இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பசுமைப் போர்த்திய மலைகளும், வெண் பஞ்சு மேகங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு ஒன்றையொன்று தழுவிக் கொள்கிற அட்டகாசமான இடம்தான் மேகமலை.இது தேனி மாவட்டம் சின்னமனூர் என்னும் நகரில் அமைந்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது.
வேகமான காற்று வீசும் மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது.
சிறப்புகள் :
மேகமலை நான்கைந்து மலைச்சிகரங்களால் சூழப்பட்ட நடுவே உள்ள பள்ளத்தாக்கு ஆகும்.
தமிழகத்தில் உள்ள மலைவாச தலங்களில் சிறந்த நில அமைப்பு கொண்டதாக இருக்கிறது.
மலை முழுவதும் மேகங்களால் சூழப்பட்டு ஆட்சி செய்வதால் மேகமலை என்று பெற்றுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சைப் பசேல் என திரும்பிய பக்கமெல்லாம் பசுமை போர்வை உடுத்தியது போல் பரந்து விரிந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடு தான் இந்த மேகமலை.
பசுமையான நிலப்பரப்புடன் பெரிய பெரிய மரங்களுடன் மிக அடர்த்தியாக காணப்படுகிறது.
மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில், பார்வையைப் பறித்துப் போகிற பச்சைத் தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்கள்.
உயர்ந்த மலைகளின் அழகு, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரி என பல இயற்கை வளம் கொட்டிக்கிடக்கின்றன. இவை அனைத்தும் மனிதனின் காலடிப் பட்டு சிதைந்து போகாத பசுமை மாறா காடுகளாகவே உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
தேயிலை தோட்டங்கள்.
அழகிய ஏரி
ஏலக்காய் தோட்டங்கள்.
எப்படி செல்வது?
சின்னமனூரிலிருந்து மலைப்பாதை வழியாகத்தான் செல்ல முடியும். மலைப்பாதையின் முதல் 30கி.மீ. வனப்பகுதி. அடுத்த 20கி.மீ. அடர்ந்த தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும்.
சொந்த வாகனத்தில் சென்றால் சிறந்த அனுபவங்கள் செல்லும் வழியில் கிடைக்கும்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
ரயில் வண்டி வழியாக :
மதுரை ரயில் நிலையம்
விமானம் வழியாக :
மதுரை விமான நிலையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக