Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

புது புது வண்ணங்களில் ஜொலிக்கும்.. வானவில் மரம்..!

Image result for புது புது வண்ணங்களில் ஜொலிக்கும்.. வானவில் மரம்..!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

இயற்கையின் படைப்புகளில் மரங்களின் வளங்கள் பூமியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மரங்களில் உள்ள ஒவ்வொரு பகுதியும் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றிலிருந்து வீசும் இயற்கை காற்று நம்முடைய உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

 மரங்களில் ஆயிரக்கணக்கான வகைகள் இருக்கிறது. ஆனால், வானவில் மரம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நாம் வானவில்லை மழை பெய்யும்போது வானத்தில் பார்த்து ரசித்தது உண்டு. அதிலுள்ள நிறங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

 வானவில் நிறத்தில் மரம் இருக்கிறது என்று சொன்னால் நமக்கு புரியாத புதிராகவும், அதே சமயம் ஆச்சரியமாகவும் இருக்கிறது. இது ஒரு நம்பமுடியாத அதிசயமாகவும் இருக்கிறது.

எங்கு உள்ளது இந்த அதிசயமான மரம்?

 இந்தோனேஷியாவைத் தாயகமாகக் கொண்ட இந்த மரங்கள் பப்புவா, நியூகினியா, பிலிப்பைன்ஸ் மற்றும் நியூ பிரிட்டன் போன்ற நாடுகளில் அதிகளவில் காணப்படுகின்றன.

வானவில் மரம் யூகலிப்டஸ் எனப்படும் தைலமரமாகும். இந்த மரம் காகிதத்தாளில் வரையப்பட்டது போல பார்ப்பதற்கு கட்சியளிக்கும். மேலும் இம்மரம் வெள்ளைத் தாள் செய்ய பயன்படுகின்றன.

வானவில் மரம் என்று அழைக்கப்பட காரணம்?

மற்ற யூகலிப்டஸ் மரங்களைப் போலவே, இதன் பட்டைகள் ஆண்டுக்கு ஒருமுறை உரிந்துவிடும். புதிதாக இளம் பச்சை நிறத்தில் மரப்பட்டை தோன்றும். பச்சை நிறம் மெல்ல மாறத் தொடங்கி, பல வண்ணங்களில் மீண்டும் மாறும்.

மரங்களின் முதுமைக்கு ஏற்ப புதுபுது வண்ணங்களில் ஜொலிக்கும் போது காண்போர் கண்களை கவர்கின்றன. இந்த மரங்கள், பெரும்பாலும் சிவப்பு, பச்சை, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் பளிச்சிடுகின்றன. இவை வெயில் காலத்தில் பச்சை, காபி நிறங்களிலும், மழைக்காலங்களில் பல வண்ண நிறங்களில் வர்ணஜாலம் காட்டுகின்றன. இதனால் இம்மரம் வானவில் மரம் என்று அழைக்கப்படுகிறது.
வானவில் மரத்தில் பூக்களும் பூத்துக் குலுங்குகின்றன. அந்த பூக்கள் மகரந்தத் தாள்களின் நிறத்தைப் பொறுத்து மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் பூக்கின்றன. வானவில் மரம் நமக்கு வியப்பூட்டும் மரங்களாக இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக