இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நாம் வாழும் இந்த உலகம் பல அதிசயம், ஆச்சரியம் மற்றும் மர்மங்கள் நிறைந்த ஒன்றாக உள்ளது.அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது மனதை கொள்ளை கொள்ளும்... அழகிய கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள அதிசய பாறைகளை பற்றி தான்.
கடல் என்றால் நீர் மற்றும் பாறைகளைக் கொண்டுள்ள இடம்தான். பாறையை தவிர கடலில் அப்படி என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது என்ற கேள்வி தோன்றுகிறதல்லவா?
Balancing Rock :
கனடாவில் உள்ள நோவா ஸ்கோட்டியா (Nova
scotia) என்ற இடத்தில்தான் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் பாறை ஒன்று
அமைந்துள்ளது.
இது ஒரு பாறையின் விளிம்பில்
செங்குத்தாக நிற்பது இன்றும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.
இந்த அதிசய பாறையைக் காண பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதைப் போலவே மலைகளுக்கு இடையில் தொங்கிக் கொண்டிருக்கும் மற்றொரு அதிசய பாறையை பற்றி பார்க்கலாம் வாங்க
இது நார்வேயில் Lysefjorden மலையின்
உச்சியில் அமைந்துள்ள அழகான மற்றும் ஆபத்தான இடமாகும்.
கடல் மட்டத்திலிருந்து பல ஆயிரம் அடி
உயரத்தில் இரு செங்குத்தான மலைகளுக்கு இடையே தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பாறைதான்
இது.
பல மைல் தூரம் நடந்து சென்றால்தான்
மலையின் உச்சியில் இருக்கும் அந்த பாறையை அடைய முடியும்.
இரு மலைகளுக்கு இடையில் அமைந்து அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்துள்ளது.
மலையின் மீது ஏறிய பிறகு மனதில் ஒருவிதமான பயம் தோன்றும். மலையின் கீழே உள்ள இயற்கையின் அழகையும் கண்டு ரசிக்க முடியும்.
உலகிலேயே மிகவும் ஆபத்தான இந்த முதநசயபடிழடவநn பாறையை கண்டு ரசிப்பதற்காகவும், புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காகவும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக