இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குழந்தைகள் ஒரு விளையாட்டை எல்லோருடன் சேர்ந்து விளையாடும்போது அவர்களுக்கு மந்தத்தன்மை வராது என்று சொல்லலாம். அவ்வாறு விளையாடும்போது அவர்களுக்கு புத்துணர்வு கிடைக்கும்.இன்றைய சூழலில் குழந்தைகள் கல்விக்கே முழு நேரத்தையும் ஒதுக்குவதால், பல விளையாட்டுகளை விளையாடுவதற்கு நேரத்தை ஒதுக்குவதில்லை.
நேரம் போவது கூட தெரியமால் குதூகலமாக விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று தான் நேரம் என்ன கண்டுபிடி?
எத்தனை பேர் விளையாடலாம்?
இந்த விளையாட்டை 5 முதல் 20 பேர் வரை விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
முதலில் இந்த விளையாட்டை தொடங்குவதற்கு முன்பு நான்கு அல்லது ஐந்து நபர்கள் நிற்பதற்கு வசதியாக பெரிய வட்டமொன்றை வரைந்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அந்த வட்டத்தைச் சுற்றி பத்து அடி தொலைவில் விளையாடும் நபர்களின் எண்ணிக்கைக்கேற்ப சிறிய வட்டங்களை வரைந்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் முதல் போட்டியாளரைத் தேர்வு செய்ய வேண்டும். அதற்கு விளையாடும் நபர்களின் பெயர்களை ஒரு துண்டுத்தாளில் எழுதி விட வேண்டும். அவற்றில் இருந்து ஒரு சீட்டை மட்டும் எடுக்க வேண்டும். அந்தச் சீட்டில் யாருடைய பெயர் இருக்கிறதோ அவர்தான் முதல் போட்டியாளர் ஆவார்.
இவ்வாறு செய்தபின் முதல் போட்டியாளர் நடுவட்டத்தில் நின்றுக் கொள்ள வேண்டும். மீதமுள்ள போட்டியாளர்கள் சுற்றி இருக்கும் சிறு வட்டத்தில் நின்றுக் கொள்ள வேண்டும்.
சிறு வட்டத்தில் இருக்கும் போட்டியாளர்கள் வட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும். பின்பு முதல் போட்டியாளர் நிற்கும் பெரிய வட்டத்தைச் சுற்றி நின்றுக் கொண்டு பாட்டு பாட வேண்டும்.
அனைவரும் : அண்ணே.. அண்ணே.. மணி என்னாச்சு?
முதல் போட்டியாளர் : இப்பத்தான் மணி பத்தாச்சு!
பெரிய வட்டத்தைச் சுற்றி நிற்கும் போட்டியாளர்கள் 'அண்ணே.. அண்ணே.. மணி என்னாச்சு..?" என தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். முதல் போட்டியாளர் ஏதாவதொரு நேரத்தைச் சொல்ல வேண்டும்.
முதல் போட்டியாளர் 'இப்ப நேரம் நள்ளிரவாச்சு" என்று சொன்னால் மீதமுள்ள போட்டியாளர்கள் அனைவரும் அவரவர் வட்டத்திற்குள் ஓடிச் சென்று நின்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு அவர்கள் நிற்பதற்கு முன்னால் முதல் போட்டியாளர் வேகமாக ஓடிச்சென்று அவர்கள் வட்டத்திற்கு நின்றுவிட்டால், அந்த வட்டத்தில் இருக்கும் நபர் அவுட் ஆகிவிடுவார்.
இப்போது அவுட் ஆன போட்டியாளர், முதல் போட்டியளராக மாறி இதே மாதிரி தொடர்ந்து இந்த விளையாட்டை விளையாட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக