Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

வைரல் வீடியோவால் வந்தது வினை..! சிக்கலில் சப் இன்ஸ்பெக்டர்...!


 

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வரும் சப் இன்ஸ்பெக்டர் தனது திருமணத்திற்கு முன்பு எடுத்த ப்ரி வெட்டிங் வீடியோ வைரலனதால் அவரது பணிக்கே தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதை கீழே காணுங்கள்.

வைரல் வீடியோவால் வந்தது வினை..! சிக்கலில் சப் இன்ஸ்பெக்டர்...!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள கோத்ரா போலீஸ் ஸ்டேஷனவில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தன்பத் சிங். இவருக்கும் கிரண் என் பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு முன்பாக ப்ரீ வெட்டிங் ஷூட் எனப்படும் புகைப்படம் மற்றும் வீடியோவை அவர்கள் எடுத்துள்ளனர்.

அதில் ஒரு காதல் பாடலுக்கு இவரும் நடித்து காட்சியைப் படமாக்கியுள்ளனர். அந்த வீடியோவில் தன்பத் சிங் ரோட்டோரமாக சோதனையில் நிற்பது போலவும், அந்த வழியில் கிரண் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டி வருவது போலவும், தன்பத் அவரை தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பது போலவும், கிரண் அவரிடம் அபராதத்தைச் செலுத்தாமல் லஞ்சம் கொடுத்துவிட்டுத் தப்பிப்பது போலவும்.

அவர் சென்ற பின்பு தான் கிரண் தன்பத்தின் பர்சை திருடிச் சென்றது தெரிகிறது. தன்பத் கிரணை துரத்திச் சென்று அவரிடம் காதலில் விழுவது போல அந்த காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் அதில் தன்பத் சிங் லஞ்சம் வாங்குவதாக இருந்த காட்சிகள் போலீஸ் உயரதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து உதய்பூர் சட்ட ஒழுங்கு ஐஜி ஹவா சிங் குமரியா கூறும் போது : "போலீஸ் சீருடையில் வீடியோ எடுப்பது பொதுமக்கள் மத்தியில் போலீஸ் மீதான தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தும். அவருக்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது." எனக் கூறினார்.

 
இந்த வீடியோவால் தன்பத் சிங்கின் வேலையே காலியாகும் நிலைக்குச் சென்றுள்ளது. இந்த வீடியோ எடுக்கப்பட்டு 3 மாதங்கள் ஆன நிலையில் தற்போது திடீரென வைரலாகியுள்ளது. அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக