இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 46கி.மீ தொலைவிலும், பத்மநாபபுரத்திலிருந்து 36 கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 30கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடம்தான் கீரிப்பாறை.சிறப்புகள் :
குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் குளிர்ந்த சுத்தமான மூலிகை கலந்த நீரும், மாசு கலக்காத காற்றும், சிறிய அருவிகள் என மனதை கொள்ளை கொள்ளும் இடங்கள் ஏராளம் உள்ளன.
கன்னியாகுமரியினை சுற்றிலும் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் இருந்த போதிலும் இயற்கைக்காகவும், பசுமைக்காகவும் பெயர் பெற்ற இடமாக இந்த கீரிப்பாறை வனப்பகுதி திகழ்கிறது.
இங்குள்ள ஆறு மலைச் சரிவுகளில் விழுந்தோடி வருவதைத்தான் காளிகேசம் என பெயர் பெற்றுள்ளது. இப்பகுதி காட்டாறுகள் மலைச் சரிவில் பாறைகளின் இடையே வழிந்தோடி பெரிய காட்டாறாக உருவாகிறது.
கீரிப்பாறையில் பலவிதமான மூலிகைச் செடிகளும், வானுயர்ந்த மரங்களும் அதிகளவில் உள்ளன. மலையேற்றத்தில் விருப்பம் உள்ளவர்கள் அதிகமாக இங்கே பயணிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கீரிப்பாறை வனப்பகுதியில் ஏராளமான நீர்வீழ்ச்சிகளும் காணப்படுகின்றன. அவற்றுள் வட்டப்பாறை நீர்வீழ்ச்சி மிகவும் பிரசித்திபெற்றது.
பாறைகளைக் குடைந்தும், அறுத்துக் கொண்டும் ஓடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும்.
இந்த வனப்பகுதியானது கடவுளின் வரப்பிரசாதமாக திகழ்கிறது. பல சிறிய நீரோடைகள் மற்றும் ஆறுகள் காட்டுப்பகுதிகளில் ஓடுகின்றன.
கூடுதலாக, இயற்கை ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாகவும் திகழ்கிறது. ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவின் சில பாதுகாக்கப்பட்ட காடுகளில் கீரிப்பாறையும் ஒன்று.
மலைப்பகுதிகளில் சுற்றுலா செல்பவர்களுக்கு இம்மலைப்பகுதி ஒரு சிறந்த இடமாக உள்ளது.
எப்படி செல்வது?
கன்னியாகுமரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
விமானம் வழியாக :
தூத்துக்குடி விமான நிலையம்.
ரயில் வழியாக :
கன்னியாகுமரி ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
கன்னியாகுமரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
அருவிகள்.
காளிகேசம் அம்மன் கோவில்.
இதர சுற்றுலாத்தலங்கள் :
கன்னியாகுமரி கடற்கரை.
விவேகானந்தர் பாறை.
திருவள்ளுவர் சிலை.
திற்பரப்பு அருவி.
பத்மநாபபுரம் அரண்மனை.
வட்டக்கோட்டை.
மாத்தூர் தொட்டிப்பாலம்.
பேச்சிப்பாறை அணை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக