Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 10 ஆகஸ்ட், 2019

சைனீஸ் வகைகளில் கலக்கும் டிராகன் சிக்கன்.. வீட்டிலேயே செய்ய இதோ ரெசிபி..!

சைனீஸ் வகைகளில் கலக்கும் டிராகன் சிக்கன்.. வீட்டிலேயே செய்ய இதோ ரெசிபி..!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சீன உணவுகள் மீது பற்று கொண்டோர் கட்டாயம் இதை செய்து பார்க்கவும்.
இந்தியர்களுக்கு சீன உணவுகள் மீது எப்போதும் தனிக் காதல் உண்டு. அந்த வரிசையில் டிராகன் சிக்கனுக்கு இருக்கும் ரசிகர்கள் அதிகம். இதை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்று விவரிக்கிறது. 

தேவையான பொருட்கள் :

வறுக்க
  • எலும்புகளில்லா சிக்கன் - 300 கிராம்
  • உப்பு - 1 ஸ்பூன்
  • மிளகுத் தூள் - 1
  • சோள மாவு - 2 ஸ்பூன்
  • சோயா சாஸ் - 2 ஸ்பூன்
  • முட்டை - 1
  • எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க
  • எண்ணெய் - 2 ஸ்பூன்
  • முந்திரி - 1/4 கப்
  • பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய பூண்டு - 1 ஸ்பூன்
  • உடைத்த மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
  • ஸ்பிரிங் ஆனியன் - அரை கப்
  • குடை மிளகாய் - அரை கப்
  • சோயா சாஸ் - 2 ஸ்ப்ய்ய்ன்
  • சில்லி சாஸ் - 4 ஸ்பூன்
  • டொமேட்டோ கெட்சப் - 3 ஸ்பூன்
  • சர்க்கரை - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு ஏற்ப
  • தண்ணீர் - அரை கப்
  • சோள மாவு கரைத்த நீர் - அரை கப்
  


செய்முறை :

கறி துண்டுகளை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். அதில் உப்பு, மிளகுத் தூள், சோள மாவு, சோயா சாஸ், முட்டை சேர்த்துக் கலந்துக்கொள்ளபும். அதை 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஊறியதும் வறுக்க தேவையான எண்ணெய் ஊற்றி சிக்கனை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரிகளை உடைத்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் இஞ்சி பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி வதக்கவும். பின் ஸ்ப்ரிங் ஆனியன், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் சோயா சாஸ், சில்லி சாஸ், டொமேட்டோ கெட்சப் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.

நன்குக் கொதித்து வரும்போது சோள மாவுக் கலந்த தண்ணீரை ஊற்றிக் கிளறவும். தற்போது கலவை கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். அடுப்பு குறைந்த தீயில் இருக்கவும்.

இறுதியாக வறுத்த சிக்கன் துண்டுகளை சேர்த்துக் கிளறி அடுப்பை அனைத்துவிடவும். மேலே ஸ்பிரிங் ஆனியன் இலைகள் இருந்தால் தூவலாம்.

சுவையான டிராகன் சிக்கன் தயார். இதை அப்படியே சாப்பிடலாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக