இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உடல் எடையைக் கூட்டும் பெங்களூரு அசைவ பப்ஸ்தேவையான பொருள்கள்:
- மட்டன் கொத்துக்கறி 250 கிராம்
- கொழுப்பு 100 கிராம்
- கொத்துமல்லி இலை தேவையான அளவு
- புதினா இலை தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- பெரிய வெங்காயம் 2
- டால்டா 200 கிராம்
- உருளைக் கிழங்கு 2
- மைதா அரை கிலோ
- முட்டை 2
- இஞ்சி 1 சிறிய அளவு
- சோடா உப்பு 2 தேக்கரண்டி
- பூண்டு 5 பல்
- கிராம்புத் தூள் 1 தேக்கரண்டி
- பட்டை 1 தேக்கரண்டி
- மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி
செய்முறை:
- கறியைத் தனியாக உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- உருளைக் கிழங்கை வேக வைத்து உடன் உப்பையும் போட்டு உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நெய் இரண்டு கரண்டி, பொடியாக வெட்டி வைத்து இருக்கும் மல்லி, புதினா, வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகிய அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கி வெந்த கறி, மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், உதிர்த்து வைத்து இருக்கும் உருளைக் கிழங்கு ஆகிய அனைத்தையும் போட்டுத் தண்ணீர் இல்லாமல் வதக்கி வைக்க வேண்டும்.
- இப்பொழுது மைதாவில் முட்டையின் மஞ்சள் கரு, உப்பு, சோடா உப்பு, மிக்சியில் அரைத்த கொழுப்பு ஆகிய இவை அனைத்தையும் போட்டு பிசைந்து மடித்து நான்கு பூரிகளாக உருட்டி ஒன்றுக்கு மேல் ஒன்று போட்டு நீளமான பாய் போன்று சுருட்டி நான்கு பாகமாக பிரித்து பழையபடி விரித்து ஒரு மேஜைக்கரண்டி கறி பூரணம் வைத்து ஓரத்தில் வெள்ளைக்கரு தடவி டால்டாவில் பொரிக்கவும்.
- இதோ சுவையான பெங்களூரு அசைவ பப்ஸ் தயார்.
- மட்டனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள சத்துக்கள் நீரிழிவு ஏற்படுவதைத் தடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக