Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

முன்னிடைச்சொற்கள் பட்டியல் (List of Prepositions)


Image result for முன்னிடைச்சொற்கள் பட்டியல் (List of Prepositions)


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ஆங்கில இலக்கணத்தின் பேச்சின் கூறுகளில் முன்னிடைச்சொற்களும் ஒன்றாகும். முன்னிடைச்சொற்கள் ஆங்கில மொழியில் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றில் அடிக்கடி பயன்படும் 70 முன்னிடைச்சொற்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

முன்னிடைச்சொற்களின் பயன்பாடு குறித்தப் பாடங்களை கீழே பார்க்கவும்.

உச்சரிப்பு பயிற்சிப்பெற விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலி கோப்பினைச் சொடுக்கி பயிற்சி பெறலாம்.


List of Prepositio...

No:
English
தமிழ்
1
aboard
கப்பலில்/கப்பல் தளத்தில்

2
about
கிட்டத்தட்ட/ சுமார்/ பற்றி/ சுற்றிலும்

3
above
மேலே/ மேல்

4
across
குறுக்கே

5
after
பின்னால்/ பிறகு / பின்

6
against
எதிராக/

7
along
நீள்வட்டத்தில்/ நெடுக

8
amid
மத்தியில்/ இடையில்

9
among
(பலவற்றின்) நடுவில்/ (பலவற்றிற்கு) இடையே

10
anti
எதிரான/ எதிர்

11
around
சுற்றிலும்/ சூழ்ந்து / சுமார் / கிட்டத்தட்ட

12
as
போல்/ போல / போன்ற / என

13
at
இல்/ இன்

14
before
முன்னர் / முன் / முன்பு / முன்னால்

15
behind
பின்னால் / பின் / பின்னனியில்

16
below
கீழே/ கீழ் / அடியில் 

17
beneath
கீழே/ கீழுருக்கும்

18
beside
அருகில்/ பக்கத்தில்

19
besides
மேலும்/...ஐத் தவிர/ தவிர வேறு

20
between
(இரண்டுக்கு) இடையில்/நடுவே

21
beyond
அப்பால்/அப்பாற்பட்ட

22
but
ஆனால் / மாறாக

23
by
ஆல்/ மூலம்/ அருகில்

24
concerning
அக்கறையுடன்/ தொடர்பான / சம்பந்தமாக / குறித்து

25
considering
பரிசீலித்து/ கருத்தில் கொண்டு/ கருதி

26
despite
ஆனபோதிலும்/ போதிலும் / ஆயினும்/ இருப்பினும்

27
down
கீழே / குறைத்து

28
during
... காலத்தில்/...பொழுது / காலக்கட்டத்தில் / சமயத்தில்

29
except
தவிர / தவிர்த்து

30
excepting
தவிர/நீங்கலாக

31
excluding
விலக்குகின்ற/தவிர்க்கின்ற

32
following
தொடர்ந்து / பின்வரும் 

33
for
...க்காக/...கு

34
from
... லிருந்து / இருந்து

35
in
... இல் / ... இன்

36
inside
உள்பக்கம் / உட்புறம் / உள்ளே

37
into
உள்ளுக்குள்/உள்நோக்கி

38
like
போன்ற / ஒத்த

39
minus
கழித்து /குறைய / நீக்கிய

40
near
அருகில் / அருகாமையில்

41
of
...இன்/...இல்

42
off
மூடு/ அணை / அப்பால்

43
on
மீது / மேல் / ... இல்

44
onto
அதனுள்/ க்குள்

45
opposite
எதிரான / எதிராக / எதிர்

46
outside
வெளிப்புறம்/ வெளியே/ வெளியில்

47
over
மேலே / மேல்/ மேலாக

48
past
கடந்த / கடந்த கால

49
per
ஆக / ஒன்றிற்கு / வீதம்

50
plus
...கூட / அத்துடன் / கூடுதலாக / மேலதிகமாக

51
regarding
குறித்து / சம்பந்தமாக/ தொடர்பான / தொடர்பாக / பற்றி

52
round
சுற்றி/ சுற்றிலும்

53
since
... லிருந்து/ இருந்து / ...முதல்

54
than
விட / ... விடவும் 

55
through
ஊடாக / மூலம் / மூலமாக

56
to
...க்கு 

57
toward
... நோக்கி/ ... க்காக

58
towards
நோக்கிய / மீதான

59
under
அடியில்/... ன் கீழே

60
underneath
அடியில்/ கீழாக

61
unlike
போலில்லாத / போலன்றி 

62
until
வரை / வரைக்கும் / மட்டும்

63
up
மேலே / மேல்

64
upon
மீது / மேல் / அடிப்படையில்

65
versus
எதிராக / எதிர்

66
via
வழியாக / மூலமாக

67
with
உடன்

68
within
அத்துடன்

69
without
இல்லாமல் / இன்றி

70
throughout
முழுவதும் / முழுதும் / முழுவதிலும்


இப்பட்டியலில் வழங்கப்பட்டுள்ள முன்னிடைச்சொற்களை நன்கு பயிற்சி செய்துக்கொள்ளுங்கள். ஆங்கிலம் கற்பதற்கு முன்னிடைச்சொற்களின் பயன்பாடுகளை சரியாக விளங்கிக்கொள்ளல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். எந்த இடத்தில் எந்த முன்னிடைச்சொல்லை பயன்படுத்தவேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் வாக்கியங்களில் பொருத்தமற்ற முன்னிடைச்சொற்களை பயன்படுத்திவிட்டால் முழு வாக்கியத்தின் பொருளே மாறிவிடும்.

குறிப்பு:
மேலே உள்ள பட்டியலில் 70 முன்னிடைச்சொற்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் நூற்றுக் கணக்கான முன்னிடைச் சொற்கள் உள்ளன. உங்கள் ஆங்கில மொழி ஆளுமையை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பினால் இப்பட்டியிலில் உள்ளடக்கப்படாத முன்னிடைச்சொற்களின் பயன்பாடுகளையும் கற்றுக்கொள்ளுங்கள்.

கவனிக்கவும்:
இங்கே இப்படியலில் உள்ள சொற்கள், முன்னிடைச்சொற்களாக பயன்படும் போதான தமிழ் பொருளே மேலே வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை இச்சொற்கள் முன்னிடைச்சொற்கள் அல்லாத ஏனையப் பயன்பாட்டின் போது அவற்றில் பொருள் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.


சரி! மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக