
இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குழந்தைகள் உற்சாகமாக விளையாடும் விளையாட்டுகள் பல இருந்தாலும், அவற்றை விளையாடுவதற்கு நேரம் இல்லை என்று சொல்லலாம்.
அந்த வகையில் நாம் இன்று குழந்தைகளுக்கு நிச்சயமாக பிடித்த விளையாட்டுகளில் ஒன்றான கூட்டுக்குள்ளே குருவி பற்றி பார்க்கலாம்.
எத்தனை பேர் விளையாடலாம்?
இந்த விளையாட்டை 20 முதல் 30 குழந்தைகள் வரை சேர்ந்து விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
முதலில் முதல் போட்டியாளரை தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.
பின்பு விளையாட்டில் கலந்துக் கொள்ளும் அனைத்துப் போட்டியாளர்களையும் ஒரு குழுவுக்கு மூன்று நபராகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் விளையாடும் எல்லாப் போட்டியாளர்களும் மைதானத்தின் நடுவில் வட்ட வடிவில் நின்றுக் கொள்ள வேண்டும். முதல் போட்டியாளர் வட்டத்தின் நடுவில் நின்றுக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒவ்வொரு குழுவிலும், நடுவில் இருப்பவர் குருவி. அதற்கு வலது மற்றும் இடது பக்கத்தில் இருப்பவர் குருவியின் கூடு ஆவார்கள்.
அவ்வாறு நின்றபின் நடுவில் இருக்கும் குருவியின் தலைக்கு மேலே இருபுறமும் நிற்கும் நபர்கள் அவர்களின் கைகளை உயர்த்தி ஒரு கூடுபோல் ஒன்றுச் சேர்த்து நின்றுக் கொள்ள வேண்டும்.
பின்பு வட்டத்தின் நடுவில் இருக்கும் முதல் போட்டியாளர் 'குருவியக்கா.. குருவியக்கா.. எங்கே போறீங்க" என்று கேட்க வேண்டும். அதற்கு வட்டத்தில் உள்ள அனைவரும் 'பசிக்கு இரையெடுக்கக் காட்டுக்குப் போறேன்" என்றுச் சொல்ல வேண்டும்.
மறுபடியும் முதல் போட்டியாளர் இவ்வாறே கேட்க வேண்டும். 'குஞ்சுகளைப் பார்த்து வர என் கூட்டுக்குப் போறேன்" என்று வட்டத்தில் உள்ள போட்டியாளர்கள் கூற வேண்டும்.
அதன்பின் வட்டத்தின் நடுவில் இருக்கும் முதல் போட்டியாளர், குருவி, கூடு இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டும்.
உதாரணமாக முதல் போட்டியாளர் குருவி என்றுச் சொன்னால் வட்டத்தினுள் குருவியாக நிற்பவர்கள் இடம் மாறி வேறொரு கூட்டுக்குள் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் முதல் போட்டியாளர் ஏதாவது கூட்டிற்குள் குருவியாக போய் நின்று விடுவார்.
இதில் எந்தக் குருவிக்கு கூடு கிடைக்கவில்லையோ அவர் அவுட் ஆகிவிடுவார். அவர் முதல் போட்டியாளராக மாறி இந்த விளையாட்டை விளையாட வேண்டும்.
முதல் போட்டியாளர் கூடு என்றுச் சொன்னால், குருவிகள் எங்கும் செல்லாமல் அதே இடத்தில் நின்றுக் கொள்ள வேண்டும்.
குருவியின் இருபுறமும் நிற்பவர்கள் பிரிந்துச் சென்று வேறு ஒரு குருவிகளுக்கு கூடாக மாறி நின்றுக் கொள்ள வேண்டும். முதல் போட்டியாளர் ஓடிச் சென்று யாருடன் பாதி கூடாக நின்றுக் கொள்கிறார்களோ அவர் அவுட் ஆகுவிடுவார். மீண்டும் முதல் போட்டியாளராக மாறி இதே மாதிரி விளையாட வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக