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் சாய்ந்ததாக இருந்திருக்கக்கூடும். அதற்கு படுக்கை நிலையில் உள்ள மரங்களே சான்றாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இங்கு காணப்படும் கல் மரங்கள் யாவும் படுத்த நிலையிலும், கிளைகள் இல்லாது காணப்படுவதால் இவை வேறிடத்திலிருந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இந்த மரங்களில் வேர்ப்பகுதியோ, கிளைகளோ கிடையாது. மரங்களின் பட்டை போன்ற அமைப்புகள், வட்ட வளையங்கள், கணுக்கள் போன்ற அனைத்தும் இந்த கல்மரங்களில் அழகாகக் காணப்படுகின்றன.

புன்னைக் கட்டாஞ்சி, ஆமணக்கு வகை மரங்களும், புளியமரக் குடும்பத்தை சேர்ந்த மரங்களும் இங்கே இனம் காணப்பட்டுள்ளன.

மேலும், இம்மரங்களில் காணப்படும் சுருள் வளைவைக் கொண்டு அக்கல் மரங்களின் வயதை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகின்றனர்.

மரத்தில் இருந்த செல் போன்ற உயிருள்ள பகுதிகளில் சிலிகா என்ற மணல் புகுந்து கற்களாக மாறிவிடுகின்றன. ஆனால், தோற்றத்தில் மரங்கள் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கின்றன.

இதுபோல் பல இடங்களில் கல்மர பூங்காக்கள் இருக்கின்றன. இயற்கை தந்த பல அதியசங்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக